யமஹா எஃப்இசட்25 மாடலுக்கு போட்டியாக ஹோண்டா சிபி டிவிஸ்டர் 250!

ஹோண்டாவின் புகழ்பெற்ற மாடலான டிவிஸ்டர்125ஐ தொடர்ந்து, டிவிஸ்டர்250சிசி பைக் தற்போது அறிமுகமாகியுள்ளது. இது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

இந்தியாவின் முன்னனி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்கி வரும் ஹோண்டா, தனது டிவிஸ்டர்125சிசி பைக்கை தொடர்ந்து, தற்போது புதிய டிவிஸ்டர்250 சிசி பைக்கை பிரேசில் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்து விரைவில் தெரியவரும்.

ஹோண்டா சிபி டிவிஸ்டர்250சிசி பைக் அறிமுகம்!

ஹோண்டாவின் போட்டி நிறுவனமான யமஹா நிறுவனம் எஃப்இசட்25 என்ற 250சிசி பைக்கை இந்தியாவில் சிறிது நாட்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. அதனால் அதற்கு போட்டியளிக்கும் விதமாக, இந்த புதிய டிவிஸ்டர் 250சிசி பைக்கை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஹோண்டா சிபி டிவிஸ்டர்250சிசி பைக் அறிமுகம்!

யமஹா எஃப்இசட்25 மாடலுக்கு தற்போது போட்டி இல்லாத சூழலில், ஹோண்டா நிறுவனம் தனது புதிய டிவிஸ்டர்250சிசி பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் பட்சத்தில் இந்த செக்மெண்ட்டில் யமஹா எஃப்இசட்25க்கு , ஹோண்டாவால் போட்டி ஏற்படும் நிலை உண்டாகும்.

ஹோண்டா சிபி டிவிஸ்டர்250சிசி பைக் அறிமுகம்!

டிவிஸ்டர் 250ல் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர், டூயல் சானல் ஏபிஎஸ் கொண்ட இருபக்க டிஸ்க் பிரேக்குகள், பின்புற எல்ஈடி விளக்கு ஆகியவை உள்ளது. இதன் ஏபிஎஸ் வேரியண்ட் 137 கிலோ, ஏபிஎஸ் அல்லாத வேரியண்ட் 135கிலோ எடையும் கொண்டது.

ஹோண்டா சிபி டிவிஸ்டர்250சிசி பைக் அறிமுகம்!

2,063 மிமீ நீளம், 753 மிமீ அகலம், 1,072மிமீ உயரம் கொண்ட இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 192மிமீ ஆகும். இதன் டேங்க் கொள்ளளவு 16.5 லிட்டர்கள் ஆகும். இதன் முன்புறம் 130மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ரியரில் 108மிமீ மோனோ ஷாக்

சஸ்பென்ஷன் கொண்டதாக உள்ளது.

ஹோண்டா சிபி டிவிஸ்டர்250சிசி பைக் அறிமுகம்!

அதிகபட்சமாக 22.4 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன்மிக்க, காற்றால் குளிர்விக்கக்கூடிய ஒற்றை சிலிண்டர் கொண்ட 249.5சிசி ஃபூயல் இஞ்செக்டட் எஞ்சின் இதில் உள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட டிவிஸ்டர் 250, பிரேசிலில் எத்தனால் எஞ்சின் வேரியண்ட்டிலும் கிடைக்கிறது.

ஹோண்டா சிபி டிவிஸ்டர்250சிசி பைக் அறிமுகம்!

17 இஞ்ச் அலாய் வீல்கள் கொண்டதாக வெளிவந்துள்ள டிவிஸ்டர்250யின் முன்பக்க டயரின் அளவு 110/70, ரியர் டயரின் அளவு 140/70 ஆக உள்ளது. யமஹா எஃப்இசட்25 பைக்கின் டயர்களும் இதே அளவிலானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா சிபி டிவிஸ்டர்250சிசி பைக் அறிமுகம்!

ஏற்கெனவே குறிப்பிட்டது போல இந்தியாவில் டிவிஸ்டர்250சிசி பைக்கின் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், இந்த மாடல் அறிமுகமாகும் பட்சத்தில் யமஹா எஃப்இசட்25 மாடலுக்கு அவை கடும்போட்டியாக விளங்கும்.

ஏப்ரிலியா எஸ்ஆர்150 பைக்கின் படங்கள் :

Most Read Articles
English summary
Powering the Honda CB Twister 250 is a 249.5cc OHC, single cylinder, air-cooled, fuel-injected engine.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X