ஹோண்டா 2017 டியோ: நிறம், வலிமை, புதுமை எல்லாம் எக்ஸ்ட்ரா... எக்ஸ்ட்ரா...

Written By:

இந்திய சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாகனமாக இருந்த மேம்படுத்தப்பட்ட ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. கவனித்தக்க அசத்தலான தோற்றம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய ஹோண்டா டியோவின் விலை ரூ. 49,132.

மேம்படுத்தப்பட்ட ஹோண்டா டியோ விற்பனைக்கு வந்தது

மத்தியரசின் உத்தரவு படி சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பி.எஸ். 4 எஞ்சின், எல்லா நேரமும் இயங்கும் அட்டொமேட்டிக் முகப்பு விளக்கு தொழில்நுட்பம் (Automatic Headlights On) போன்றவற்றுடன் புதிய டியோ ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஹோண்டா டியோ விற்பனைக்கு வந்தது

இந்திய சந்தையில் டியோ ஸ்கூட்டர் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, அதை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் மஞ்சள், ஈர்ப்புள்ள ஆரஞ்ச், ஸ்போர்ட்ஸ் ரெட், மெட்டாலிக் க்ரே மற்றும் கேடி ஜாஸ் ப்ளூ ஆகிய நிறங்களில் தற்போது புதிய டியோ அறிமுகமாகியுள்ளது. இதனால் இந்த மோட்டோ- ஸ்கூட்டர் முன்பை விட பார்க்க அசத்தலாக உள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஹோண்டா டியோ விற்பனைக்கு வந்தது

முன்பில்லாத அதிக நிறங்களில் டியோ வெளிவர காரணம், இந்திய சந்தையில் டியோவிற்கான வாடிக்கையாளர்களாக இளம் தலைமுறையினரை தான் ஹோண்டா நினைக்கிறது. அவர்களின் தற்போதையே தேவைகளையும், விருப்பங்களையும் நன்றாக ஆராய்ந்து பிறகே புதிய டியோவை நிறத்தில் கூட மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஹோண்டா டியோ விற்பனைக்கு வந்தது

109.1சிசி-ல் உருவாக்கப்பட்டுள்ள இதன் எஞ்சின், 8 பி.எச்.பி பவர் மற்றும் 8.91 என்.எம் டார்க் திறனை வழங்கும். ஆற்றலை சக்கரத்துக்கு எடுத்துச் செல்ல சிவிடி ஆட்டோ கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. 103 கிலோ கிராம் கொண்ட டியோவில் சிபிஎஸ் என்கிற காம்பி பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஹோண்டா டியோ விற்பனைக்கு வந்தது

பார்க்க அசத்தலாகவும், உருவாக்கத்தில் எளிமையும் கொண்டுள்ள புதிய டியோவிற்கு போட்டியாக இந்திய சந்தையில் யமஹா நிறுவனத்தின் ரேஸர் ஸ்கூட்டர் பார்க்கப்படுகிறது.

இரண்டு தயாரிப்புகளுமே ஒரே முகப்பு விளக்கு மாடல்களைக் கொண்டுள்ளதான் காரணமாக அதுவே, டியோ மற்றும் ரேஸருக்கு போட்டியாக அமையலாம் என ஆட்டோமொபைல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேம்படுத்தப்பட்ட ஹோண்டா டியோ விற்பனைக்கு வந்தது

யமஹா ரேஸர், ஹோண்டா டியோவிற்கு போட்டியாக இருந்தாலும், தற்போது மேம்படுத்த வடிவில் அதிக நிறங்களைக்கொண்டு டியோ வெளியாகியிருப்பது சந்தையில் அதற்கான பலத்தை இன்னும் கூட்டியுள்ளது.

English summary
2017 Honda Dio has lauched, Under central government guidance, 2017 dio has updated with BSIV engine, AHO system.
Story first published: Monday, March 27, 2017, 13:26 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more