மேம்படுத்தப்பட்ட ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டர் அறிமுகம்!

Written By:

சுற்றுச்சுழலுக்கு கேடு ஏற்படுத்தாத பி.எஸ் 4 எஞ்சின் மற்றும் தானாக ஓளிரும் முகப்பு விளக்கு தொழில்நுட்பத்தை கொண்டு ஹோண்டாவின் மேம்படுத்தப்பட்ட ஏவியட்டர் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டர் அறிமுகம்

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் முகப்பு விளக்கு தானாகவே ஒளிரும் தொழில்நுட்பம் (AHO)மற்றும் சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்காத பி.எஸ் 4 எஞ்சின் ஆகியவற்றை கொண்டுதான் இனி இந்தியாவில் இருச்சக்கர வாகனங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது

மேம்படுத்தப்பட்ட ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டர் அறிமுகம்

மத்தியரசின் புதிய உத்தரவை ஏற்று, அது வரையறுத்துள்ள தொழில்நுட்பத்தில் முதல் வாகனமாக வெளிவந்துள்ளது ஹோண்டாவின் ஏவியேட்டர் ஸ்கூட்டர். கிட்டத்தட்ட ஐந்து தொழில்நுட்ப முறைகளில் உருவாக்கப்பட்டுள்ள ஏவியேட்டர், மேம்படுத்தப்பட்ட மாடலாக ஹோண்டா வெளியிட்டுள்ளது

மேம்படுத்தப்பட்ட ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டர் அறிமுகம்

ஏற்கனவே பழைய ஏவியேட்டர் ஸ்கூட்டர்களில் பொருத்தப்பட்டு இருக்கும் எஞ்சின்கள் தான் இதில் உள்ளன, ஆனால் அவை அனைத்தும் பி.எஸ் 4 எஞ்சின்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த எஞ்சின்கள் 109.19CC-யில் 8 ஹெச்.பி பவரை வழங்கும், மேலும் சிவிடி தொழில்நுட்பத்தில் இயங்கும் இதன் கியர்பாக்ஸ் 8.94 டார்க் திறனை தரும்.

மேம்படுத்தப்பட்ட ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டர் அறிமுகம்

ஏவியேட்டர் ஸ்கூட்டர், ஹோண்டாவின் சுற்றுச்சுழலை பாதுகாக்கும் Honda Eco Technology என்ற தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் சேமிப்பு மற்றும் குறைந்த தொலைவிலே நிதானமான பிரேக் எடுக்ககூடிய வசதிகளை தரும் வகையில் Honda Eco Technologyயின் பயன்பாடு உள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டர் அறிமுகம்

மத்தியரசு உத்தரவின் படி தயாரிக்கப்பட்டுள்ள ஏவியேட்டர் ஸ்கூட்டரின் விலை ரூ.52,077 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விலை பட்டியல்

விலை பட்டியல்

  • டிரம் பிரேக் பொருத்தப்பட்ட மாடல : ரூ. 51,637
  • டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்ட மாடல் : ரூ. 56,983
  • பி.எஸ் 4 எஞ்சின் பெற்ற டிரம் பிரேக் மாடல் : ரூ.52,077
  • பி.எஸ் 4 எஞ்சின், டிரம் பிரேக், அலாய் வீல்கள் பொருத்தப்பட்ட மாடல் : ரூ.54,022
  • பி.எஸ் 4 எஞ்சின் கொண்ட டிஸ்க் பிரேக் பெற்ற மாடல் : ரூ. 56,544
English summary
Honda has updated the Aviator with BS-IV and AHO and is now available with a choice of five variants.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark