கவாஸாகி எஸ்ட்ரெல்லா 175 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமாகிறது?

Written By:

பழமையான டிசைன் தாத்பரியங்களுடன் கவாஸாகி நிறுவனம் உருவாக்கியிருக்கும் புதிய எஸ்ட்ரெல்லா 175 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்கள், படங்களை இந்த செய்தியில் காணலாம்.

கவாஸாகி எஸ்ட்ரெல்லா 175 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமாகிறது?

கடந்த ஜூன் மாதம் கவாஸாகி நிறுவனம் பழமையான டிசைன் தாத்பரியத்தில் புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை உருவாக்கி வருவதாக செய்திகள் கசிந்தன. இந்த நிலையில், இந்தோனேஷியாவில் அண்மையில் இந்த மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்பட்டு கொண்டிருந்தபோது ஆட்டோமொபைல் பிரியர்களின் கண்களில் சிக்கியது.

கவாஸாகி எஸ்ட்ரெல்லா 175 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமாகிறது?

கவாஸாகி எஸ்ட்ரெல்லா 175 என்ற பெயரில் இந்த புதிய மாடல் வர இருப்பதை tmcblog.com என்ற தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. கவாஸாகி எஸ்ட்ரெல்லா 250 மோட்டார்சைக்கிளின் அடிப்படையிலான வடிவமைப்பு அம்சங்கள் இந்த மோட்டார்சைக்கிளிலும் இடம்பெற்றிருக்கும்.

கவாஸாகி எஸ்ட்ரெல்லா 175 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமாகிறது?

இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டான்டர்டு மற்றும் ஸ்பெஷல் எடிசன் என்ற இரு மாடல்களில் வர இருக்கிறது. இந்த புதிய மோட்டார்சைக்கிளில் 175சிசி டிஓஎச்சி 2 வால்வ் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், சக்தியை வெளிப்படுத்தும் திறன் குறித்த விபரங்கள் கிடைக்கவில்லை.

கவாஸாகி எஸ்ட்ரெல்லா 175 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமாகிறது?

வட்ட வடிவ ஹெட்லைட், ரியர் வியூ கண்ணாடிகள், புகைப்போக்கி குழாய் மறறும் இருக்கை அமைப்பு போன்றவை பழமையான டிசைன் தாத்பரியங்களை ஒத்திருக்கும்.

கவாஸாகி எஸ்ட்ரெல்லா 175 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமாகிறது?

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் அமைந்த சஸ்பென்ஷனும், பின்புறத்தில் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும் உள்ளன. அதேபோன்று, முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக் அமைப்பும் உள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருக்காது என்பது தகவல்.

கவாஸாகி எஸ்ட்ரெல்லா 175 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமாகிறது?

வரும் நவம்பர் மாதம் இந்தோனேஷியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, இந்த புதிய மோட்டார்சைக்கிளை இந்தியாவில் கவாஸாகி விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உறுதியான தகவல் இல்லை.

கவாஸாகி எஸ்ட்ரெல்லா 175 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமாகிறது?

ஒருவேளை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மற்றும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு போட்டியை தரும்.

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki To Launch Retro-Style Estrella 175.
Story first published: Wednesday, September 20, 2017, 18:14 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos