டாப்-10 பட்டியலில் முதல் முறையாக இடம்பெற்ற ஹோண்டா டியோ: முழு தகவல்கள்..!!

Written By:

அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களுக்கான டாப்-10 பட்டியலில் முதல் முறையாக ஹோண்டா டியோ ஸ்கூட்டர் இடம்பிடித்துள்ளது.

முதல்முறையாக டாப்-10 பட்டியலில் நுழைந்த ஹோண்டா டியோ..!!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருசக்கர வாகன செக்மெண்ட் தான் முன்னிலை வகிக்கிறது. இதற்கு அடிப்படையாக அமைந்திருப்பது நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் திறன் வளர்ச்சியும் இளைஞர்களுமே ஆவர்.

முதல்முறையாக டாப்-10 பட்டியலில் நுழைந்த ஹோண்டா டியோ..!!

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் ( SIAM) வெளியிட்டுள்ள மே 2017 மாத புள்ளிவிவரத்தின்படி மோட்டார்சைக்கிள் செக்மெண்டைக் காட்டிலும், ஸ்கூட்டர் செக்மெண்ட் நல்ல வளர்ச்சியை கண்டிருப்பது தெரியவந்துள்ளது.

முதல்முறையாக டாப்-10 பட்டியலில் நுழைந்த ஹோண்டா டியோ..!!

சியாம் அளித்துள்ள மே 2017 புள்ளிவிவர கணக்குகளின் அடிப்படையில், ஸ்கூட்டர் செக்மெண்ட் 24.67 சதவீத வளர்ச்சியை கண்டிருக்கிறது. அதேவேளை இருசக்கர வாகன செக்மெண்ட் 4.04 சதவீத வளர்ச்சியையே கண்டுள்ளது.

முதல்முறையாக டாப்-10 பட்டியலில் நுழைந்த ஹோண்டா டியோ..!!

ஸ்கூட்டர் செக்மெண்டின் இந்த அபரிமித வளர்ச்சி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களின் டாட்-10 தரவரிசைப் பட்டியலில் மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறது.

முதல்முறையாக டாப்-10 பட்டியலில் நுழைந்த ஹோண்டா டியோ..!!

இந்தப் பட்டியலில் எப்போதும் போலவே ஹோண்டா ஆக்டிவா முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

முதல்முறையாக டாப்-10 பட்டியலில் நுழைந்த ஹோண்டா டியோ..!!

இதே போல இப்பட்டியலில் கடந்த மே2016 காலகட்டத்தில் 10வது இடத்தில் இருந்த டிவிஎஸ் ஜூபிடர் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக இந்த இடத்தில் இருந்த பஜாஜ் சிடி டாப்-10 பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

முதல்முறையாக டாப்-10 பட்டியலில் நுழைந்த ஹோண்டா டியோ..!!

கடந்த மே மாத விற்பனையில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக பார்க்கப்படுவது ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் வளர்ச்சியே.

முதல்முறையாக டாப்-10 பட்டியலில் நுழைந்த ஹோண்டா டியோ..!!

ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் டியோ ஸ்கூட்டர் கடந்த 2002ல் முதல் முறையாக அறிமுகம் ஆனது. தற்போது முதல் முறையாக டாப்-10 பட்டியலில் ஹோண்டா டியோ நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக டாப்-10 பட்டியலில் நுழைந்த ஹோண்டா டியோ..!!

வாடிக்கையாளர்களின் மனநிலையே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பெண்களே அதிகம் பயன்படுத்தி வந்த ஸ்கூட்டர்களை தற்போது ஆண்களும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

முதல்முறையாக டாப்-10 பட்டியலில் நுழைந்த ஹோண்டா டியோ..!!

இளைஞர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் உள்ளதால் மோட்டார்சைக்கிள்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான ஸ்கூட்டர்கள் விற்பனையாகி வருகிறது. தற்போது வீட்டிற்கு ஒரு ஸ்கூட்டர் என்ற சூழல் ஏற்பட்டு வருகிறது.

முதல்முறையாக டாப்-10 பட்டியலில் நுழைந்த ஹோண்டா டியோ..!!

ஆட்டோமேடிக் ஸ்கூட்டர்கள் செக்மெண்ட் கடந்த 6 ஆண்டுகளில் 35 சதவீத வளர்ச்சியை கண்டிருக்கிறது. அதே நேரத்தில் மோட்டார்சைக்கிள் செக்மெண்ட் 49சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாக குறைந்துள்ளது.

முதல்முறையாக டாப்-10 பட்டியலில் நுழைந்த ஹோண்டா டியோ..!!

மேலும் நகர்ப்புற போக்குவரத்து நெரிசல்களில் பயணிக்க இலகுவானதாக ஸ்கூட்டர்கள் உள்ளதும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காராணமாக கூறப்பட்டாலும் தற்போது கிராமப்புறங்களிலும் இந்த செக்மெண்ட் நல்ல வளர்ச்சியை கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக டாப்-10 பட்டியலில் நுழைந்த ஹோண்டா டியோ..!!

கடந்த மார்ச் 2017 ல் பிஎஸ்-4 தரத்தில், கவர்ச்சிகரமான ஸ்டைலிங்கில் மேம்படுத்தப்பட்ட புதிய 2017 டியோ ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்தது.

முதல்முறையாக டாப்-10 பட்டியலில் நுழைந்த ஹோண்டா டியோ..!!

இதில் எல்ஈடி முகப்பு விளக்கு, ஆட்டோமேடிக் ஹெட்லைட், காம்பி பிரேக்கிங் சிஸ்டம், மொபைல் சார்ஜர், 18 லிட்டர் ஸ்டோரேஜ் கொள்ளளவு, டியூப்லெஸ் டயர்கள் மற்றும் ஸ்டைலிஷான டூயல் டோன் கலர்கள் என கவர்ச்சிகரமான மாற்றங்களை புதிய டியோ கண்டுள்ளது.

முதல்முறையாக டாப்-10 பட்டியலில் நுழைந்த ஹோண்டா டியோ..!!

2017 ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் அதிகபட்சமாக 8 பிஹச்பி ஆற்றலையும், 8.91 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடிய 109.19சிசி இஞ்சின் உள்ளது. இதில் வி-மேடிக் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

முதல்முறையாக டாப்-10 பட்டியலில் நுழைந்த ஹோண்டா டியோ..!!

மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஹோண்டா டியோவின் அறிமுகம் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இதன் விலை ரூ.49132 (எக்ஸ் ஷோரூம். டெல்லி) என்பது குறிப்பிடத்தகக்து.

முதல்முறையாக டாப்-10 பட்டியலில் நுழைந்த ஹோண்டா டியோ..!!

சியாம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி முதல் 10 இடங்களை பெற்றுள்ள இருசக்கர வாகனங்கள்:

  1. ஆக்டிவா
  2. ஸ்பெலெண்டர்
  3. ஹச் எஃப் டீலக்ஸ்
  4. பாஷன்
  5. சிபி ஷைன்
  6. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்
  7. கிளாமர்
  8. ஜூபிடர்
  9. பல்சர்
  10. ஹோண்டா டியோ
English summary
Read in Tamil about Honda DIO enters top-10 list for first time in india

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark