ஹீரோ எக்ஸ்ப்ல்ஸ் அட்வென்ச்சர் கான்செப்ட் பைக் அறிமுகம்: விபரம்!

Written By:

மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய அட்வென்ச்சர் ரக கான்செப்ட் பைக் மாடலை காட்சிக்கு வைத்துள்ளது. இந்த பைக் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
ஹீரோ எக்ஸ்ப்ல்ஸ் அட்வென்ச்சர் கான்செப்ட் பைக் அறிமுகம்!

ஹீரோ எக்ஸ்பல்ஸ் கான்செப்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய மாடல் ஏற்கனவே விற்பனையில் இருந்த இம்பல்ஸ் பைக்கின் டிசைன் தாத்பரியங்களை கொண்டிருக்கிறது. இந்த பைக் மூலமாக சாகச ரக மோட்டார்சைக்கிள் செக்மென்ட்டில் களமிறங்க இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.

ஹீரோ எக்ஸ்ப்ல்ஸ் அட்வென்ச்சர் கான்செப்ட் பைக் அறிமுகம்!

இந்த புதிய அட்வென்ச்சர் ரக பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், பனி விளக்குகள் மற்றும் எல்இடி டெயில்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. முன்புறத்தில் லாங் டிராவல் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பு இருக்கிறது.

Recommended Video
[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
ஹீரோ எக்ஸ்ப்ல்ஸ் அட்வென்ச்சர் கான்செப்ட் பைக் அறிமுகம்!

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் ஆகியவை முக்கிய அம்சங்கள். ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எஞ்சின் கார்டு, க்ராஷ் கார்டுகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆஃப்ரோடு டயர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ஹீரோ எக்ஸ்ப்ல்ஸ் அட்வென்ச்சர் கான்செப்ட் பைக் அறிமுகம்!

பைக்கை பார்வைக்கு கொண்டு வந்துவிட்டாலும், இந்த பைக்கில் இருக்கும் எஞ்சின் குறித்த தகவல்களை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிடவில்லை. அதேநேரத்தில், இந்த பைக்கில் 250சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்பது கணிப்பு.

ஹீரோ எக்ஸ்ப்ல்ஸ் அட்வென்ச்சர் கான்செப்ட் பைக் அறிமுகம்!

இந்த பைக் எஞ்சின் அதிகபட்சமாக 20 பிஎஸ் பவரையும், 18 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய எக்ஸ்பல்ஸ் பைக் சந்தைக்கு வர இருக்கிறது.

ஹீரோ எக்ஸ்ப்ல்ஸ் அட்வென்ச்சர் கான்செப்ட் பைக் அறிமுகம்!

இந்த புதிய பைக் மாடலுடன் ரெய்டு டி ஹிமாலயா ராலி பந்தயத்தில் பங்கேற்கும் திட்டமும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திடம் உள்ளது. 2018 டக்கார் ராலியில் பங்கேற்க இருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையிலிருந்து கிடைக்கும் அனுபவங்களை வைத்து புதிய ஸ்போர்ட்ஸ் பைக்குகளையும், கான்செப்ட் மாடல்களையும் தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஹீரோ எக்ஸ்ப்ல்ஸ் அட்வென்ச்சர் கான்செப்ட் பைக் அறிமுகம்!

மேலும், வெளிநாடுகளில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கும் இதுபோன்ற புதிய ரக மாடல்களை தயாரிப்பதில் ஹீரோ மோட்டோகார்ப் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.

இஐசிஎம்ஐ மோட்டார்சைக்கிள் கண்காட்சி செய்திகள்!

English summary
Hero Xpulse Adventure Concept At EICMA.
Story first published: Tuesday, November 7, 2017, 20:33 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos