ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளுக்கு போட்டியாக வரும் ஹோண்டாவின் புதிய பைக்

Written By: Azhagar

இந்தியாவில் எங்குகானினும் ராயல் என்ஃபீலிடு மோட்டார் சைக்கிள்கள் சாலைகளில் பெருக்கெடுக்க ஆரம்பித்து விட்டன. இதை மனதில் வைத்து இனி மிடில்வெயிட் மோட்டார் சைக்கிள்களை தாயாரிக்க ஹோண்டா முடிவு செய்துள்ளது.

ராயல் என்ஃபீல்டை கவிழ்க்க ஹோண்டா வகுக்கும் புது யுக்தி

250cc முதல் 800cc வரை திறன் இருக்கக்கூடிய இருசக்கர வாகனங்கள், மிடில் வெயிட் மோட்டார் சைக்கிள்கள் என ஆட்டோமைபைல் உலகில் சொல்லப்படுகின்றன. இதுபோன்ற திறன் கொண்ட வண்டிகளில் இந்தியாவில் இன்றும் முதன்மையாக இருப்பது ராய்ல் என்ஃபீல்ட் நிறுவனம் தான்.

ராயல் என்ஃபீல்டை கவிழ்க்க ஹோண்டா வகுக்கும் புது யுக்தி

தினம் தினம் இந்தியர்களிடையே ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளுக்கு ஆதரவு பெருகுவதை மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் உற்றுநோக்கிதான் வருகின்றன. ஆனால் REக்கு வெளிப்படையான போட்டியை ஹோண்டா நிறுவனம் தான் முதலில் அறிவித்துள்ளது.

ராயல் என்ஃபீல்டை கவிழ்க்க ஹோண்டா வகுக்கும் புது யுக்தி

மிடில்வெயிட் வண்டிகளை தயாரிக்கும் அறிவிப்பை தெரிவித்ததோடு மட்டும் நிற்காமல், அதற்கான பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளது ஹோண்டா நிறுவனம்.

அதில் முதற்கட்டமாக ஹோண்டாவின் ஜப்பான் மற்றும் தாய்லாந்து தொழிற்சாலைகளில் பணியாற்றும் பல பொறியாளர்களை இந்தியாவில் பணியாற்ற அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டை கவிழ்க்க ஹோண்டா வகுக்கும் புது யுக்தி

இந்தியா வந்துள்ள ஹோண்டாவின் வெளிநாட்டு பொறியாளர்கள், ஒரு மிடில்வெயிட் மோட்டார் சைக்கிள் மாடல் ஒன்றை உருவாக்குவார்கள். அந்த மாடல் மோட்டார் சைக்கிள்கள் உலகதரத்திலான தயாரிப்பாக இருக்கும்.

ராயல் என்ஃபீல்டை கவிழ்க்க ஹோண்டா வகுக்கும் புது யுக்தி

ஹோண்டா அனைத்துலக மிடில்வெயிட் மாடல் மோட்டார் சைக்கிளை தயாரிப்பதற்கான பின்னணி, மிதமிஞ்சிய தனம். காரணம் இந்திய மார்க்ட்டில் ஹோண்டாவின் இந்த புதிய மோட்டார் சைக்கிள்கள் ஹிட்டடித்து விட்டால், RE மற்ற நாடுகளை குறிவைக்கும்.

அப்படி RE முந்துவதற்குள், ஹோண்டாவின் இந்த மிடில்வெயிட் மோட்டார் சைக்கிள் எல்லா நாடுகளிலும் கால் பதித்துவிடும். இதுவே ஹோண்டா மிடில்வெயிட் வண்டிகளை தயாரிப்பதற்கான பின்னணி.

ராயல் என்ஃபீல்டை கவிழ்க்க ஹோண்டா வகுக்கும் புது யுக்தி

ஹோண்டாவின் இந்த அறிவிப்பை குறித்து ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் ஈச்சர் மோட்டார்ஸ் லிமிடெட் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

காரணம், ஈச்சர் மோட்டார்ஸ் லிமிடெடிற்கு சித்தார்த் லால் தலைமை செயல் அதிகாரியான பின்பு, அந்நிறுவனத்தின் வளர்ச்சி வெளிநாடுகளில் கனிசமாகவே உள்ளன.

ராயல் என்ஃபீல்டை கவிழ்க்க ஹோண்டா வகுக்கும் புது யுக்தி

மிடில்வெயிட் திறனில் இருக்கக்கூடிய ராயல் என்ஃபீல்ட்டின் மோட்டார் சைக்கிள்கள் கடந்தாண்டு 70.56 சதவித அளவில் மற்ற நாடுகளில் விற்பனையாகியுள்ளது. இது மிகபெரிய சாதனை என்றே அட்டோமொபைல் உலகில் பார்க்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டை கவிழ்க்க ஹோண்டா வகுக்கும் புது யுக்தி

இதை ஹோண்டாவும் கவனித்துள்ளது, இருந்தாலும் RE நிறுவனத்திற்கு போட்டிகளமாக ஹோண்டா இந்தியாவையே தேர்ந்தெடுள்ளது. இதுகுறித்து பேசிய ஆசியவிற்கான ஹோண்டாவின் செயல் அதிகாரி ரோரிஅக்காய் அபே

"ராயல் என்ஃபீல்ட் இந்தியாவில் வலிமையான வியாபாரத்தை பெற்றிருகிறது. குறிப்பாக மிடில்வெயிட் மோட்டார் சைக்கிள் விற்பனையின் RE இங்கு அசுர வளர்ச்சியில் உள்ளது. அந்த வளர்ச்சி தான் எங்களுக்கான நோக்கமும், அதனால் தான் இந்தியாவில் நாங்கள் மிடில்வெயிட் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய ஆர்வமாக உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

ராயல் என்ஃபீல்டை கவிழ்க்க ஹோண்டா வகுக்கும் புது யுக்தி

ஹோண்டாவின் இந்த அறிவிப்பை ஆட்டோமொபைல் துறையில் ஆலோசராக இயங்கும் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்தியாவில் தான் பைக் தயாரிப்புகளுக்கான கட்டமைப்புகள் எளிதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ராயல் என்ஃபீல்டை கவிழ்க்க ஹோண்டா வகுக்கும் புது யுக்தி

இந்தியாவில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் 535cc எஞ்சின் பவர் வரை பெற்ற வண்டிகளை மட்டுமே இதுவரை தாயாரித்துள்ளன. இதில் மேலும் ஒரு மைக்கல்லாக இந்திய சாலைக்கான 750ccயில் மோட்டார் சைக்கிளை தாயாரிக்கும் பணியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.

ராயல் என்ஃபீல்டை கவிழ்க்க ஹோண்டா வகுக்கும் புது யுக்தி

ஆக, மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் வாங்கும் திறன் ஆகியவற்றில் இந்தியா பெரிய வளர்ச்சி காண இருக்கிறது. அதற்கான அடித்தளமாகவே ஹோண்டாவின் அறிவிப்பை நாம் எடுத்துக்கொள்வோமாக.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

டிராக்குகளில் ஓட்டுவதற்காக ஹோண்டா தயாரிப்பான ஆஃபிரிக்க ட்வின் மோட்டார் சைக்கிள்களின் புகைப்பட தொகுப்பை கீழே உள்ள கேலரியில் பாருங்கள்

English summary
Honda has formed a team of engineers to work in India and develop a global middleweight motorcycle to compete with Royal Enfield
Story first published: Friday, March 17, 2017, 16:10 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark