இந்தியாவில் சோதனை ஓட்டம் செய்யப்படும் புதிய ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!

Written By:

ஆக்டிவா ஸ்கூட்டர் மூலமாக இந்தியாவின் இருசக்கர வாகன மார்க்கெட்டை ஆட்டிப் படைத்து வரும் ஹோண்டா நிறுவனம் தனது மார்க்கெட்டை வலுவாக்கி கொள்வதற்காக பல புதிய மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வருகிறது. அந்த வகையில், அந்த நிறுவனம் அடுத்து ஒரு புதிய ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்ய இருப்பது தெரிய வந்துள்ளது.

ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!

ஹோண்டா நிறுவனத்தின் ஸ்கூப்பி என்ற புதிய ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் வைத்து ரகசியமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களை காடிவாடி இணையதளம் வெளியிட்டு இருக்கிறது.

ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!

சோதனை ஓட்டத்தில் கரு நீல வண்ணத்திலான ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர் சோதனை ஓட்டம் நடத்தபப்பட்டு வருகிறது. இந்த ஸ்கூட்டரின் வடிவமைப்பு மிக வித்தியாசமாக இருக்கிறது.

Recommended Video
TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!

பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் ஹெட்லைட் மற்றும் இண்டிகேட்டர்கள் முன்புற அப்ரான் பேனலில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!

இந்த ஸ்கூட்டரில் வட்ட வடிவிலான ரியர் வியூ மிரர்கள் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், அவை இரட்டை வண்ணத்தில் இருப்பது வாடிக்கையாளர்களை கவரும்.

ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!

இந்த ஸ்கூட்டர் பழமையான வடிவமைப்பு தாத்பரியங்களையும், நவீன தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஹோண்டா ஈக்கோ தொழில்நுட்பத்தை இந்த எஞ்சின் பெற்றிருக்கிறது.

ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!

இந்த ஸ்கூட்டரின் முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக் அமைப்பும் உள்ளன. தயாரிப்பு செலவீனத்தை குறைத்து, விலையை சவாலாக நிர்ணயிக்கும் பொருட்டு, டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படலாம்.

ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.55,000 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் வாய்ப்புள்ளது. யமஹா ஃபஸினோ மற்றும் சுஸுகி ஆக்சஸெஸ் ஸ்கூட்டர்களுக்கு போட்டியை தரும்.

English summary
Japanese two-wheeler manufacturer Honda is testing a new scooter on the Indian roads. Yes, GaadiWaadi has spotted the Scoopy scooter being tested in the country.
Story first published: Tuesday, September 5, 2017, 13:58 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos