இந்தியாவில் ரூ.26.85 லட்சம் விலையில் ஹோண்டா கோல்டுவிங் மோட்டார் சைக்கிள் அறிமுகம்..!!

Written By:

ஹோண்டாவின் புதிய 2018 கோல்டு விங் பைக் ரூ. 26.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

முதன்முறையாக இந்த மாடலில் ஹோண்டா டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) தொழில்நுட்பத்தை பொருத்தியுள்ளது.

ஹோண்டாவின் புதிய 2018 கோல்டுவிங் பைக் விற்பனைக்கு வந்தது..!!

நீண்ட தூர பயணம் மற்றும் சுற்றுலா தேவைகளை கருதி வெளிவந்துள்ள இந்த பைக்கில் பல்வேறு நவீன தரத்திலான தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.

ஹோண்டாவின் புதிய 2018 கோல்டுவிங் பைக் விற்பனைக்கு வந்தது..!!

தற்போதைய மாடலில் இருக்கும்செயல்திறன் மற்றும் ஆடம்பரம் தேவைகளை அப்புறப்படுத்தி புதிய சேஸிஸ் மற்றும் வடிவமைப்பை ஹோண்டா 2018 கோல்டு விங் பைக்கிற்கு பொருத்தியுள்ளது.

ஹோண்டாவின் புதிய 2018 கோல்டுவிங் பைக் விற்பனைக்கு வந்தது..!!

2018 ஹோண்டா கோல்டு விங் பைக் மிகவும் கூர்மையான அதே சமயத்தில் மிரட்சியான தோற்றத்தில் உள்ளது. இதனுடைய விண்டுஸ்கீரின் மின்சாரத்தால் இயங்கும் ஆற்றல் பெற்றதாக உள்ளது.

Recommended Video - Watch Now!
[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
ஹோண்டாவின் புதிய 2018 கோல்டுவிங் பைக் விற்பனைக்கு வந்தது..!!

ஹோண்டா கோல்டு விங் பைக்கை ஓட்டும் ரைடர், பல்வேறு உயர்தர தொழில்நுட்பங்களுடன் சொகுசான பயணத்தை அனுபவிக்கலாம். அதேபோன்ற ஒரு சிலிர்ப்பான அனுபவத்தை பில்லியன் ரைடருக்கும் கிடைக்கும்.

ஹோண்டாவின் புதிய 2018 கோல்டுவிங் பைக் விற்பனைக்கு வந்தது..!!

இதில் இடம்பெற்றுள்ள தொடுதிரை இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே கனெக்ட்டிவிட்டு தேவைகளை மட்டுமே பெற்றிருக்கிறது.

ஸ்மார்ட் கீ கன்ட்ரோல் கொண்ட இந்த பைக் தானாக இயங்கும் இன்டிகேட்டர்களை எல்.இ.டி ஹெட்லேம்பில் கொண்டுள்ளது.

ஹோண்டாவின் புதிய 2018 கோல்டுவிங் பைக் விற்பனைக்கு வந்தது..!!

2018 கோல்டு விங் பைக்கில் வயர் தொழில்நுட்பத்தில் இயங்கும் திராட்டிலை ஹோண்டா நிறுவனம் அமைத்துள்ளது. அது டூர், ஸ்போர்டு, ஈகோ மற்றும் ரெயின் என நான்கு டிரைவிங் மோடுகளை வழங்குகிறது.

ஹோண்டாவின் புதிய 2018 கோல்டுவிங் பைக் விற்பனைக்கு வந்தது..!!

பைக்கின் நிலைத்தன்மையை உறுதிசெய்யும் விதத்தில் ஹோண்டா ஸ்டிபிளிட்டி டார்க் கன்ட்ரோல் ஆப்ஷனும் 2018 ஹோண்ட கோல்டு விங் பைக்கில் அமைத்துள்ளது. இதன்மூலம் மோட்டார் சைக்கிளில் சஸ்பென்ஷன் தேவை ரைடரின் கட்டுக்குள் இருக்கும்.

ஹோண்டாவின் புதிய 2018 கோல்டுவிங் பைக் விற்பனைக்கு வந்தது..!!

இட்லிங் ஸ்டாப் மற்றும் ஐஎஸ்ஜி க்விக் ஸ்டார்ட், ஏபிஎஸ் உடன் கூடிய டூயல்-கம்பையின்டு பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன.

ஹோண்டாவின் புதிய 2018 கோல்டுவிங் பைக் விற்பனைக்கு வந்தது..!!

வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் மிரட்டும் 2018 ஹோண்டா கோல்டு விங் பைக், செயல்திறனிலும் கவனமீர்க்கிறது.

1833சிசி திறன் பெற்ற 6 சிலிண்டர் கொண்ட இந்த பைக்கின் எஞ்சின், 125 பிஎச்பி மற்றும் 170 என்.எம் டார்க் திறனை வழங்கும். 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இதில் உள்ளது.

ஹோண்டாவின் புதிய 2018 கோல்டுவிங் பைக் விற்பனைக்கு வந்தது..!!

ஆடம்பரமான டூரிங் தேவைகளை ஒட்டி தயாரிக்கப்படும் பைக்குகளில் 2018 ஹோண்டா கோல்டுவிங் பைக் நிச்சயம் ஒரு பெஞ்சுமார்க் தான்.

ஹோண்டாவின் புதிய 2018 கோல்டுவிங் பைக் விற்பனைக்கு வந்தது..!!

தொழில்நுட்ப அம்சங்கள், செயல்திறன் தேவைகள் என எல்லாவற்றிலும் சிறந்த தயாரிப்பாக உள்ள 2018 ஹோண்டா கோல்டுவிங் இந்தியாவில் இந்தியன் ரோட்மாஸ்டர், ஹார்லி டேவிட்சன் சிவிஒ போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு கடும் போட்டியை வழங்கும்.

English summary
Read in Tamil: 2018 Honda Gold Wing Launched In India; Prices Start At Rs 26.85 Lakh. Click for Details...
Story first published: Wednesday, December 6, 2017, 13:04 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark