2018 ஹோண்டா சிஆர்எஃப்1000எல் ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் வெளியீடு

Written By:

2018 மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய ஹோண்டா சிஆர்எஃப்1000எல் ஆப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் படங்கள், தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனை இந்த செய்தியில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
அதிரடியான அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளை வெளியிட்டது ஹோண்டா

அட்வென்ச்சர் டூரர் ரகத்தில் உலக அளவில் பிரபலமான மாடல் ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின். 1980களில் பாரிஸ்- டக்கார் ராலி பந்தயத்தில் தொடர்ந்து 4 முறை வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த ஹோண்டா என்எக்ஸ்ஆர்750 ஆப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த மாடல் கடந்த ஆண்டு அறிமுகமானது.

அதிரடியான அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளை வெளியிட்டது ஹோண்டா

ஆஃப்ரோடு மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு மிகச் சிறப்பான தகவமைப்புகள் மற்றும் ஆக்சஸெரீகளுடன் வந்ததால், மோட்டார்சைக்கிள் பிரியர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில், ஹோண்டா சிஆர்எஃப்1000எல்2 ஸ்போர்ட்ஸ் மாடல் இத்தாலியில் துவங்கி இருக்கும் மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதிரடியான அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளை வெளியிட்டது ஹோண்டா

எஞ்சின், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது இந்த எல்2 ஆப்ரிக்கா ட்வின் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளில் முழுவதுமாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட ஷோவா சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன், இந்த சஸ்பென்ஷன் 10.6 அங்குலம் வரை நகரும் சிறப்பு கொண்டது. சாதாரண மாடலைவிட இது அதிகம்.

அதிரடியான அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளை வெளியிட்டது ஹோண்டா

ஆப்ரிக்கா ட்வின் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளில் தட்டையான இருக்கை அமைப்பு உள்ளது. இது வழக்கமான பேஸ் மாடலைவிட 1.2 அங்குலம் உயரம் கூடுதலாக உள்ளது. இருக்கையின் உயரத்தை 0.8 அங்குலம் வரை அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.

அதிரடியான அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளை வெளியிட்டது ஹோண்டா

மிக மோசமான சாலைகளையும் எதிர்கொள்ளும் வகையில், இந்த மோட்டார்சைக்கிளில் உயர்த்தப்பட்ட அமைப்புடன் கூடிய கைப்பிடி பொருத்தப்பட்டு இருக்கிறது. சாதாரண மாடலைவிட இது 1.3 அங்குலம் உயரம் அதிகம்.

Trending on Drivespark:

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் டிசிடி மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Recommended Video
Honda Africa Twin Features And Driving Modes Explained - DriveSpark
அதிரடியான அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளை வெளியிட்டது ஹோண்டா

இந்த மோட்டார்சைக்கிளில் விண்ட்ஸ்கிரீன் எனப்படும் ஓட்டுனரின் முகத்தில் காற்று அறைவதை தடுக்கும் கண்ணாடியும், 3.1 அங்குலம் உயரம் அதிகம். கைப்பிடிகள் வெப்பப்படுத்தும் வசதியை பெற்றிருக்கிறது.

அதிரடியான அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளை வெளியிட்டது ஹோண்டா

இந்த மோட்டார்சைக்கிளில் ஆஃப்ரோடு செல்லும்போது தெளிவாக பார்ப்பதற்கு வசதியாக இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதிரடியான அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளை வெளியிட்டது ஹோண்டா

இந்த மோட்டார்சைக்கிளில் புதிய 998சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்பை கொண்டது. நடுத்தர நிலையில், சிறப்பான பவர் டெலிவிரியை வழங்கும் விதத்தில், புகைப்போக்கி அமைப்பிலும் மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

அதிரடியான அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளை வெளியிட்டது ஹோண்டா

இந்த மோட்டார்சைக்கிளில் புதிய லித்தியம் அயான் பேட்டரியும் பொருத்தப்பட்டு இருப்பது முக்கிய சிறப்பம்சங்கள். டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்சக்கரத்தின் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை ஆஃப் செய்து வைக்கும் வசதியும் உண்டு.

அதிரடியான அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளை வெளியிட்டது ஹோண்டா

இந்த மோட்டார்சைக்கிளில் முக்கிய அம்சமாக, குயிக் ஷிஃப் வசதியுடன் கூடிய டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், நிலபரப்பை பொறுத்து ஓட்டுவதற்கு ஏற்ற மூன்றுவிதமான டிரைவிங் மோடுகள் உள்ளன. ஜி என்ற மோடில் வைத்தால், ஆஃப்ரோடு செல்வதற்கான இயக்க நிலைகளை பெறமுடியும்.

அதிரடியான அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளை வெளியிட்டது ஹோண்டா

இந்த புதிய ஆப்ரிக்கா ட்வின் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் வெள்ளை- நீலம்- சிவப்பு ஆகிய ஒரே வண்ணக்கலவையில் மட்டுமே கிடைக்கும். ஐரோப்பிய மார்க்கெட்டில் முதலில் விற்பனைக்கு வர இருக்கின்றன இந்த புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் மாடல்கள்.

இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சி அப்டேட்ஸ்!

English summary
Read in Tamil: 2018 Honda CRF1000L Africa Twin Adventure Sport Unveiled
Please Wait while comments are loading...

Latest Photos