இந்தியன் மோட்டார் சைக்கிளின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

Written By: Azhagar

அமெரிக்காவின் பிரபல இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் மதுபான தயாரிப்பில் புகழ்பெற்ற ஜேக் டேனியல்ஸ் உடன் இணைந்து சீஃப்டைன் என்ற மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது. இந்த மாடலின் கீழ் 100 வண்டிகளை மட்டுமே வெளியிட இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

ஸ்பெஷலான இந்தியன் மோட்டார் சைக்கிள் அறிமுகம்

அமெரிக்காவின் பிரபல இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் மதுபான தயாரிப்பில் புகழ்பெற்ற ஜேக் டேனியல்ஸ் உடன் இணைந்து சீஃப்டைன் என்ற மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது. இந்த மாடலின் கீழ் 100 வண்டிகளை மட்டுமே வெளியிட இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

ஸ்பெஷ்லான இந்தியன் மோட்டார் சைக்கிள் அறிமுகம்

சுவிட்சலார்ந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்வீடன், நார்வே, பென்னலக்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் என ஐரோப்பா நாடுகளில், ஒரு நாட்டுக்கு தலா ஒரு மோட்டார் சைக்கிள் என்ற கணக்கில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது. தென் ஆப்ரிக்கா, ஸ்பெயின் நாடுகளிலும் சீஃப்டைன் மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஸ்பெஷ்லான இந்தியன் மோட்டார் சைக்கிள் அறிமுகம்

இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம், ஜேக் டேனியல்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ள சீஃப்டைன் மோட்டார் சைக்கிளை அமெரிக்காவின் சவுத் டக்கோடா மாகணத்தை சேர்ந்த கிளாக் வெர்க்ஸ் கஸ்டம் சைக்கிள் ஆஃப் மிச்செல் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ஸ்பெஷ்லான இந்தியன் மோட்டார் சைக்கிள் அறிமுகம்

கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த வண்டியின் சில இடங்களில் சார்க்கோல் நிறமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியன் மோட்டார் சைக்கிள் என்ற பெயருடன் சீஃப்டைன் வண்டியில் ஜேக் டேனியல்ஸின் முத்திரையும் இடம்பெற்றுள்ளது.

ஸ்பெஷ்லான இந்தியன் மோட்டார் சைக்கிள் அறிமுகம்

ஜேக் டேனியல்ஸின் முத்திரை வண்டியில் கால்வைக்கும் இடம், டேங்கிற்கான பை, டேங்கின் கன்சோல் வண்டியின் முன்புறம் மற்றும் பின்புறம் என மொத்தம் 6 இடங்களில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஹார்னை தொடும் இடத்தில் ஜேக் டேனியல்ஸின் முத்திரை சில்வர் நிறத்தில் பதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெஷ்லான இந்தியன் மோட்டார் சைக்கிள் அறிமுகம்

இந்தியன் மோட்டார் சைக்கிள்களை பிரத்யேகமாக விறகும் போலார் இன்டஸ்டீர்ஸின் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்டீவ் மென்னெட்டோ "கிளாக் வெர்க்ஸ் கஸ்டம் சைக்கிள் ஆஃப் மிச்செல் நிறுவனம் வண்டியை கச்சிதமாக தயாரித்திருக்கின்றனர். வண்டியின் உருவாக்கம் டஃபான, வேகத்தை கொண்ட கோணங்களில் உருவாக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.

சீஃப்டைன் டார்க் ஹார்ஸ் மோட்டார் சைக்கிளின் புகைப்படங்களை கீழே உள்ள கேலரியில் பார்க்கலாம்

English summary
Indian Motorcycle has revealed the Jack Daniel's edition of the Chieftain. Only 100 units of the special edition motorcycle will be manufactured

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark