இந்தியாவில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, பழைய மாடல் 10 பைக்குகளின் உற்பத்தியை நிறுத்தியது ஹீரோ..!!

Written By:

இந்தியாவின் இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஹீரோ மோட்டார் கார்ப், விற்பனையில் சோபிக்காத தனது 10 மாடல் பைக்குகளுக்கான உற்பத்தியை நிறுத்தி உள்ளது.

10 மாடல் பைக்குகளின் உற்பத்தியை நிறுத்தியது ஹீரோ நிறுவனம்..!

இருசக்கர வாகன தயாரிப்பில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருப்பது ஹீரோ மோட்டார் கார்ப். தனது வரவேற்பு பெற்ற மாடல்களை பி.எஸ்.4 மாசு விதிகளுக்கு ஏற்ப ஹீரோ மேம்படுத்திவிட்டது.

10 மாடல் பைக்குகளின் உற்பத்தியை நிறுத்தியது ஹீரோ நிறுவனம்..!

ஆனால், ஆர், ஹங்க், கிளாமர் எஃப்.ஐ, இக்னீட்டர், பேஷன் எக்ஸ். ப்ரோ, பேஷன் ப்ரோ டி.ஆர், எக்ஸ்ட்ரீம், எச்.எஃப் டான், ஸ்ப்ளெண்டர் ஐ ஸ்மார்ட், ஸ்ப்ளெண்டர் ப்ரோ கிளாசிக் போன்ற பைக்குகளை ஹீரோ அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டது.

10 மாடல் பைக்குகளின் உற்பத்தியை நிறுத்தியது ஹீரோ நிறுவனம்..!

குறைவான விற்பனை காரணமாகவே ஹீரோ மேலே குறிப்பிட்ட பத்து பைக்குகளை மேம்படுத்தாமல் இருந்தது. இதனாலே அந்நிறுவனம் அதற்கான உற்பத்தியை நிறுத்திவிட்டதாக காரணம் சொல்லப்படுகிறது.

10 மாடல் பைக்குகளின் உற்பத்தியை நிறுத்தியது ஹீரோ நிறுவனம்..!

ஹீரோ, உற்பத்தி பணிகளை நிறுத்திவிட்டதாக அறிவித்த எக்ஸ்ட்ரீம் மற்றும் ஹங்க் போன்ற பைக்குகளுக்கு மாற்றாக அச்சீவர் மற்றும் எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் என இருசக்கர வாகனங்கள் விற்பனையில் உள்ளன.

10 மாடல் பைக்குகளின் உற்பத்தியை நிறுத்தியது ஹீரோ நிறுவனம்..!

அதேபோல ஸ்பெளண்டர் ஐ ஸ்மார்ட் 100 பைக்கிற்கு பதிலாக, புதியதாக வடிவமைப்பட்ட 110சிசி ஐ ஸ்மார்ட் உள்ளது. மேலும் கரிஷ்மாவிற்கு மாற்றாக ஹெச்.எக்ஸ் 250 ஆர், எக்ஸ்ட்ரீம் 200 எஸ் போன்ற பைக்குகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 மாடல் பைக்குகளின் உற்பத்தியை நிறுத்தியது ஹீரோ நிறுவனம்..!

இதேபோல, முன்னர் விற்பனையில் இருந்த கிளாமர் பைக்கிற்கு பதிலாக வடிவமைப்பு, திறன் மற்றும் தோற்றத்தில் புதுமையாக்கப்பட்ட கிளாமர் எஸ்.வி பைக்கை ஹீரோ அறிமுகப்படுத்தியுள்ளது.

10 மாடல் பைக்குகளின் உற்பத்தியை நிறுத்தியது ஹீரோ நிறுவனம்..!

ஹீரோ நிறுவனத்தின் இந்த அறிவிப்புகள் மற்றும் அறிமுகங்களுக்கு பிறகு, முற்றிலும் புதிய ஆறு மாடல் பைக்குகளை விரைவில் அந்நிறுவனம் இந்தியாவில் களமிறக்கவுள்ளது.

10 மாடல் பைக்குகளின் உற்பத்தியை நிறுத்தியது ஹீரோ நிறுவனம்..!

இதற்காக ஜெய்ப்பூரில் உள்ள ஹீரோவின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் (Centre for Innovation and Technology (CIT)) ரூ. 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் அதற்கான பணிகள் நடைபெற உள்ளன.

10 மாடல் பைக்குகளின் உற்பத்தியை நிறுத்தியது ஹீரோ நிறுவனம்..!

தொடர்ந்து புதிய மாற்றங்களை ஹீரோ கொண்டு வந்தாலும், செயல்திறனை பொருத்தவரை ஹீரோவின் தயாரிப்புகள் இன்னும் குறைவான மதிப்புகளை தான் பெற்று வருகின்றன. ஆனால் அதே சமயத்தில் ஹீரோ தயாரிக்கும் ஸ்கூட்டர் மாடல்களுக்கு பெரியளவில் சந்தை மதிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ஹீரோ #hero
English summary
Hero MotoCorp is on discontinuing all the two wheelers which are not doing good numbers in its line-up. Click for Details...
Story first published: Monday, June 5, 2017, 13:46 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos