ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக்கிற்கு தடாலடி தள்ளுபடி!

Written By:

நடுத்தர வகை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களில் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த மாடல் ஹோண்டா சிபிஆர் 650எஃப். கடந்த மார்ச் மாதம் பிஎஸ்-3 வாகனங்களுக்கு வந்த தடை காரணமாக, இந்த பைக்கிற்கு பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த பைக்கிற்கு மீண்டும் தடாலடியான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை காணலாம்.

ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக்கிற்கு தடாலடி தள்ளுபடி!

ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போது ரூ.7.30 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த பைக்கின் விலை ரூ.70,000 வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக்கிற்கு தடாலடி தள்ளுபடி!

தற்போது டெல்லியில் இந்த பைக் ரூ.6.57 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. மேலும், சென்னை, கோவை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் ரூ.6.67 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக்கிற்கு தடாலடி தள்ளுபடி!

ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 649சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 85 பிஎச்பி பவரையும், 63 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக்கிற்கு தடாலடி தள்ளுபடி!

இதனிடையே, ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடல் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், மேம்படுத்தப்பட்ட எஞ்சின் ஆகியவற்றுடன் புதிய வண்ணங்களிலும் கிடைக்கும்.

ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக்கிற்கு தடாலடி தள்ளுபடி!

புதிய மாடல் லிட்டருக்கு 21 கிமீ மைலேஜை தரும் என்று ஹோண்டா தெரிவிக்கிறது. மேலும், 211 கிலோ எடையுடன் வரும் இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இடம்பெற்றஇருக்கும்.

ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக்கிற்கு தடாலடி தள்ளுபடி!

தற்போது பல டீலர்களில் இருப்பு உள்ள மாடல்களுக்கு மட்டுமே இந்த விலை சலுகை பொருந்தும். விரைவில் வரும் 2017 மாடலுக்கு நிச்சயம் அதிக விலை நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Honda India's official website has been updated with revised prices and the CBR650F now costs Rs 6,57,620 ex-showroom (Delhi).
Story first published: Friday, June 9, 2017, 14:32 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark