2018 கவாஸாகி கே.எக்ஸ் 250 எஃப் பைக் ரூ. 7.52 லட்சத்தில் இந்தியாவில் வெளியானது..!!

Written By:

கவாஸாகி மோட்டார் இந்திய நிறுவனம் மேம்படுத்தப்பட்ட கே.எக்ஸ் 250 எஃப் பைக்கை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

ரு.7.52 லட்சம் விலையில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ள இந்த ஆஃப் ரோடு பைக்கை குறித்த தகவல்கள் இனி விரிவாக.

கவாஸாகி நிறுவனம் வெளியிட்ட 2018 கே.எக்ஸ் 250 எஃப் பைக்..!!

கடந்த ஆண்டு முதன்முதலாக வெளியான கே.எக்ஸ் 250 எஃப் ஆஃப் ரோடு பைக்கை, இந்தாண்டில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கவாஸாகி அறிமுகம் செய்துள்ளது.

கவாஸாகி நிறுவனம் வெளியிட்ட 2018 கே.எக்ஸ் 250 எஃப் பைக்..!!

பழைய மாடல் கேஸிஸ் உடன், டார்க் மற்றும் சஸ்பென்ஷன் திறனில் இன்னும் கூடுதலான ஆற்றல் கிடைக்கும் வகையில் கவாஸாகி கே.எக்ஸ் 250 எஃப் பைக்கின் மேம்படுத்தப்பட்ட பணிகள் அமைந்துள்ளன.

கவாஸாகி நிறுவனம் வெளியிட்ட 2018 கே.எக்ஸ் 250 எஃப் பைக்..!!

249 சிசி திறன் பெற்ற இதன் எஞ்சின் 4-ஸ்ட்ரோக் லிக்குவிட் கூலுடன் சிங்கிள்-சிலிண்டர் கொண்டு தயாராகி உள்ளது. டார்க் திறனை அதிகரிக்க எரிவாயுவை அதிவேகத்துடன் தள்ளும் இன்சக்டார் மற்றும் புதிய திராட்டில் கொண்ட மோட்டார் போன்ற புதிய கட்டமைப்புகள் இதில் உள்ளன.

கவாஸாகி நிறுவனம் வெளியிட்ட 2018 கே.எக்ஸ் 250 எஃப் பைக்..!!

2018 கவாஸாகி கே.எக்ஸ் 250 எஃப் பைக்கின் முன்பக்கம் மற்றும் பின்பக்க சக்கரங்களில் யூனி-டிராக் கொண்ட பிரேக் அமைப்பு உள்ளது.

இதன் மூலம் செயல்திறன் மற்றும் டிரைவிங் எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவாஸாகி நிறுவனம் வெளியிட்ட 2018 கே.எக்ஸ் 250 எஃப் பைக்..!!

சில மாடிஃபிகேஷன் செய்ய விரும்புபவர்களுக்கு கவாஸாகி இந்த பைக்கின் மீது வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி இசியூ, டிஎஃப்ஐ கனக்கடர்ஸ், எஞ்சின் செயல்திறன் போன்றவற்றை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

கவாஸாகி நிறுவனம் வெளியிட்ட 2018 கே.எக்ஸ் 250 எஃப் பைக்..!!

கே.எக்ஸ் லாஞ்ச் கண்ட்ரோல் சிஸ்டம் என்ற ஒரு அமைப்பு 2018 கவாஸாகி கே.எக்ஸ் 250 மாடலில் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கிளட்ச்சை வெளியிட்ட சில விநாடிகளில் பைக் உடனே இயங்கத்தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கவாஸாகி நிறுவனம் வெளியிட்ட 2018 கே.எக்ஸ் 250 எஃப் பைக்..!!

சரிவிகதமான கண்ட்ரோலுடன் கூடிய பிரேக் அமைப்பு இந்த பைக்கில் கவனிக்க வைக்கிறது. 270 எம்.எம் அளவு கொண்ட இந்த பைக்கின் பிரேக் சிஸ்டம் பிடிமானத் திறனில் தனித்துவம் பெறுகிறது.

கவாஸாகி நிறுவனம் வெளியிட்ட 2018 கே.எக்ஸ் 250 எஃப் பைக்..!!

லைம் பச்சை வண்ணத்தில் கண்ணை பறிக்கும் தோற்றத்துடன் உள்ள கவாஸாகி கே.எக்ஸ் 250 எஃப் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி மதிப்பின் கீழ் முன்னர் இருந்த விலையை விட ஒரு சதவீத வரி அதிகரிப்பை பெற்றுள்ளது.

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Read in Tamil: 2018 Kawasaki KX250F Launched In India. Click for Price, Specification and More...
Story first published: Tuesday, July 18, 2017, 12:32 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark