சமூக அக்கறையில் ஹீரோ: பெண் காவலர்களுக்கு பிரத்யேகமாக டிசைன் செய்த 159 ஸ்கூட்டர்கள் பரிசு...!!

Written By:

தமிழகத்தில் பெண் காவலர்களுக்கு வாகனங்கள் வாங்குவது குறித்து இன்னும் பேச்சு வார்த்தையிலே இருக்க, அண்டை மாநிலம் தெலங்கானாவில் அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பெண் காவலர்களுக்கு ஹீரோ வழங்கிய பிரத்யேக பரிசு..!!

தெலங்கானாவில் உள்ள சில முக்கிய காவல் நிலையங்களின் பெண் கான்ஸ்டபிள்களுக்கு ஹீரோ நிறுவனத்தின் இலகு ரக பிளெஷர் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

பெண் காவலர்களுக்கு ஹீரோ வழங்கிய பிரத்யேக பரிசு..!!

பெண்கள் எளிதில் கையாளக்கூடிய வடிவமைப்புகளுடன் சைரன், நேவிகேஷன் அமைப்பு, PA என்று சொல்லப்படும் பப்ளிக் அட்ரெஸ் சிஸ்டம், ரோந்து பணிகள் ஆகியவற்றுக்கான பிரத்யேக தேவைகளை இந்த ஸ்கூட்டர்கள் கொண்டுள்ளது.

Recommended Video - Watch Now!
TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
பெண் காவலர்களுக்கு ஹீரோ வழங்கிய பிரத்யேக பரிசு..!!

சமீபகாலமாக பெண்களின் பாதுகாப்புக்காக தெலங்கானா மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில் ஒன்று தான் ‘SheTeam' குழு.

பெண் காவலர்களுக்கு ஹீரோ வழங்கிய பிரத்யேக பரிசு..!!

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த குழு, அம்மாநிலம் முழுவதும் உள்ள சில பெண் காவலர்களின் மேற்பார்வையில் செயல்படுகிறது.

பெண் காவலர்களுக்கு ஹீரோ வழங்கிய பிரத்யேக பரிசு..!!

‘SheTeam' குழுவில் உள்ள பெண் காவலர்கள், குற்ற சம்பவங்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவே இந்த ஸ்கூட்டர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெலங்கானா அரசு தெரிவிக்கிறது.

பெண் காவலர்களுக்கு ஹீரோ வழங்கிய பிரத்யேக பரிசு..!!

இதற்காக நடைபெற்ற விழாவில் தெலங்கானா மாநில ஆணையர் , ஹைதராபாத் நகர ஆணைய உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தின் விஜய் சேத்தியும் பங்கேற்றார்.

பெண் காவலர்களுக்கு ஹீரோ வழங்கிய பிரத்யேக பரிசு..!!

நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஹீரோ நிறுவனம் தெலங்கானாவோடு இணைந்து எடுக்கும் இந்த முயற்சி மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

பெண் காவலர்களுக்கு ஹீரோ வழங்கிய பிரத்யேக பரிசு..!!

பிறகு பெண் காவலர்களுக்காக பிரதேயாகமாக உருவாக்கப்பட்ட மொத்தம் 159 ஹீரோ பிளெஷர் டூயட் ஸ்கூட்டர்களின் சாவியை அம்மாநில முதன்மை காவல்துறை அதிகாரிகளிடம் விஜய் சேத்தி ஒப்படைத்தார்.

பெண் காவலர்களுக்கு ஹீரோ வழங்கிய பிரத்யேக பரிசு..!!

நிகழ்ச்சியின் போதே159 ஹீரோ பிளெஷர் டூயட் ஸ்கூட்டர்களில், 70 ஸ்கூட்டர்கள் ஹைதராபாத்திற்கும், 50 ஸ்கூட்டர்கள் சைபராபாத் நகரத்திற்கும், மீதி ஸ்கூட்டர்கள் ரச்சகொன்டா நகரத்திற்கும் அப்போதே பிரித்து தரப்பட்டன.

பெண் காவலர்களுக்கு ஹீரோ வழங்கிய பிரத்யேக பரிசு..!!

மேலும் ஸ்கூட்டர் ஓட்டத்தெரியாத பெண் காவலர்கள் சிலருக்கு அதை ஓட்டுவதற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பையும் தெலங்கானா காவல் துறை அறிவித்துள்ளது.

பெண் காவலர்களுக்கு ஹீரோ வழங்கிய பிரத்யேக பரிசு..!!

ஹீரோ நிறுவனத்திடம் கூட்டு வைத்துள்ள இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றன.

பெண் காவலர்களுக்கு ஹீரோ வழங்கிய பிரத்யேக பரிசு..!!

கடந்த ஆண்டில் ஹரியான மாநிலத்திற்கு 100 ஸ்கூட்டர்கள், உத்தரகாண்டிற்கு 250 ஸ்கூட்டர்கள் என பெண் காவலர்களுக்கு ஏற்கனவே ஹீரோ நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.

பெண் காவலர்களுக்கு ஹீரோ வழங்கிய பிரத்யேக பரிசு..!!

இந்தியாவின் வளர்ந்த, வளர்ந்து வரும் நகரங்களில் எல்லாம் அந்தந்த மாநில காவல்துறையோடு சேர்ந்து பெண்கள் பாதுகாப்பிற்காக ஹீரோ நிறுவனம் எடுத்து வரும் இந்த முயற்சி எப்போது தமிழகத்திற்கு வரும் என்று தெரியவில்லை.

மேலும்... #ஹீரோ #hero
English summary
Read in Tamil: Hero MotoCorp Presents Over 150 Scooters To Telangana Women Police Officers. Click for Details...
Story first published: Saturday, August 19, 2017, 10:58 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark