மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்லும் புதிய மின்சார ஸ்கூட்டர்... தயாரிப்பில் தீவிரம்..!!

Written By:

பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர்களை விட அதிவேக திறனை பெற்ற மின்சார ஸ்கூட்டர் ஒன்று இந்தியாவில் துரித கதியில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் மின்சார ஸ்கூட்டர்..!!

மணிக்கு 110கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ஸ்கூட்டருக்கு கூகூ ஒன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இதனுடைய பேட்டரி திறன், வேக கட்டுப்பாட்டு அளவு உள்ளிட்டவற்றை காட்ட டிஜிட்டல் திரையும் உள்ளது.

பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் மின்சார ஸ்கூட்டர்..!!

தற்போது சோதனை முயற்சியாக தயாராகி வரும் இந்த ஸ்கூட்டர் பார்க்க சாதாரணமாக தெரிந்தாலும், இதனுடைய திறன் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பிரபல மாடல் ஸ்கூட்டர்களையே தூக்கி சாப்பிட்டு விடும்.

பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் மின்சார ஸ்கூட்டர்..!!

உயர் ரக அலுமனியம் மற்றும் மைல்டு உலோகத்தால் ஆன இந்த ஸ்கூட்டரின் பேட்டரி அதிக திறன் கொண்டது. மேலும் அனைத்து வித உபகரணங்களையும் சேர்த்து மொத்தமாகவே கூ கூ ஒன் ஸ்கூட்டர் 75 கிலோ தான்.

பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் மின்சார ஸ்கூட்டர்..!!

இதனால் மிகவும் இலகுவான இயக்கம் கிடைப்பதோடு கையாளவும் கூகூ ஒன் மின்சார ஸ்கூட்டர் எளிதாக உள்ளது. இது துவக்க நிலையில் இருந்து 60கி.மீ வேகத்தை வெறும் 7 நொடிகளில் எட்டிவிடும்.

பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் மின்சார ஸ்கூட்டர்..!!

கூகூ ஒன் ஸ்கூட்டருடைய பேட்டரியில் தான் விசேஷமே உள்ளது. லித்தியம் ஃபெரோ ஃபாஸ்பேட்டாலான இதன் பேட்டரி 10 ஆண்டுகள் வாழ்நாள் மற்றும் 60,000 கி.மீ வரை இயங்கும் திறன் பெற்றது.

Recommended Video - Watch Now!
Jeep Dealership Executives In Mumbai Beat Up Man Inside Showroom
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் மின்சார ஸ்கூட்டர்..!!

மிகவும் குறைவான இடட்தில் அமைக்கப்பட்டுள்ள - இதன் பேட்டரி, 60 டிகிரி வரை சூடு தாங்கும். ஒரு மணிநேரத்தில் 80% சார்ஜிங் ஆகும் திறன் பெற்றுள்ள பேட்டரி, 120 கி.மீ வரை இயங்கும்.

பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் மின்சார ஸ்கூட்டர்..!!

தண்ணீரால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பது, கையாளுதல் மற்றும் எஞ்சின் செயல்பாடு ஆகியவை சிறந்தவையாக அமையும் வகையில் இந்த பேட்டரி தயாராகியுள்ளது.

பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் மின்சார ஸ்கூட்டர்..!!

மின்சார திறன் இயக்கத்திற்கு ஏற்றவாறு 6.7 பிஎச்பி முதல் 20 பிஎச்பி வரை கூகூ ஸ்கூட்டர் பவர் வழங்கும்.

பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் மின்சார ஸ்கூட்டர்..!!

முன்பக்க சக்கரத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்க சக்கரத்தில் டூயல் ஸ்பிரிங் செட்-அப் ஆகியவை கூகூ ஸ்கூட்டருக்கான சன்பென்ஷன் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

கூ கூ ஸ்கூட்டரின் செயல்பாட்டை விளக்கும் வீடியோ:

ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ஸ்மார்ட் கனெக்டிவெட்டி, டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் நேவிகேஷன் சிஸ்டத்தை கொண்டுள்ளன.

கூகூ ஸ்கூட்டரில் கீலெஸ், என்ட்ரி, டிஜிட்டல் செக்யூரிட்டி சிஸ்டம், ஜிபிஎஸ் தேவைகள் விரைவில் இடம்பெறும் என அதை வடிவமைத்துள்ள பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் மின்சார ஸ்கூட்டர்..!!

இதனுடைய முழு கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு பணிகள் அனைத்தும் சுமூகமாக முடிந்த பிற்பாடு, 2019ல் கூ கூ ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.

English summary
Read in Tamil: Electrically Powered gu gu one scooter can Register 110kph top speed. Click for Details...
Story first published: Wednesday, November 29, 2017, 17:05 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark