விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட ஆயத்தமாகி வரும் ஹோண்டா நிறுவனம்: முழு தகவல்கள்..!!

விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட ஆயத்தமாகி வரும் ஹோண்டா நிறுவனம்: முழு தகவல்கள்..!!

By Arun

வரும் ஜூலை 1, 2017 முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறை அமலாக உள்ளதால் இருசக்கர வாகனங்களில் விலை கனிசமாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

விரைவில் விலை குறைய உள்ள ஹோண்டா பைக்குகள்..!!

ஜிஎஸ்டி அமலாவதற்கு முன்னதாகவே சில நிறுவனங்கள் தங்கள் இருசக்கர வாகனங்களில் விலையை குறைத்துள்ள நிலையில், ஜிஎஸ்டி அமலாகும் நாளில் ஹோண்டா நிறுவனம் அதிரடி விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரியவருகிறது.

விரைவில் விலை குறைய உள்ள ஹோண்டா பைக்குகள்..!!

நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் ரகமான ஆக்டிவா , யூனிகார்ன் உள்ளிட்ட ஹோண்டா மாடல்களின் விலை அடுத்த வாரம் முதல் குறைய உள்ளதாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் விலை குறைய உள்ள ஹோண்டா பைக்குகள்..!!

ஜிஎஸ்டி அமலானவுடன் ஹோண்டா மாடல்களின் விலையில் 3-5 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

விரைவில் விலை குறைய உள்ள ஹோண்டா பைக்குகள்..!!

இதுவரையில் புனேவைச் சேர்ந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம், சென்னையைச் சேர்ந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த யுஎம் மோட்டார்சைக்கிள் ஆகிய நிறுவனங்கள் விலை குறைப்பை அறிவித்துள்ளன.

விரைவில் விலை குறைய உள்ள ஹோண்டா பைக்குகள்..!!

இதனைத் தொடர்ந்து நாட்டின் இரண்டாவது பெரிய இருசக்கர வாகன நிறுவனமான ஹோண்டாவும் விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட ஆயத்தமாகி வருகிறது.

விரைவில் விலை குறைய உள்ள ஹோண்டா பைக்குகள்..!!

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத் தலைவர் குலேரியா கூறுகையில், ஹோண்டா நிறுவனம் ஜிஎஸ்டி மூலம் எவ்வளவு பலன்களை அடைய இருக்கிறதோ, அதை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என தெரிவித்தார்.

விரைவில் விலை குறைய உள்ள ஹோண்டா பைக்குகள்..!!

ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான விலை குறைப்பு அறிவிப்பு ஜூலை1ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் விலை குறைய உள்ள ஹோண்டா பைக்குகள்..!!

எனினும், இந்த விலை குறைப்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும், ரகங்களை பொருத்து வேறுபாடு இருக்கலாம்.

விரைவில் விலை குறைய உள்ள ஹோண்டா பைக்குகள்..!!

இந்நிலையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் 350சிசிக்கு மேற்பட்ட இஞ்சின் திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு 3 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது.

விரைவில் விலை குறைய உள்ள ஹோண்டா பைக்குகள்..!!

இதன் காராணமாக ராயல் என்ஃபீல்டு, பஜாஜ்-கேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரீமியம் ரகங்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Read in Tamil about Honda to slash its prices on models after implementing gst tax.
Story first published: Friday, June 23, 2017, 10:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X