அடுத்தடுத்து களமிறங்கும் 3 புதிய மாடல் ஸ்கூட்டர்கள்.... ஹோண்டாவை மிரட்டும் முன்னாள் நண்பன் ஹீரோ..!!

Written By:

நடைபெற்று வரும் நிதியாண்டின் நான்காவது பருவத்தில் ஹீரோ நிறுவனம் 125சிசி திறன் பெற்ற 3 புதிய மாடல் ஸ்கூட்டர்களை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
ஹோண்டாவை வீழ்த்த ஹீரோ வெளியிடும் 3 புதிய மாடல் ஸ்கூட்டர்கள்!

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள ஹீரோ நிறுவனம், ஹோண்டாவிற்கு போட்டியாக இந்த புதிய மாடல் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது.

ஹோண்டாவை வீழ்த்த ஹீரோ வெளியிடும் 3 புதிய மாடல் ஸ்கூட்டர்கள்!

ஹீரோவின் 3 புதிய ஸ்கூட்டர்களில் முதற்கட்டமாக இரண்டு மாடல்கள், 2018 இறுதியில் அல்லது 2019 தொடக்கத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது.

ஹோண்டாவை வீழ்த்த ஹீரோ வெளியிடும் 3 புதிய மாடல் ஸ்கூட்டர்கள்!

ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி, ஹீரோ ப்ரீமியம் தரத்தில் மோட்டர் சைக்கிள் ஒன்றையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Recommended Video
TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ஹோண்டாவை வீழ்த்த ஹீரோ வெளியிடும் 3 புதிய மாடல் ஸ்கூட்டர்கள்!

200சிசி தரத்தில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் போலவே ஹீரோ தயாரிக்கும் புதிய மோட்டார் சைக்கிளின் தொழில்நுட்பம் இருக்கும்.

ஹோண்டாவை வீழ்த்த ஹீரோ வெளியிடும் 3 புதிய மாடல் ஸ்கூட்டர்கள்!

வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட ஹீரோவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் முன்ஜால் பேசும்போது,

"ஹீரோ ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. ப்ரீமியம் தரம் பெற்ற மற்றும் ஸ்கூட்டர்கள் செக்மெண்டுகளில் ஹீரோவின் அடுத்தடுத்த தயாரிப்புகள் இருக்கும்" என கூறியுள்ளார்.

ஹோண்டாவை வீழ்த்த ஹீரோ வெளியிடும் 3 புதிய மாடல் ஸ்கூட்டர்கள்!

இந்திய சந்தையை பொறுத்தவரை ஹீரோவின் மாஸ்ட்ரோ எட்ஜ், டூயட் (110சிசி) மற்றும் பிளெஷர் (100சிசி) போன்ற ஸ்கூட்டர்கள் அதிக விற்பனையை சந்தித்து வருகின்றன.

ஹோண்டாவை வீழ்த்த ஹீரோ வெளியிடும் 3 புதிய மாடல் ஸ்கூட்டர்கள்!

கிட்டத்தட்ட மூன்று வித ஹீரோவின்மாடல்கள் முன்னணி விற்பனையை அடைந்து வரும் நிலையில், கூடுதலாக வெளிவரும் மாடல்கள் மேலும் ஸ்கூட்டர் செக்மெண்டில் வலுசேர்க்கும் என அந்நிறுவனம் நினைக்கிறது.

ஹோண்டாவை வீழ்த்த ஹீரோ வெளியிடும் 3 புதிய மாடல் ஸ்கூட்டர்கள்!

இந்தியாவின் டாப் விற்பனை பெறும் ஸ்கூட்டர்களில் ஹீரோ போட்டியாக நினைக்கும் ஹோண்டா நிறுவனத்தின் 5 மாடல் ஸ்கூட்டர்கள் முன்னிலை வகிக்கின்றன.

ஹோண்டாவை வீழ்த்த ஹீரோ வெளியிடும் 3 புதிய மாடல் ஸ்கூட்டர்கள்!

இதன் மூலம் ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இந்தியாவின் ஸ்கூட்டர் விற்பனையில் கிட்டத்தட்ட 60 சதவீதம் லாபம் ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டாவை வீழ்த்த ஹீரோ வெளியிடும் 3 புதிய மாடல் ஸ்கூட்டர்கள்!

ஸ்கூட்டர் விற்பனையில் டாப் நிலையில் ஹோண்டாவிற்கு பிறகு டிவிஎஸ் 2 வது இடத்தையும், ஹீரோ 3 மூன்றாவது இடத்தையும் முறையே பெறுகின்றன.

ஹோண்டாவை வீழ்த்த ஹீரோ வெளியிடும் 3 புதிய மாடல் ஸ்கூட்டர்கள்!

ஹீரோவும் ஹோண்டாவும் கைக்கோர்த்து முன்னொரு காலத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறையையே ஆட்சி செலுத்தின.

ஹோண்டாவை வீழ்த்த ஹீரோ வெளியிடும் 3 புதிய மாடல் ஸ்கூட்டர்கள்!

ஆனால் இரு நிறுவனங்களும் பங்குகளை பிரித்து வேறுவேறு நிறுவனங்களான பின், அதே துறையில் எதிரெதிர் துருவங்களாக நிற்கின்றன.

ஹோண்டாவை வீழ்த்த ஹீரோ வெளியிடும் 3 புதிய மாடல் ஸ்கூட்டர்கள்!

இருந்தாலும் இந்தியாவில் ஒரு இந்தியாவை சேர்ந்த நிறுவனம் தான் சார்ந்திருக்கும் துறையில் ஆட்சி செலுத்தவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை என்பது ஆட்டோமொபைல் வல்லுநர்கள் கருத்தாக உள்ளது.

மேலும்... #ஹீரோ #hero
English summary
Read in Tamil: Hero MotoCorp To Launch Three Scooters To Rival Honda. Click for More...
Story first published: Monday, August 14, 2017, 13:33 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos