சுஸுகி, பியாஜியோ வயிற்றில் புளியை கரைத்த ஹோண்டா கிரேஸியா... விற்பனையில் தூள்..!!

Written By:

இந்தியாவில் விற்பனைக்கு வந்த 21 நாட்களில் சுமார் 15,000 ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர்கள் நாடு முழுவதும் விற்பனை ஆகியுள்ளன.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர்... மொத்தத்தில் சூப்பரோ சூப்பர்..!!

இம்மாதம் 8ம் தேதி இந்தியாவில் ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்தது.

புதிய ஸ்கூட்டராக இருந்தாலும், புதிய ரக ப்ரீமியம் தர அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருந்தது.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர்... மொத்தத்தில் சூப்பரோ சூப்பர்..!!

முற்றிலும் எல்.இ.டி விளக்குகள், ஈகோ இன்டிகேட்டர், யூட்டிலிட்டி பாக்கெட், சீட் ஓப்பனர், முற்றிலும் டிஜிட்டலில் இயங்கும் கன்சோல் ஆகியவை இதில் உள்ளன.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர்... மொத்தத்தில் சூப்பரோ சூப்பர்..!!

இந்தியாவில் வலம் வரும் ஸ்கூட்டர் செக்மென்டில் கிரேஸியா பல்வேறு உயர் தர அம்சங்களை பெற்றுள்ளது.

குறிப்பாக டூயல் டோன் கொண்ட ஸ்கூட்டர்களில் இத்தகைய அம்சங்களை பெற்ற ஸ்கூட்டர் கிரேஸியா மட்டும் தான்.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர்... மொத்தத்தில் சூப்பரோ சூப்பர்..!!

ஹோண்டா மோட்டார் சைக்கிள் தலைமை துணை தலைவர் யாத்விந்தர் கூல்லேரியா பேசும்போது, கிரேஸியா ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் தான் அதை மற்ற மாடல்களில் இருந்து தனித்து காட்டுகிறது என்றார்.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர்... மொத்தத்தில் சூப்பரோ சூப்பர்..!!

வெளியான சில நாட்களிலேயே 15,000 கிரேஸியா ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஸ்கூட்டர் செக்மென்டில் ஹோண்டாவிற்கு புதிய உற்சாகத்தை கிரேஸியா அளித்துள்ளது என்றார் அவர்.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர்... மொத்தத்தில் சூப்பரோ சூப்பர்..!!

125சிசி சிங்கிள்-சிலிண்டர் எஞ்சினை பெற்றுள்ள இந்த கிரேஸியா அதிகப்பட்சமாக 8.52 பிஎச்பி பவர் மற்றும் 10.54 டார்க் திறனை வெளிப்படுத்தும்.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர்... மொத்தத்தில் சூப்பரோ சூப்பர்..!!

கிரேஸியா ஸ்கூட்டரில் இருக்கும் இதே எஞ்சின் தான் ஹோண்டா ஆக்டிவா மாடலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர்... மொத்தத்தில் சூப்பரோ சூப்பர்..!!

இயக்கத்திற்கு தகுந்தவாறு மாறும் கியர்பாக்ஸை பெற்றுள்ள இந்த ஸ்கூட்டர், 6 வித நிறங்கள் மற்றும் மூன்று வித வேரியன்டுகளில் வருகிறது.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர்... மொத்தத்தில் சூப்பரோ சூப்பர்..!!

12 இஞ்ச் அலாய் சக்கரங்கள், முன்பக்க சக்கரத்தில் 110மிமீ டிஸ்க் பிரேக் அமைப்பு, டெலஸ்கோபிக் சன்பென்ஷன், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆகியவை ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர்... மொத்தத்தில் சூப்பரோ சூப்பர்..!!

சுஸுகி ஏக்சஸ் 125 மற்றும் பியாஜியோ வெஸ்பா 125 ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கியுள்ள ஹோண்டா கிரேஸியா, ரூ.57,897 (டெல்லி எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

English summary
Read in Tamil: Honda Grazia Crosses 15000 Mark in 21 Days Sales. Click for Details...
Story first published: Friday, December 1, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark