புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

விரைவில் விற்பனைக்கு வரும் புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் ஹோண்டா நிறுவனம், விரைவில் புதிய ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக சில நாட்களுக்கு முன் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த புதிய ஹோண்டா ஸ்கூட்டர் பற்றி சில முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் அட்வான்ஸ்டு அர்பன் ஸ்கூட்டர் என்ற ரகத்தில் நகர்ப்புற இளைய சமுதாயத்தினரை கவரும் விதத்தில் களமிறக்கப்பட உள்ளது. இந்த ஸ்கூட்டரின் வடிவமைப்பு நிச்சயம் இளசுகளை கவரும். ஹோண்டா டியோவின் மேம்படுத்தப்பட்ட டிசைன் தாத்பரியங்களை இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கிறது.

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

இந்த ஸ்கூட்டர் இரட்டை வண்ணக் கலவையில் அசத்தலாக வர இருக்கிறது. தரமான பிளாஸ்டிங் பாகங்களும், க்ரோம் அலங்கார பாகங்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் முன்புற பேனலில் இன்டிகேட்டர்களுடன் கூடிய ஹெட்லைட் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

புதிய கிரேஸியா ஸ்கூட்டரில் மின்னணு திரையுடன் கூடிய புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. முன்புற பேனலில் சிறிய ஸ்டோரேஜ் வசதியும், யுஎஸ்பி சார்ஜர் போர்ட்டும் கொடுக்கப்பட்டு இருக்கு.

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டரில் 12 அங்குல கருப்பு வண்ண அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கு. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக் சிஸ்டமும், ஹோண்டா நிறுவனத்தின் காம்பி பிரேக் சிஸ்டமும் இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கிறது.

Trending DriveSpark Tamil:

Recommended Video

[Tamil] TVS Jupiter Classic Launched In India - DriveSpark
புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

இந்த ஸ்கூட்டர் 125சிசி எஞ்சினுடன் வருவது உறுதி செய்யப்பட்டிருக்கு. ஆக்டிவா 125சிசி ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும், அதே 124.9சிசி ஏர்கூல்டு எஞ்சின்தான் இந்த ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.52 பிஎச்பி பவரையும், 10.54 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேலும், ஹோண்டா எச்இடி தொழில்நுட்பத்தையும் இந்த எஞ்சின் பெற்றிருக்கிறது.

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

இந்த ஸ்கூட்டரில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் ஆப்ஷனும் இடம்பெற்றிருக்கும். முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் மாடல் ரூ.60,000 முதல் ரூ.65,000 இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை விட கூடுதல் விலையில் வருவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

110சிசி ஸ்கூட்டர் ரகத்தில் டியோ ஸ்கூட்டர் போன்றே, 125சிசி செக்மென்ட்டில் இளைஞர்களை கவரும் மாடலாக புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் நிலைநிறுத்தப்பட உள்ளது. புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டருக்கு டீலர்களில் ஏற்கனவே முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. ரூ.2,000 முன்பணத்துடன் இந்த ஸ்கூட்டருக்கு முன்பதிவு செய்யப்படுகிறது.

Trending On DriveSpark Tamil:

Most Read Articles
English summary
Here are the important things you should know about the New Honda Grazia scooter.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X