புதிய மைல்கல்: நவராத்திரி முதல் நாளில் இருசக்கர வாகன விற்பனையை தெறிக்கவிட்ட ஹோண்டா...!!

Written By:

ஹோண்டா நிறுவனம் இந்தாண்டின் நவராத்திரி முதல்நாளில் மட்டும் பைக், ஸ்கூட்டர் உட்பட 50,000 இருசக்கர வாகனங்களை விற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

நவராத்திரி முதல் நாள் விற்பனை: ஹோண்டா புதிய மைல்கல்..!!

ஹோண்டாவின் இருசக்கர வாகன தயாரிப்பு பிரிவான 'ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்திற்கு 2017 நவராத்திரி புதிய தொடக்கமாக அமைந்துள்ளது.

நவராத்திரி முதல் நாள் விற்பனை: ஹோண்டா புதிய மைல்கல்..!!

ஹோண்டா நிறுவனம் நவராத்திரி முதல் நாளில், ஸ்கூட்டர் மற்றும் பைக் தயாரிப்புகளில் 50,000-க்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நவராத்திரி முதல் நாள் விற்பனை: ஹோண்டா புதிய மைல்கல்..!!

இதை விற்பனையை கடந்தாண்டு இதே நாளுடன் ஒப்பிட்டு பார்த்தால் ஹோண்டா 2017 நவராத்திரி முதல் நாளில் 122 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

நவராத்திரி முதல் நாள் விற்பனை: ஹோண்டா புதிய மைல்கல்..!!

விழாக்காலம் தொடங்கியுள்ளதால் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். நவராத்திரி மொத்தம் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை.

நவராத்திரி முதல் நாள் விற்பனை: ஹோண்டா புதிய மைல்கல்..!!

அதனால் நவராத்திரி முடிய இன்னும் எட்டு நாட்கள் மீதமிருக்கிறது. இதனால் ஹோண்டாவிற்கான விற்பனை திறன் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நவராத்திரி முதல் நாள் விற்பனை: ஹோண்டா புதிய மைல்கல்..!!

இப்படி ஒரு புதிய மைல்கல்லை எட்ட ஹோண்டாவின் திட்டமிடலே காரணம். இந்தியளவில் உள்ள ஹோண்டாவின் விற்பனை மையங்களிலும் நவராத்திரியை ஒட்டி மூன்கூட்டியே வாகனங்கள் இருப்பு வைக்கப்பட்டன.

நவராத்திரி முதல் நாள் விற்பனை: ஹோண்டா புதிய மைல்கல்..!!

இதன் காரணமாக ஹோண்டா தயாரிப்புகளை வாங்க, வாடிக்கையாளர்கள் பெரியளவில் சிரமங்களை அனுபவிக்கவில்லை.

இதுபோன்ற துரித நடவடிக்கை காரணமாக வரக்கூடிய நாட்களிலும் ஹோண்டாவின் விற்பனை திறன் அதிகரிக்கும்.

நவராத்திரி முதல் நாள் விற்பனை: ஹோண்டா புதிய மைல்கல்..!!

ஹோண்டா வாடிக்கையாளர்களை கவர கவனமீர்க்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நவராத்திரி முதல் நாள் விற்பனை: ஹோண்டா புதிய மைல்கல்..!!

பண்டிகை காலத்தில் கிடைக்கும் வருவாயை குறிவைத்து, விற்பனையை அதிகரிக்க ஹோண்டா ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததாக கூறினார் யாத்வீந்தர் சிங் குலேரியா.

நவராத்திரி முதல் நாள் விற்பனை: ஹோண்டா புதிய மைல்கல்..!!

ஹோண்டா விற்பனை பிரிவின் துணை தலைவரான இவர், 2017 நவராத்திரி முதல் நாளில் அந்நிறுவனம் 122 சதவீத விற்பனையை எட்ட முக்கிய காரணமாக இருந்தவர்.

நவராத்திரி முதல் நாள் விற்பனை: ஹோண்டா புதிய மைல்கல்..!!

விழாக்கால விற்பனைக்காக கர்நாடகாவில் உள்ள ஹோண்டாவின் புதிய தயாரிப்பு ஆலையில் வழக்கத்தை விட கூடுதல் வாகன உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி முதல் நாள் விற்பனை: ஹோண்டா புதிய மைல்கல்..!!

கூடுதலாக 50,000 யூனிட் வரை இருசக்கர வாகன உற்பத்தியை அதிகரிக்க ஹோண்டாவின் தலைமை அந்த ஆலைக்கு உத்தரவிட்டுள்ளது.

நவராத்திரி முதல் நாள் விற்பனை: ஹோண்டா புதிய மைல்கல்..!!

இந்தாண்டில் இருசக்கர வாகன விற்பனையில் ஹோண்டா வெளியிட்ட புதிய மாடல்கள், புதிய விளம்பர யுக்தி, சலுகைகள், திட்டமிடல் போன்ற செயல்பாடுகளால் ஹோண்டா புதிய மைல்கல்லை எட்டி பிடித்துள்ளது.

நவராத்திரி முதல் நாள் விற்பனை: ஹோண்டா புதிய மைல்கல்..!!

ஹோண்டாவின் இந்த விற்பனை திறன் நவராத்திரி தான் என்றில்லை, விநாயகர் சதுர்த்தி, ஓணம் போன்ற காலங்கள் முதலே உச்சத்தில் தான் உள்ளது.

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Read in Tamil: Honda Sells Over 50,000 Two Wheelers on First Day of Navarathiri. Click for Details...
Story first published: Saturday, September 23, 2017, 11:11 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark