இந்தியாவில் இரண்டு புதிய ஆஃப் ரோடு பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்த கவாஸாகி..!!

Written By:

கவாஸாகி, ஆஃப் ரோடுகளுக்கு தேவையான கே.எக்ஸ்.450 எஃப் மற்றும் கே.எல்.எக்ஸ் 450 ஆர் என்ற பெயர்களில் இரண்டு மாடல் மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

கவாஸாகியின் 2 புதிய ஆஃப் ரோடு பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்

டெல்லி எக்ஸ்-ஷோரூமின்படி ரூ.8.49 லட்சம் விலையில் கவாஸாகி வெளியிட்டுள்ள இந்த பைக்குகள் இந்திய சந்தையில் சிபியூ வழியின் கீழ் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவாஸாகியின் 2 புதிய ஆஃப் ரோடு பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்

முக்கியமாக இந்த மாடல் பைக்குகள் சாதாரன சாலைகளுக்கு உகந்தவை அல்ல என்றும், ஆஃப் -ரோடுகளுக்கே இவற்றின் பயன்பாடு இருக்கும் என கவாஸாகி திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

கவாஸாகியின் 2 புதிய ஆஃப் ரோடு பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்

எஞ்சின் மற்றும் சேஸிஸ் தேவைகளில் கே.எக்ஸ். 450எஃப் மாடல் மோட்டார் சைக்கிள் மிகவும் இலகுவான எடையில் கவாஸாகி தயாரித்துள்ளது.

கவாஸாகியின் 2 புதிய ஆஃப் ரோடு பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்

449சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் கொண்ட இந்த பைக் மொத்தமாக 108.8 கிலோ எடை தான். எஞ்சினின் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்த இதில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

கவாஸாகியின் 2 புதிய ஆஃப் ரோடு பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்

சஸ்பென்ஷன் தேவைகளுக்காக பைக்கின் முன்சக்கரத்தின் 49மிமீ சோவா இன்வெர்டட் ஃபிரண்டு ஃபோர்க்ஸ் உள்ளன. அதேபோல பின்பக்கத்தில் 49மிமீ அளவில் யூனி-ட்ரேக் மோனோஷாக் உள்ளது.

கவாஸாகியின் 2 புதிய ஆஃப் ரோடு பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்

பைக்கை இயக்கிய மாத்திரத்திலேயே வேகத்தை கூட்ட பைக்கின் முன்பக்கத்தில் 270மிமீ அளவிலும், பின்பக்கத்தில் 240மிமீ அளவிலும் பெடல் டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் கே.எக்ஸ். 450எஃப் மாடலில் கட்டுப்பாட்டு அமைப்பு கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது.

Recommended Video - Watch Now!
2017 DSK Benelli 302 R Launched In Inida | In Tamil - DriveSpark தமிழ்
கவாஸாகியின் 2 புதிய ஆஃப் ரோடு பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்

இதே சிரீஸில் கவாஸாகி வெளியிட்டுள்ள கே.எல்.எக்ஸ் 450ஆர் பைக்கில் 449சிசி சிங்கிள் சிலிண்டர் கொண்ட கார்பூரேடட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

கவாஸாகியின் 2 புதிய ஆஃப் ரோடு பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்

5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பைக்கில், 48மிமீ மேலிருந்து கீழாக மாற்றியமைக்கும் வசதியை கொண்ட டெலஸ்கோபிக் ஃபோர்ஸ் உள்ளது.

மற்றும் பைக்கின் பின் பகுதியில் யூனி-ட்ரேக் தேவைகளுடன் கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

கவாஸாகியின் 2 புதிய ஆஃப் ரோடு பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்

கவாஸாகி அட்டகாசமாக வெளியிட்டுள்ள இந்த ஆஃப்-ரோடு பைக்குகளில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், மின்சார தொடக்கம் மற்றும் எல்.இ.டி டெயில் விளக்குகள் போன்ற அம்சங்கள் உள்ளன.

கவாஸாகியின் 2 புதிய ஆஃப் ரோடு பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்

126 கிலோ எடைக்கொண்ட இந்த கே.எல்.எக்ஸ்450 ஆர் பைக் இதனுடன் கவாஸாகி வெளியிட்டுள்ள கே.எக்ஸ். 450எஃப் மாடலை விட சற்று எடை அதிகம்.

கவாஸாகியின் 2 புதிய ஆஃப் ரோடு பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்

இந்த இரண்டு ஆஃப்-ரோடு பைக்குகள் வெளியிட்டு பேசிய கவாஸாகி மோட்டார்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் யூட்டக்க யமஷித்தா,

"ஆஃப்-ரோடு பைக்குகளுக்கு தேவை இந்தியாவில் வளரவேண்டும். இதற்கான தேவைகளில் இந்தியா தற்போது முக்கிய சந்தையாக உள்ளது".

கவாஸாகியின் 2 புதிய ஆஃப் ரோடு பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்

"இந்த தருணத்தை பயன்படுத்திக்கொண்டு இரண்டு ஆஃப் ரோடு பைக்குகள் அறிமுகம் செய்து வைப்பதில் கவாஸாகி மகிழ்ச்சி கொள்கிறது" என்று கூறினார்.

கவாஸாகியின் 2 புதிய ஆஃப் ரோடு பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்

கவாஸாகி வெளியிட்டுள்ள இந்த இரண்டு ஆஃப் ரோடு பைக்குகள் மூலம், இந்தியாவில் அது தனது விற்பனையை இன்னும் விரிவுப்படுத்தியுள்ளது.

கவாஸாகியின் 2 புதிய ஆஃப் ரோடு பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்

குறிப்பாக இந்த இரண்டு மாடல்களில் கே.எக்ஸ் 450 எஃப் மாடல், இலகுவான எடையுடன் ஆஃப் ரோடு தேவைக்கான அத்தனை அம்சங்களையும் திருத்தமாக தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Read in Tamil: Kawasaki has launched its two off-road motorcycles, the KX450F and KLX450R in India
Story first published: Thursday, October 5, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark