இந்தியாவில் கொண்டாடப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி தெரியுமா..??

இந்தியாவில் கொண்டாடப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி தெரியுமா..??

By Azhagar

1955ம் ஆண்டில் ரெட்டிச் மற்றும் மெட்ராஸ் மோட்டார்ஸ் கூட்டணியில் முதன்முதலாக ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

உலகளவில் வியாபித்திருக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

ஆரம்பக்கால கட்டத்தில் ராயல் என்ஃபீல்டு தயாரித்த 350சிசி மற்றும் 500சிசி திறன் பெற்ற மோட்டார் சைக்கிள் இந்திய ராணுவ தேவைக்காக பயன்படுத்தப்பட்டன.

உலகளவில் வியாபித்திருக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

பிறகு 1962ம் ஆண்டு முதல் இந்தியாவிலேயே அதனுடைய பைக் தயாரிப்பு பணிகளை தொடங்கியது. இதுதான் இந்தியர்கள் கொண்டாடும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் வரலாற்றுச்சுருக்கம்.

Recommended Video

TVS Apache RR 310 Launched In India | Specs | Top Speed | Mileage | Price
உலகளவில் வியாபித்திருக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

இந்தியாவில் விற்பனையை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, ராயல் என்ஃபீல்டு தனக்கான வாடிக்கையாளர்களை உருவாக்க தொடங்கியது.

உலகளவில் வியாபித்திருக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

சிறியவர்கள் பெரியவர்கள் என, நகரப்புற, கிராம்புறங்கள் என நமது நாட்டின் இண்டு இடுக்கு சந்து பொந்து என பல பகுதிகளில் எல்லாம் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் வியாபிக்க தொடங்கின.

உலகளவில் வியாபித்திருக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இங்கு இது ஒரு உயர் படி நிலையை அடைந்திருக்கின்றன.

நமக்கான சொந்தமாக பார்க்கப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் வெளிநாடுகளில் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன. தொடர்ந்து பார்க்கலாம்.

உலகளவில் வியாபித்திருக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

ஆஸ்திரெலியாவின் சிட்னி நகரில் வசிக்கும் ஒருவர், ராயல் என்ஃபீல்டின் புகழ்பெற்ற கிளாசிக் 500 மாடலை பயன்படுத்தி வருகிறார்.

இந்தியாவை விட அந்த நாட்டில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களின் விலை அதிகம். காரணம் அங்கும் பெரியளவில் எந்த வாகன தயாரிப்பு ஆலைகளும் கிடையாது.

உலகளவில் வியாபித்திருக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

இறக்குமதியை நம்பி தான் ஆஸ்திரேலியாவின் வாகன உலகம் செயல்படுகிறது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500சிசி மாடல் விலை அங்கு இந்திய மதிப்பில் ரூ. 4 லட்சம்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடலை பயன்படுத்தி வரும் அந்த ஆஸ்திரேலியாக்காரர், இந்தியாவை போல தங்கள் நாட்டில் இது கொண்டாடப்படும் மாடல் இல்லை.

உலகளவில் வியாபித்திருக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

பெரும்பாலும் ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளை நடுத்தர வயதுக்காரர்கள் மற்றும் கிளாசிக் விரும்பிகள் மட்டும் தான் அதிகம் பயன்படுத்தி வருவதாக அவர் கூறுகிறார்.

உலகளவில் வியாபித்திருக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

அமெரிக்காவில் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் சிறியளவில் முக்கியத்துவம் பெறுகின்றன. ராயல் என்ஃபீல்டின் அதீத காதலர்களும் அல்லது சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் விரும்பிகள் மட்டுமே இதை பயன்படுத்துகின்றனர்.

உலகளவில் வியாபித்திருக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

இந்தியாவில் க்ரூஸர் ரக பைக்குகளுக்கு என்று பிரத்யேகமான சாலை அமைப்புகள் இல்லை. ஆனால் வெளிநாடுகளில் நிலைமையே வேறு.

பெரும்பாலான சாலைகள் பெரிய இடைவெளிகள் மற்றும் க்ரூஸர் பைக்குகள் செல்வதற்கான வசதிகள், கட்டமைப்புகள் ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும்.

உலகளவில் வியாபித்திருக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

இங்கிலாந்தில் டவுன் -ரைடிங் தேவைகளுக்கு ராயல் என்ஃபீல்டு பைக்குகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு இதற்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டமே உள்ளது.

அதுமட்டுமில்லாமல் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தாயகம் இங்கிலாந்து தான். அந்த நாட்டினர் எப்போதுமே தங்கள் நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள்.

உலகளவில் வியாபித்திருக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

இங்கிலாந்தில் தான் முதன்முறையாக 650சிசி பேரலல் ட்வின் எஞ்சினை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இ.ஐ.சி.எம்.ஏ 2017 கண்காட்சியில் அறிமுகம் செய்தது.

உலகளவில் வியாபித்திருக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

விரைவில் வெளிவரும் தி இண்டர்செப்டர் மற்றும் கான்டினென்ட்டல் ஜிடி 650 ஆகிய மாடல்களில் இந்த எஞ்சின் இடம்பெறவுள்ளது. அதனால் இதற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

உலகளவில் வியாபித்திருக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு மட்டும் தான். ஆனால் மற்ற நாடுகளில் அப்படி கிடையாது. செயல்திறன் மிக்க, நம்பகத்தகுந்த பல்வேறு பைக் மாடல்களை பிற நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

இருப்பினும் வெளிநாடுகளில் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் வைத்திருப்பவர்களுக்கு பெரியளவில் மதிப்பும், அடையாளமும் கிடைக்கிறது.

உலகளவில் வியாபித்திருக்கும் ராயல் என்ஃபீல்டு..!!

டூ-வீல்டு பவர்ஹவுஸ் பெற்ற பைக்குகள் என்றில்லாமல்,பலரிடம் இருந்து ராயல் என்ஃபீல்டு பைக்குகள் தனித்து தெரிவதால் இந்த பெருமை கிடைக்கின்றன.

தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்தியாவில் தொடர் வரவேற்பில் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் இருந்து வருகின்றன. குறிப்பாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் இவை எப்படி இருந்ததோ அதேபோன்று தான் ராயல் என்ஃபீல்டு மாடல்கள் இப்போதும் காட்சியளிக்கின்றன.

Most Read Articles
English summary
Read in Tamil: Royal Enfield Motorcycles Famous Outside India. Click for Details...
Story first published: Saturday, December 16, 2017, 17:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X