வாகனங்களின் விலையை உயர்த்தியது ஹீரோ மோட்டார் கார்ப்

Written By:

இரு சக்கர வாகன தயாரிப்பில் இந்தியாவில் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டார் கார்ப் லிமிடெட், தனது தயாரிப்புகளுக்கான விலையை உயர்த்தியுள்ளது.

வாகனங்களின் விலையை உயர்த்தியது ஹீரோ மோட்டார் கார்ப்

சென்ற திங்கள் முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஹீரோ தயாரிப்புகளுக்கான புதிய பட்டியலில், வாகனங்களின் மாடல்களுக்கு ஏற்ப விலை ரூ.500 முதல் ரூ.2,200 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

வாகனங்களின் விலையை உயர்த்தியது ஹீரோ மோட்டார் கார்ப்

உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு, உட்பொருட்களின் விலையில் காணப்படும் ஏற்றம் ஆகியவையே வாகனங்களின் விலை உயர்விற்கு காரணம் என ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாகனங்களின் விலையை உயர்த்தியது ஹீரோ மோட்டார் கார்ப்

கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய விலை பட்டியலில் ஹீரோவின் தயாரிப்புகளுக்கு ஏற்றவாறு விலை ரூ.500 முதல் ரூ.2,200 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக ஹீரோவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

வாகனங்களின் விலையை உயர்த்தியது ஹீரோ மோட்டார் கார்ப்

ஹீரோ நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களை பொறுத்தவரை அடிப்படை மாடலாக ஹெச்.எஃப். டான் பைக் உள்ளது இதனுடைய விலை ரூ.40,000. அதேபோல இந்நிறுவனத்தின் உயர் ரக மாடலாக கரிஸ்மா இசட்.எம்.ஆர் மோட்டார் சைக்கிள் உள்ளது. இதனுடைய விலை ரூ.1 லட்சம்.

வாகனங்களின் விலையை உயர்த்தியது ஹீரோ மோட்டார் கார்ப்

கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஹீரோ நிறுவனம் 6,12,739 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்தது. இதே நிலையை தற்போதைய ஆண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.49 சதவீதம் குறைவாக உள்ளது.

வாகனங்களின் விலையை உயர்த்தியது ஹீரோ மோட்டார் கார்ப்

அதன்காரணமாக ஏப்ரல் 2017ம் ஆண்டில் ஹீரோ நிறுவனம் 5,91,306 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் புதியதாக விலை பட்டியலை நிர்ணயம் செய்ய இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்று ஆட்டோ மொபைல் உலகம் தகவல் தெரிவிக்கிறது.

வாகனங்களின் விலையை உயர்த்தியது ஹீரோ மோட்டார் கார்ப்

மேலும் விலை உயர்த்தப்பட்டாலும், ஏப்ரல் மாதத்தில் சரிந்துள்ள வியாபாரத்தை ஈடுசெய்ய, இம்மாதத்தை தான் ஹீரோ நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

வாகனங்களின் விலையை உயர்த்தியது ஹீரோ மோட்டார் கார்ப்

இம்மாதம் சுபமுகூர்த்த தினம் அதிகமாகவுள்ளதால், மாப்பிள்ளைகளுக்கு பரிசளிக்க பெண் வீட்டார் பெரும்பாலும் ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்புகளையே வாங்குவர். இது பல ஆண்டுகாலமாக உள்ள வாடிக்கை.

வாகனங்களின் விலையை உயர்த்தியது ஹீரோ மோட்டார் கார்ப்

இந்த ஒரு தந்திரத்தை பயன்படுத்திக்கொண்டு, விலை ஏற்றத்தை லாபகரமாக மாற்றிக்கொள்ள ப்ரோமோஷன் யுக்திகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது ஹீரோ மோட்டார் காப் நிறுவனம்.

மேலும்... #ஹீரோ #hero
English summary
Honda Motorcorp hikes Prices of Motorcycles ranging from Rs 500 to Rs 2,200. Click for details...
Story first published: Wednesday, May 3, 2017, 11:27 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark