ராயல் என்ஃபீல்டுக்கு சவால் விடும் ஹோண்டா... க்ரூஸர் பைக்குகள் தயாரிக்க ஆயத்தம்..!!

ராயல் என்ஃபீல்டுக்கு சவால் விடும் ஹோண்டா... க்ரூஸர் பைக்குகள் தயாரிக்க ஆயத்தம்..!!

By Azhagar

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இந்தியாவிற்கு ஏற்ற க்ரூஸர் ரக மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் பணியில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் க்ரூஸர் பைக் செக்மென்டில் களமிறங்கும் ஹோண்டா!

இதன்மூலம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு நேரடியான சவாலை விடுத்துள்ளது ஹோண்டா மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம்.

இந்தியாவில் க்ரூஸர் பைக் செக்மென்டில் களமிறங்கும் ஹோண்டா!

ஹோண்டாவின் தலைமை செயல் அதிகாரி மினோரூ கட்டோ மணிகண்ட்ரோல் இணையதளத்திற்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.

இந்தியாவில் க்ரூஸர் பைக் செக்மென்டில் களமிறங்கும் ஹோண்டா!

இந்தியாவில் க்ரூஸர் ரக பைக் செக்மென்டில் களமிறங்குவதில் ஹோண்டா ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுவருவதாக அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.

இந்தியாவில் க்ரூஸர் பைக் செக்மென்டில் களமிறங்கும் ஹோண்டா!

இதனிடையே ஹோண்டா தயாரிக்கும் க்ரூஸர் பைக், இந்தியாவில் எந்தநேரத்தில் வேண்டுமானாலும் அறிமுகமாகலாம் என சில தகவல்கள் கிடைத்து வருகின்றன.

இந்தியாவில் க்ரூஸர் பைக் செக்மென்டில் களமிறங்கும் ஹோண்டா!

2020ம் ஆண்டில் க்ரூஸர் ரக மோட்டார் சைக்கிள் விற்பனையில் கால்பதிக்க ஹோண்டா ஆலோசித்து வருகிறது. அதே ஆண்டில் ராயல் என்ஃபீல்டு தனது புதிய சேலன்ஜர் மாடல் மோட்டார் சைக்கிளை வெளியிட நாள் குறித்துள்ளது.

இந்தியாவில் க்ரூஸர் பைக் செக்மென்டில் களமிறங்கும் ஹோண்டா!

ஹோண்டாவின் இந்த அறிவிப்பை மிக தீவிரமாக ஆலோசித்து வரும் ராயல் என்ஃபீல்டு, க்ரூஸர் ரக மோட்டார் சைக்கிள் செக்மென்டில் தற்போது வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்பதையும் அது ஆராய்ந்து வருகிறது.

Recommended Video

[Tamil] Honda CBR 650F Launched In India - DriveSpark
இந்தியாவில் க்ரூஸர் பைக் செக்மென்டில் களமிறங்கும் ஹோண்டா!

ஹோண்டாவின் அறிவிப்பின்படி 400சிசி, 500சிசி மற்றும் 600சிசி திறன் கொண்ட எஞ்சின்களில் அது க்ரூஸர் பைக்குகளை தயாரிக்கலாம் என்று தெரிகிறது.

இந்தியாவில் க்ரூஸர் பைக் செக்மென்டில் களமிறங்கும் ஹோண்டா!

க்ரூஸர் ரக மாடல்களுக்கு இந்தியா பெரிய சந்தை. இருந்தாலும் ஹோண்டாவின் க்ரூஸர் பைக்குகளுக்கான விலை நிர்ணயம் செய்வதில் நமது நாடு கொஞ்சம் சவாலாக இருக்கும்.

இந்தியாவில் க்ரூஸர் பைக் செக்மென்டில் களமிறங்கும் ஹோண்டா!

என்ட்ரி லெவல் செக்மென்டில் ஹோண்டா ரெபல் 300 மாடல் பைக்குகளை வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் க்ரூஸர் பைக் செக்மென்டில் களமிறங்கும் ஹோண்டா!

சிபிஆர் 300 ஆர் பைக்கை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள ரெபல் 300 பைக், க்ரூஸர் வடிவிலான பைக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் க்ரூஸர் பைக் செக்மென்டில் களமிறங்கும் ஹோண்டா!

முன்னதாக சிபிஆர் 250ஆர் பைக்குகளை ஹோண்டா இந்தியாவில் தான் தயாரித்தது. 300சிசி திறனில் இந்த பைக்குகளை தயாரிப்பதில் ஹோண்டாவிற்கு பெரிய செலவு ஆகிவில்லை.

இந்தியாவில் க்ரூஸர் பைக் செக்மென்டில் களமிறங்கும் ஹோண்டா!

மேலும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் ரெபல் 300 பைக்குகளுக்கான பாகங்கள் எல்லாம் சிபிஆர் 300ஆர் மாடலுக்கு உரியது போலத்தான் இருக்கும்.

இந்தியாவில் க்ரூஸர் பைக் செக்மென்டில் களமிறங்கும் ஹோண்டா!

286சிசி லிக்குவிடு-கூல்டு எஞ்சினை பெற்றுள்ள ரெபல் 300 மாடல் பைக், 27 பிஎச்பி பவர் மற்றும் 26.9 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

இந்தியாவில் க்ரூஸர் பைக் செக்மென்டில் களமிறங்கும் ஹோண்டா!

2017ல் மேம்படுத்தப்பட்ட மாடலாக இது வெளியான போது டூபுலர் பிரேம் மற்றும் பாபர் ஸ்டைல் வடிவமைப்புகளை பெற்றிருந்தது.

இந்தியாவில் க்ரூஸர் பைக் செக்மென்டில் களமிறங்கும் ஹோண்டா!

க்ரூஸர் ரக பைக் விற்பனையை பொறுத்தவரையில் ராயல் என்ஃபீல்டின் ஆட்சி தான் கொடிக்கட்டி பறக்கிறது.

2020ல் இதில் கால்பதிக்க நினைக்கும் ஹோண்டா, அதற்கான சவால்களையும் நன்கு உணர்ந்திருப்பது உண்மை தான்.

Most Read Articles
English summary
Read in Tamil: Honda has confirmed that the company will introduce a cruiser motorcycle in India. Click for Details....
Story first published: Monday, November 20, 2017, 15:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X