டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக்!

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக்: அறிமுக விபரம்!

மின்சார கார், பைக்குகளுக்கான வரவேற்பு இன்னும் சில ஆண்டுகளில் வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. மின்சார வாகனங்களுக்கான வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, பல நிறுவனங்கள் மின்சார கார் மற்றும் பைக்குகளை தயாரிக்கும் முனைப்பில் உள்ளன.

Recommended Video

This McLaren 720S Costs Only 30 Bitcoins While Others Cost $285,000
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக்: அறிமுக விபரம்!

அந்த வகையில், பெங்களூரை சேர்ந்த எம்ஃப்ளக்ஸ் என்ற ஸ்டார்ட் - அப் நிறுவனம் புதிய மின்சார சூப்பர் பைக்கை உருவாக்கி இருக்கிறது. எம்ஃப்ளக்ஸ் மாடல்-1 என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த எலக்ட்ரிக் சூப்பர் பைக் வரும் பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடக்க இருக்கும் சர்வதேச வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக்: அறிமுக விபரம்!

இந்த புதிய மின்சார பைக்கானது 650சிசி ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையான திறனை பெற்றதாக இருக்கும். இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 200 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக்: அறிமுக விபரம்!

மேலும், துவக்க நிலையில் இருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும். இந்த அதிசெயல்திறன் மிக்க மின்சார சூப்பர் பைக்கில் லிக்யூடு கூல்டு ஏசி இன்டக்ஷன் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக்: அறிமுக விபரம்!

இந்த சூப்பர் பைக்கின் மின் மோட்டார் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 84 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த சூப்பர் பைக்கில் சாம்சங் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக்: அறிமுக விபரம்!

இந்த புதிய எலக்ட்ரிக் சூப்பர் பைக்கில் இரண்டு சக்கரங்களுக்குமான கான்டினென்டல் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 7 அங்குல தொடுதிரை வசதியுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஜிபிஎஸ் நேவிகேஷன், வாகனத்தில் இருக்கும் பழுதை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதிகள் உண்டு.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக்: அறிமுக விபரம்!

இது ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட முழுமையான சூப்பர் பைக் மாடலாக இருக்கும் என்று எம்ஃப்ளக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இதன் நேக்கடு ஸ்டைல் மாடலையும் மாடல்-2 என்ற பெயரில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறி இருக்கிறது.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக்: அறிமுக விபரம்!

எம்ஃப்ளக்ஸ் மாடல்-2 பைக் மாடலானது, முழுமையாக சார்ஜ் செய்யும்போது 150 கிமீ தூரம் பயணிக்கும் ஒரு மாடலிலும், 220 கிமீ தூரம் வரை பயணிக்கும் மாடலிலும் கிடைக்கும். இந்த மின்சார சூப்பர் பைக்கிற்கான எஞ்சின், ட்ரான்ஸ்மிஷன், கட்டுப்பாட்டு சாதனங்கள், பேட்டரி மேலாண்மை கருவிகள் அனைத்தையும் எம்ஃப்ளக்ஸ் சொந்த முயற்சியில் உருவாக்கி இருக்கிறது.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக்: அறிமுக விபரம்!

இந்த புதிய மின்சார சூப்பர் பைக் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
As per ET Auto, the startup will launch Emflux Model 1 at the Auto Expo and will compete in the 600-650cc motorcycle segment.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X