தானாக பேலன்ஸ் செய்யும் ஹோண்டாவின் புதுமையான பைக் அறிமுகம்!

Written By:

இருசக்கர வாகன உலகின் முடிசூடா மன்னனாக ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா விளங்கி வருகிறது. மிகச் சிறந்த எஞ்சின்களை தயாரித்து வழங்கி வரும் ஹோண்டா தற்போது இருசக்கர வாகனத் துறையில் புதிய அத்தியாயத்திற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

ஆம், அமெரிக்காவில் நடந்து வரும் சிஇஎஸ் மின்னணு தொழில்நுட்பத் துறை கண்காட்சியில் தானாக சமன் செய்து செல்லும் புதிய பைக்கை ஹோண்டா அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த பைக் தானாக பேலன்ஸ் செய்து கொள்வதோடு, தானாகவே கட்டுப்படுத்திக் கொள்ளும் விசேஷ தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. இந்த பைக்கின் கூடுதல் தகவல்கள், வீடியோவை தொடர்ந்து பார்க்கலாம்.

 தானாக பேலன்ஸ் செய்யும் ஹோண்டாவின் புதுமையான பைக் அறிமுகம்!

ஹோண்டா Riding Assist Concept என்ற பெயரில் இந்த பைக் குறிப்பிடப்படுகிறது. ஹோண்டா நிறுவனத்தின் அஸிமோ எந்திர மனிதனில் பயன்படுத்தப்பட்டிருக்கும் விசேஷ தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவு நுட்பமும், UNI-CUB தானாக சமன் செய்து செல்லும் போக்குவரத்து சாதனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பத்தையும் கலந்து இந்த புதிய பைக் கான்செப்ட்டை ஹோண்டா தயாரித்துள்ளது.

 தானாக பேலன்ஸ் செய்யும் ஹோண்டாவின் புதுமையான பைக் அறிமுகம்!

தற்போது இந்த பைக் குறைவான வேகத்தில் செல்லும்போது தானாக சமன் செய்து கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, மணிக்கு 3 மைல் வேகம் வரை செல்லும்போது தானாக சமன் செய்து கொண்டு ஓடும். ஒரு சிறிய மின்மோட்டாரின் துணையுடன் ஸ்டீயரிங் அமைப்பு கட்டுப்படுத்தப்படுவதுடன், தானாக சமன் செய்து கொள்கிறது.

 தானாக பேலன்ஸ் செய்யும் ஹோண்டாவின் புதுமையான பைக் அறிமுகம்!

மேலும், ஹெட்லைட்டில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஒரு சிறிய சாதனமானது பைக் எந்த கோணத்தில் செல்கிறது என்பதை கண்டுணர்ந்து, மோட்டார் மூலமாக பைக் குறைவான வேகத்தில் செல்லும்போதும், நிற்கும்போது கீழே சாய்ந்துவிடாமல் சமன் செய்து கொள்ள உதவுகிறது.

 தானாக பேலன்ஸ் செய்யும் ஹோண்டாவின் புதுமையான பைக் அறிமுகம்!

இந்த புதிய ஹோண்டா பைக்கில் தானாக சமன் செய்து கொள்ளும் தொழில்நுட்பம் மட்டுமில்லாமல், ஓட்டுனர் துணையில்லாமல் சுயமாகவே செல்லும் திறனும் படைத்தது. இதற்காக, மூன்றாவதாக ஒரு மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் முன்புற சக்கரத்தின் அச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 தானாக பேலன்ஸ் செய்யும் ஹோண்டாவின் புதுமையான பைக் அறிமுகம்!

இந்த ரைடிங் அசிஸ்ட் தொழில்நுட்பத்தை எந்தவொரு மோட்டார்சைக்கிளிலும் எளிதாக இணைக்கும் வாய்ப்புள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும், மோட்டார்சைக்கிளின் முன்புறத்திலேயே இந்த இரண்டு தொழில்நுட்ப கருவிகளையும் பொரு்ததிவிட முடியும் என்கிறது ஹோண்டா.

 தானாக பேலன்ஸ் செய்யும் ஹோண்டாவின் புதுமையான பைக் அறிமுகம்!

கார்களில் தானியங்கி தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், இருசக்கர வாகனத்திலேயே தானாக சமன் செய்து கொள்ளும் தொழில்நுட்பத்தையும், சுயமாக செல்லும் தொழில்நுட்பத்தையும் புகுத்தி அசத்தியுள்ளது ஹோண்டா நிறுவனம். இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்போது, எந்த வேகத்திலும் பைக் தானாக சமன் செய்து செல்லும் வாய்ப்பு கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாருடைய துணையும் இல்லாமல் தானாக செல்லும் ஹோண்டா பைக்கின் மாயாஜாலத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி எப்படி இருக்கு?

விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
The Honda Riding Assist concept motorcycle is able to self-balance and even follow its owner to be parked.
Story first published: Saturday, January 7, 2017, 11:31 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos