பிஎஸ்-4 இஞ்சினுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் ரூ.47,913 விலையில் அறிமுகம்..!

Written By:

பிஎஸ்-4 தர இஞ்சின், ஆட்டோமேடிக் ஹெட்லைட்டுடன், புதிய டிசைன் பரிபாலனைகளுடன் மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஆக்டிவா-ஐ ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா மோட்டார்சைக்கிள் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம்.

மேம்படுத்தப்பட்ட 2017ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் அறிமுகம்..!

புதிய ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் கவர்ச்சிகரமான தோற்றத்தை கொண்டுள்ளது. புதிதாக டூயல் டோன் பெயிண்டிங்கில் இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகியுள்ளது.

மேம்படுத்தப்பட்ட 2017ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் அறிமுகம்..!

பெண் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மிகவும் ஸ்லீக்கான வகையில் எடை குறைவாகவும், காம்பாக்ட் டிசைனிலும் புதிய 2017 ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் வெளிவாகியுள்ளது.

சிறப்புகள்

சிறப்புகள்

புதிய ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டரில் பாரத் ஸ்டேஜ்-4 தர மாசு உமிழ்வு சான்று பெற்ற 110சிசி இஞ்சின் உள்ளது.

சிறப்புகள்

சிறப்புகள்

மேலும் ஆட்டோமேடிக் ஹெட்லைட், டூயல் டோன் பெயிண்டிங் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது.

சிறப்புகள்

சிறப்புகள்

புதிய ஆக்டிவா-ஐ ஸ்கூட்டரில் டியூப்லெஸ் டயர்கள், ஈக்குவலைசருடன் கூடிய காம்பி பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சிறப்புகள்

சிறப்புகள்

இருக்கைக்கு கீழ் உள்ள சேமிப்பு வசதி 18 லிட்டர்கள் அளவு கொண்டதாக இருப்பதால் அதிக பொருட்களை இதில் சிரமமின்றி வைத்துக்கொள்ளலாம்.

சிறப்புகள்

சிறப்புகள்

புதிய கிராஃபிக்ஸ், பாடி கலர் ரியர் வியூ கண்ணாடிகள், ரீடிசைன் செய்யப்பட்ட பின்பிற விளக்கு ஆகிவையும் உள்ளன.

மொபைல் சார்ஜிங்

மொபைல் சார்ஜிங்

இருக்கைக்கு கீழ் உள்ள சேமிப்பு வசதி பகுதியில் மொபைல் சார்ஜிங் யூனிட் கிடைக்கிறது. இதனால் வண்டியை ஓட்டும் போதே மொபைலை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

இஞ்சின்

இஞ்சின்

மேம்படுத்தப்பட்ட ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டரில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 109சிசி ஏர் கூல்டு பிஎஸ் தர இஞ்சின் உள்ளது.

இஞ்சின்

இஞ்சின்

இது அதிகபட்சமாக 8 ஹச்பி ஆற்றலையும், 8.94 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் வி-மேடிக் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

மேம்படுத்தப்பட்ட 2017ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் அறிமுகம்..!

ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 83 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாகும். இதில் 5.3 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்டோல் டேங்க் உள்ளது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் 5 புதிய வண்ணங்களில் கிடைக்கிறது.

  • ஆர்சிட் பர்பிள் மெட்டாலிக் (Purple)
  • லஷ் மெகண்டா மெட்டாலிக் (Magenta)
  • நியோ ஆரஞ்சு மெட்டாலிக் (Orange)
  • பிளாக் (Black)
  • இம்பீரியல் ரெட் மெட்டாலிக் (Red)
விலை

விலை

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் ரூ.47,913 ( டெல்லி, எக்ஸ்ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.

லைலேஜ்

லைலேஜ்

ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் லிட்டருக்கு 60 கிமீ லைலேஜ் தருவதாக ஹோண்டா நிறுவனம் கூறுகிறது.

மேம்படுத்தப்பட்ட 2017ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் அறிமுகம்..!

ஆக்டிவா பிராண்டுக்கு கீழ் ஆக்டிவா-ஐ, ஆக்டிவா 4ஜி மற்றும் ஆக்டிவா125 ஆகிய 3 மாடல்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

மேம்படுத்தப்பட்ட 2017ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் அறிமுகம்..!

ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் 110சிசி செக்மெண்டில் உள்ள சுசுகி லெட்ஸ், டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட் மற்றும் ஹீரோ பிளெஷர் ஆகிய மாடல்களுடன் போட்டியில் உள்ளது.

மேம்படுத்தப்பட்ட 2017ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் அறிமுகம்..!

மேம்படுத்தப்பட்ட ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் மூலமாக தனது ஆக்டிவா பிராண்டை ஆட்டோமேடிக் ஸ்கூட்டர் பிரிவில் முதன்மையானதாக ஆக்க ஹோண்டா நிறுவனம் எண்ணியுள்ளது.

மேம்படுத்தப்பட்ட 2017ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் அறிமுகம்..!

கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் விற்பனையான இருசக்கர வாகனம் என்ற அந்தஸ்தை ஹோண்டா ஆக்டிவா பிராண்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about honda activa-i launched with bs4 and aho in india. price, mileage, colors and more details.
Story first published: Friday, April 28, 2017, 11:12 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark