புதிய ஹோண்டா சிபி125ஆர் பைக் அறிமுகம்: படங்கள், தகவல்கள்!

Written By:

புதிய ஹோண்டா சிபி125ஆர் பைக் மிலன் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 புதிய ஹோண்டா சிபி125ஆர் பைக் அறிமுகம்: படங்கள், தகவல்கள்!

ஹோண்டா நிறுவனத்தின் சிபி வரிசையிலான 125ஆர், 300ஆர், 1000ஆர் ஆகிய மூன்று மாடல்களும் நியோ ஸ்போர்ட்ஸ் கஃபே ரேஸர் கான்செப்ட் பைக்கின் ஸ்டைலுக்கு மாறி இருக்கிறது. இதில், சிபி1000ஆர் பைக் மாடல் குறித்து பார்த்துவிட்டீர்கள். இந்த செய்தியில் சிபி125ஆர் பைக்கின் படங்கள், தகவவல்களை பார்க்கலாம்.

 புதிய ஹோண்டா சிபி125ஆர் பைக் அறிமுகம்: படங்கள், தகவல்கள்!

புதிய ஹோண்டா சிபி125ஆர் பைக்கிலும் எல்இடி ஹெட்லைட் இடம்பெற்று இருக்கிறது. இதனால், முகப்பு மிகவும் வசீகரமாக மாறி போயிருப்பதுடன், புதிய பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு, எஞ்சினுக்கு கீழாக கொடுக்கப்பட்டு இருக்கும் புதிய கவுல் அமைப்பும் மிரட்டலான தோற்றத்தை தருகிறது.

Recommended Video - Watch Now!
[Tamil] Honda CBR 650F Launched In India - DriveSpark
 புதிய ஹோண்டா சிபி125ஆர் பைக் அறிமுகம்: படங்கள், தகவல்கள்!

இந்த பைக்கில் புகைப்போக்கி வலது பக்க புட்ரெஸ்ட்டின் கீழாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. தோற்ற வசீகரத்துக்காக மட்டுமின்றி, நடைமுறை பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில், இந்த புதிய புகைப்போக்கி அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய ஹோண்டா சிபி125ஆர் பைக் அறிமுகம்: படங்கள், தகவல்கள்!

புதிய ஹோண்டா சிபி125ஆர் பைக் 125.8 கிலோ எடை கொண்டது. இந்த பைக்கில் 10.1 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த பைக்கில் இருக்கை அமைப்பு தரையிலிருந்து 816மிமீ உயரத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய ஹோண்டா சிபி125ஆர் பைக் அறிமுகம்: படங்கள், தகவல்கள்!

இந்த புதிய மாடலில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 13 பிஎச்பி பவரையும், 10 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

 புதிய ஹோண்டா சிபி125ஆர் பைக் அறிமுகம்: படங்கள், தகவல்கள்!

புதிய ஹோண்டா சிபி125ஆர் பைக்கின் முன்புறத்தில் 41மிமீ அளவுடைய அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்சக்கரத்தில் 296மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன.

 புதிய ஹோண்டா சிபி125ஆர் பைக் அறிமுகம்: படங்கள், தகவல்கள்!

இந்த பைக்கின் முன்புறத்தில் 110/70 ஆர்17 டயரும், பின்புறத்தில் 150/60 ஆர்17 டயரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. எல்இடி லைட்டுகள், எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இந்த பைக்கின் முக்கிய சிறப்புகள்.

 புதிய ஹோண்டா சிபி125ஆர் பைக் அறிமுகம்: படங்கள், தகவல்கள்!

மிக அருமையான டிசைன், நவீன தொழில்நுட்ப சிறப்புகள் கொண்ட இந்த பைக்கை இந்தியாவிலும் ஹோண்டா நிறுவனம் களமிறக்கினால், நிச்சயம் சிறப்பான வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.

இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சி செய்திகள்!

English summary
Honda CB125R revealed at EICMA 2017.
Story first published: Tuesday, November 7, 2017, 16:18 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark