இந்தியாவில் விற்பனையில் கொடிக்கட்டி பறக்கும் ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர்... ரகசியம் இதுதான்..!!

Written By:

அதிக எடை சுமக்கும் செகமென்டில் ஸ்கூட்டர்களை தயாரிக்க பெரும்பாலான நிறுவனங்கள் முன்வருவதில்லை.

ஆனால் ஹோண்டா அதை தைரியமாக செய்தது. இந்த செக்மென்டில் அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஸ்கூட்டர் தான் க்ளிக்.

இந்திய வாடிக்கையாளர்களின் வரவேற்பில் ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர்..!!

ஸ்டைல், தோற்றத்தில் கவர்ச்சி என்பதை எல்லாம் தாண்டி, நடைமுறைக்கு வேண்டிய முக்கிய அம்சங்களை மட்டும் கவனித்து அவற்றை கிளிக் ஸ்கூட்டரில் ஹோண்டா பொருத்தியிருந்தது.

இந்திய வாடிக்கையாளர்களின் வரவேற்பில் ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர்..!!

அதிக எடைக்கொண்ட ஸ்கூட்டர்கள் செக்மென்டில் கிளிக் வெற்றியடைந்ததா என்ற கேள்விக்கு ஹோண்டா இயக்குநர்களில் ஒருவரான டெட்சூயா கோமினி,

இந்திய வாடிக்கையாளர்களின் வரவேற்பில் ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர்..!!

ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தயாரித்த சுமார் 10,000 ஹோண்டா க்ளிக் ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகியுள்ளதாக கூறினார்.

Recommended Video - Watch Now!
[Tamil] TVS Jupiter Classic Launched In India - DriveSpark
இந்திய வாடிக்கையாளர்களின் வரவேற்பில் ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர்..!!

எதிர்பாராத இந்த வரவேற்பு கிடைக்கும் அளவிற்கு ஹோண்டா கிளிக் ஸ்கூட்டரில் உள்ள அமைப்புகள் தான் என்ன? முக்கியமாக நடைமுறைக்கு தேவையான வசதிகள் உள்ளனவா? தொடர்ந்து பார்க்கலாம்.

தோதான வடிவமைப்பு

தோதான வடிவமைப்பு

வடிவமைப்பை பொறுத்தவரை கிளிக் ஸ்கூட்டர் பெரிய அம்சங்களை பெற்றிருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் நடைமுறைக்கு தகுந்த தேவைகளை கிளிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது.

Trending on Drivespark:

மிரட்டும் புதிய எஸ்யூவி காரில் சென்று ரசிகர்களை சந்தித்த 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா..!!

இந்த விலையில் இவ்வளவு வசதிகளா.... திக்குமுக்காட வைக்கும் ரெனோ கேப்டூர்!

டிரக் ஓட்டுநரின் அசரடிக்கும் டிரைவிங் திறனால் நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்..!! (வீடியோ)

இந்திய வாடிக்கையாளர்களின் வரவேற்பில் ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர்..!!

கால்வைக்க அதிக இடம் உள்ளது. மேலும் அதில் நமது உடமைகளையும் தாராளமாக வைத்துக்கொள்ளலாம். இவற்றோரு லோடு கேரியரும் இந்த கிளிக் ஸ்கூட்டரில் உள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களின் வரவேற்பில் ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர்..!!

பெரிய இடவசதி இருப்பதால் உடமைகள் வைப்பதோடு, நாமும் தாராளமாக அமரக்கூடிய வசதியும் உள்ளது. இருக்கை அடியில் பொருள் வைக்க ஸ்டோரேஜ், மொபைல் சார்ஜிங் சாக்கேட் உள்ளன.

இந்திய வாடிக்கையாளர்களின் வரவேற்பில் ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர்..!!

பிளாக் பேட்டர்ன் உடன் கூடிய டூப்லெஸ் டயர்கள் கொண்ட கிளிக் ஸ்கூட்டர், வலிமையான பிடிப்பை தரக்கூடியது. ஆஃப் ரோடு டிராக்கில் கூட இதை நாம் சிறப்பாக ஓட்டி செல்லலாம்.

எஞ்சின்

எஞ்சின்

109சிசி சிங்கிள் சிலிண்டர் 4 ஸ்டோரேக் எஞ்சினை பெற்றுள்ள கிளிக் ஸ்கூட்டர் 8 பிஎச்பி பவர் மற்றும் 8.94 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.

இந்திய வாடிக்கையாளர்களின் வரவேற்பில் ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர்..!!

சிறந்த டிரான்மிஷன் தேர்விற்காக சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை ஹோண்டா கிளிக் ஸ்கூட்டரில் பொருத்தியுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களின் வரவேற்பில் ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர்..!!

நடைமுறைக்கேற்ற வடிவமைப்பு, சிறந்த செயல்திறனை வழங்கும் இந்த ஸ்கூட்டர், இந்தியாவில் விலை குறைவான ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்று.

வேரியண்டுகள் & விலை

வேரியண்டுகள் & விலை

ஸ்டாண்டர்டு மற்றும் கிராபிக்ஸ் என இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர். இதில் கிளிக் ஸ்டாண்டர்டு ரூ. 42,384 விலை பெறுகிறது. கிராபிக்ஸ் ரூ. 42,880 விலை பெறுகிறது (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

இந்திய வாடிக்கையாளர்களின் வரவேற்பில் ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர்..!!

எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதற்கான தேவைகளை சரியாக ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் பெற்றிருக்கிறது. 109சிசி எஞ்சினை பெற்றிருக்கும் இந்த ஸ்கூட்டர் செயல்திறன் மற்றும் தேவைகளில் சிறந்த தேர்வாக உள்ளது.

English summary
Read in Tamil: Honda Cliq is unconventional in its design, and the approach is more practical rather than a stylish scooter. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark