சென்னையில் நடந்த தேசிய பைக் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் ஹோண்டா வீரர்கள் அசத்தல்!

Written By:

சென்னையில் நேற்று நடந்த தேசிய பைக் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் ஹோண்டா அணிகளை சேர்ந்த ரைடர்கள் அசத்தினர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

 சென்னையில் நடந்த தேசிய பைக் பந்தயத்தில் ஹோண்டா வீரர்கள் அசத்தல்!

அகில இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்மேளனத்தின் சார்பில், தேசிய மோட்டார்சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி நேற்று சென்னை இருங்காட்டுக் கோட்டையில் உள்ள பந்தய களத்தில் நடந்தது.

 சென்னையில் நடந்த தேசிய பைக் பந்தயத்தில் ஹோண்டா வீரர்கள் அசத்தல்!

இந்த பந்தயம் சூப்பர் ஸ்போர்ட் 165சிசி, புரோ ஸ்டாக் 165சிசி உள்ளிட்ட பிரிவுகளில் பந்தயம் நடத்தப்பட்டது. இந்த பந்தயத்தின் இரண்டாவது தினமான நேற்று மொத்தம் 8 போடியம் இடங்களில் 5 இடங்களை ஹோண்டா அணியினர் கைப்பற்றினர்.

 சென்னையில் நடந்த தேசிய பைக் பந்தயத்தில் ஹோண்டா வீரர்கள் அசத்தல்!

சூப்பர் ஸ்போர்ட்ஸ் 165சிசி பிரிவில் ஹோண்டா Ten 10 அணியின் ராஜீவ் சேது வெற்றி பெற்றார். அதே அணியின் மதன குமார் இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார். புரோ ஸ்டாக் 165சிசி பிரிவின் இறுதிச் சுற்றில் ஹோண்டா Ten 10 அணி வீரர் மிதுன் குமார் முதலிடம் பிடித்தார்.

 சென்னையில் நடந்த தேசிய பைக் பந்தயத்தில் ஹோண்டா வீரர்கள் அசத்தல்!

இதனிடையே, தேசிய பைக் பந்தய சாம்பின்ஷிப் பந்தயத்தின் இடையில், ஹோண்டா நிறுவனம் தனது ஒன் மேக் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்றை சென்னையில் நடத்தியது. ஹோண்டா சிபிஆர்250ஆர் ஓபன் மற்றும் ஹோண்டா சிபிஆர் 150 நோவிஸ் ஆகிய இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்டது.

 சென்னையில் நடந்த தேசிய பைக் பந்தயத்தில் ஹோண்டா வீரர்கள் அசத்தல்!

முதல் பந்தயத்தில் ஹோண்டா சிபிஆர் 250ஆர் ஓபன் கிளாஸ் பந்தயத்தில் ஹரி கிருஷ்ணன் வெற்றி பெற்றார். பி. அர்விந்த் மற்றும் ராஜீவ் ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்தனர்.

 சென்னையில் நடந்த தேசிய பைக் பந்தயத்தில் ஹோண்டா வீரர்கள் அசத்தல்!

இரண்டாவது பந்தயத்தில் ராஜீவ் சேது முதலிடத்தை பிடித்தார். அனீஷ் ஷெட்டி மற்றும் பி.அர்விந்த் ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்தனர். சிபிஆர் 150 நோவிஸ் பிரிவில் சத்திய நாராயன் முதலிடத்தை பிடித்தார்.

 சென்னையில் நடந்த தேசிய பைக் பந்தயத்தில் ஹோண்டா வீரர்கள் அசத்தல்!

இரண்டாவது இடத்தை அமலா ஜெரால்டும், மூன்றாவது இடத்தை வைசாக் சோபனும் பிடித்தனர். இதுகுறித்து ஹோண்டா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவின் துணைத் தலைவர் பிரபு நாகராஜ் கூறுகையில்," ஹோண்டா அணி வீரர்கள் குறிப்பிடத்தக்க அளவில் திறம்பட செயல்பட்டுள்ளனர்.

 சென்னையில் நடந்த தேசிய பைக் பந்தயத்தில் ஹோண்டா வீரர்கள் அசத்தல்!

சூப்பர் ஸ்போர்ட்ஸ் பிரிவில் ராஜீவ் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அடுத்த சுற்றுகளிலும் எங்களது அணி வீரர்கள் மிகச் சிறப்பான திறனை வெளிப்படுத்துவர் என்று நம்புகிறோம்," என்று கூறினார்.

 சென்னையில் நடந்த தேசிய பைக் பந்தயத்தில் ஹோண்டா வீரர்கள் அசத்தல்!

ஹோண்டா ஒன் மேக் பைக் பந்தயம் இந்தியாவின் இளம் தலைமுறை பைக் பந்தய வீரர்களை அடையாளும் கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் தளமாக இருந்து வருகிறது. ஹோண்டா ஒன் மேக் ரேஸ் அமைப்பு மூலமாக பயிற்றுவிக்கப்பட்ட வீரர்கள், தேசிய பைக் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் திறம்பட செயல்பட்டது இந்த முடிவுகளின் மூலமாகவே தெரிய வந்துள்ளது.

English summary
Honda riders put in a brilliant performance to score highest ever podiums in the second round of MMSC FMSCI National Motorcycle Racing Championship held at Madras Motor Racing Track, Chennai.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark