புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் டெலிவிரி துவங்கியது!

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் டெலிவிரி கொடுக்கும் பணிகள் இந்தியாவில் துவங்கி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்குகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் பணிகள் துவங்கி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

 புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் டெலிவிரி துவங்கியது!

அட்வென்ச்சர் டூரர் ரகத்திலான ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் இந்தியாவில் ரூ.13.07 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இரண்டு மாதங்களில் 50க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்று இந்த புதிய ஹோண்டா பைக் அசத்தி இருக்கிறது.

 புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் டெலிவிரி துவங்கியது!

இந்த நிலையில், இந்த பைக்கின் முக்கிய உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள் ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது.

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் மிகவும் சக்திவாய்ந்த முதல் ஹோண்டா பைக் என்பதும் இதற்கு பெருமை தரும் விஷயம்.

 புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் டெலிவிரி துவங்கியது!

முதல் லாட்டில் வந்த 50 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்குகளுக்கான முக்கிய உதிரிபாகங்கள் அசெம்பிள் செய்யப்பட்டு, இப்போது முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டு வருகிறது.

 புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் டெலிவிரி துவங்கியது!

நாடு முழுவதும் உள்ள ஹோண்டா விங் வேர்ல்டு என்ற பிரத்யேக டீலர்கள் வழியாக இந்த பைக் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஷோரூம்களில்தான் இப்போது முன்பதிவு வரிசை அடிப்படையில் பைக்குகள் டெலிவிரி கொடுக்கப்படுகின்றன.

 புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் டெலிவிரி துவங்கியது!

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் சிஆர்எஃப் 1000எல் பைக்கில் 998சிசி லிக்யூடு கூல்டு பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 93 பிஎச்பி பவரையும், 98 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

 புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் டெலிவிரி துவங்கியது!

இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ்[ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்] இணைக்கப்பட்டு இருக்கிறது. எனவே, கியர் மாற்றும் வேலை இந்த பைக்கில் இல்லை.

 புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் டெலிவிரி துவங்கியது!

இந்த பைக் 250மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருப்பதால், ஆஃப்ரோடு சாகசங்களுக்கு மிக ஏற்றதாக இருக்கும். அதேபோன்று, விசேஷ சஸ்பென்ஷன் அமைப்பும், பிரேக்குகளும் இந்த பைக்கின் சிறப்பம்சங்கள்.

 புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் டெலிவிரி துவங்கியது!

அட்வென்ச்சர் டூரர் ரகத்தில் மிக பிரபலமான இந்த பைக் இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. ட்ரையம்ஃப், டுகாட்டி, பிஎம்டபிள்யூ, சுஸுகி மற்றும் கவாஸாகி உள்ளிட்ட போட்டியாளர்களின் தயாரிப்புகளுக்கு மத்தியில் அதிக வரவேற்பை இந்த பைக் பெற்றிருக்கிறது.

Most Read Articles
English summary
Honda Motorcycle & Scooter India (HMSI) had recently launched its well-known litre-class adventure-touring motorcycle - the Africa Twin CRF1000L.
Story first published: Tuesday, August 1, 2017, 20:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X