ஜிஎஸ்டி எதிரோலி: இந்தியாவில் விலை குறைந்த இந்தியன் மோட்டார் சைக்கிள் பைக்குகள்..!!

Written By:

பொருட்கள் மற்றும் சேவைக்கான ஜிஎஸ்டி வரி வதிப்பு முறை நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இது பழைய கதை.

இதில் புதிது என்ன என்றால், இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் பைக்குகள் ஜிஎஸ்டி-யால் இந்தியாவில் விலை குறைந்துள்ளது.

இந்தியன் மோட்டார் சைக்கிள் பைக்குகளின் விலை குறைந்தது..!!

350சிசி-க்கு மேல் திறன் பெற்ற பைக்குகள் ஜிஎஸ்டி-யின் அமலாக்கத்தால் விலை குறைந்திருந்தாலும், அதற்கு செஸ் வரி கூடுதலாக இணையும்.

இந்தியன் மோட்டார் சைக்கிள் பைக்குகளின் விலை குறைந்தது..!!

பெரியளவில் இந்தியன் மோட்டார் சைக்கிள் தயாரிப்புகளின் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. இருந்தாலும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக இருந்த விலையை விட, தற்போது பைக்குகளில் விலை குறைந்திருக்கின்றன.

இந்தியன் மோட்டார் சைக்கிள் பைக்குகளின் விலை குறைந்தது..!!

இந்தியன் மோட்டார் சைக்கிளின் புதிய விலை பட்டியலில் இந்தியன் சீஃப் கிளாசிக் பைக்கின் மாடல் அதிகளவில் விலை குறைப்பை பெற்றுள்ளது.

இந்தியன் மோட்டார் சைக்கிள் பைக்குகளின் விலை குறைந்தது..!!

ஜிஎஸ்டி-க்கு பிறகான இந்தியன் மோட்டார்சைக்கிள் பைக்குகளின் புதிய விலை (எக்ஸ்-ஷோரூம்)

மாடல் ஜிஎஸ்டி-க்கு முன்T ஜிஎஸ்டி-க்கு பின் விலையில் உள்ள வேறுபாடு
இந்தியன் ஸ்கவுட் ரூ. 14.75 லட்சம் ரூ. 12.99 லட்சம் ரூ. 1.76 லட்சம்
இந்தியன் டார்க் ஹவுஸ் ரூ. 23.4 லட்சம் ரூ. 21.25 லட்சம் ரூ. 2.15 லட்சம்
இந்தியன் சீஃப் கிளாசிக் ரூ. 24.2 லட்சம் ரூ. 21.99 லட்சம் ரூ. 2.21 லட்சம்
இந்தியன் மோட்டார் சைக்கிள் பைக்குகளின் விலை குறைந்தது..!!

ஜிஎஸ்டி வரி மதிப்பின் படி, அனைத்து ரக வாகனங்களும் ஆடம்பர தேவைகளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதனாலே அதற்கு 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் மோட்டார் சைக்கிள் பைக்குகளின் விலை குறைந்தது..!!

ஆனால் இவற்றில் உயர் ரக மாடல் பைக்குகள் அதாவது சூப்பர் பைக்குள் ஜிஎஸ்டி-யால் விலை குறைந்துள்ளது. இதனால் இந்தியாவில் இந்த மாடல் மோட்டார் சைக்கிள்களுக்கான விற்பனை திறன் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

English summary
Indian Motorcycle has also revised the prices of its three models in the Indian market. Click for Details...
Story first published: Saturday, July 8, 2017, 11:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark