புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

Written By:

அடுத்து ஒரு புத்தம் புதிய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மாடலை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நம்பர்-1 ஆக இருக்கும் ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா, டியோ உள்ளிட்ட ஸ்கூட்டர்கள் மூலமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், தனது மார்க்கெட்டை வலுப்படுத்தும் விதத்தில் புதிய ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

ஹோண்டா கிரேஸியா என்ற பெயரில் இந்த புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. ஹோண்டா ஆக்டிவா இருபாலருக்கும், எந்த வயதினருக்கும் ஏற்ற ஸ்கூட்டர் பிராண்டாக இருக்கும் நிலையில், இந்த புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் இளைய சமுதாயத்தினரை கவரும் வகையில் இருக்கிறது.

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டரின் முன்புறம், டியோ ஸ்கூட்டரின் டிசைன் அம்சங்களை காண முடிகிறது. அதாவது, 125சிசி மார்க்கெட்டின் டியோ ஸ்கூட்டராக கருதலாம். இந்த புதிய கிரேஸியா ஸ்கூட்டரின் முகப்பில் இரட்டை எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முதல்முறையாக எல்இடி ஹெட்லைட்டுடன் வந்திருக்கும் மாடல் என்ற பெருமையை பெறுகிறது.

Recommended Video - Watch Now!
[Tamil] TVS Jupiter Classic Launched In India - DriveSpark
புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

இரட்டை திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு முக்கிய சிறப்பம்சம். முன்புறத்தில் இருக்கும் க்ளவ் பாக்சில் மொபைல்போன் சார்ஜர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 18 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி உள்ளது. பின்புறத்தில் பிளவுபட்ட அமைப்பிலான கிராப் ரெயில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹோண்டா ஆக்டிவா 125சிசி ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் அதே, 125சிசி எஞ்சின்தான் புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.52 பிஎச்பி பவரையும, 10.54 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் 1,812மிமீ நீளமும், 697மிமீ அகலமும், 1,146மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் 1,260மிமீ வீல்பேஸ் கொண்டது. இருக்கை தரையிலிருந்து 766மிமீ உயரத்தில் இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் 155மிமீ தரை இடைவெளி கொண்டது. 5.3 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த 125சிசி ஸ்கூட்டரில் முன்புறத்தில் 12 அங்குல அலாய் சக்கரமும், பின்புறத்தில் 10 அங்குல அலாய் சக்கரமும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

முன்சக்கரத்தில் 90/90-12 அளவுடைய டயரும், பின்சக்கரத்தில் 90/100-10 அளவுடைய டயரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் விலை உயர்ந்த மாடலில், முன்சக்கரத்தில் 190மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும், விலை குறைவான மாடலில் 130மிமீ டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பின்சக்கரத்தில் 130மிமீ டிரம் பிரேக் உள்ளது. ஹோண்டாவின் காம்பி பிரேக்கிங்சிஸ்டமும் உண்டு.

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் நியோ ஆரஞ்ச் மெட்டாலிக், பியர்ல் நைட்ஸ்டார் பிளாக், பியர்ல் ஸ்பார்ட்டன் ரெட், பியர்ல் அமேஸிங் ஒயிட், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் மற்றும் மேட் மார்வெல் புளூ மெட்டாலிக் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் ஸ்டான்டர்டு, அலாய் மற்றும் டீலக்ஸ் ஆகிய மூன்று மாடல்களில் கிடைக்கும். இந்த ஸ்கூட்டருக்கு ரூ.2,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் டெலிலிரியும் துவங்குவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

வேரியண்ட் விபரம் எக்ஸ்ஷோரூம் விலை
கிரேஸியா STD ரூ. 57,827
கிரேஸியா அலாய் வீல் ரூ.57,897
கிரேஸியா DLX ரூ.62,269
புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் மிக சவாலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது இளைய சமுதாயத்தினரை வெகுவாக கவரும் என்று நம்பலாம்.

English summary
Honda Grazia launched in India. The all-new Honda Grazia scooter is priced at Rs 57,827 ex-showroom (Delhi). The Grazia is the new flagship scooter from Honda in India.
Story first published: Wednesday, November 8, 2017, 14:44 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark