பிஎஸ்-4 எஞ்சின் கொண்ட கவாஸாகி நின்ஜா 1000 பைக் இந்தியாவில் வெளியானது..!!

இந்தியாவில் களமிறங்கியது கவாஸாகி நின்ஜா 1000 பைக்; விலை, செயல்திறன், சிறப்பம்சங்களுடன் கூடிய முழுத் தகவல்கள்..!!

By Azhagar

இந்திய சந்தைக்காக குறிப்பிட்ட அளவில் தயாரிக்கப்பட்டுள்ள நின்ஜா பிஎஸ்-4 1000 மோட்டார் சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டது.

இதனுடைய திறன் வடிவமைப்பு, விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்களை இங்கே படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

கவஸாகி நின்ஜா 1000 பைக் இந்தியாவில் வெளியானது..!

கவாஸாகி நிறுவனத்தின் புதிய பிஎஸ்.4 நின்ஜா 1000 பைக் இந்திய ஆட்டோமொபைல் துறையில் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது.

இந்த பைக்கை கவாஸாகி நிறுவனம் குறிப்பிட்ட அளவில் அதாவது வெறும் 20 யூனிட் பைக்குகளே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் என தெரிவித்திருந்தது.

கவஸாகி நின்ஜா 1000 பைக் இந்தியாவில் வெளியானது..!

மத்திய அரசின் ஆணைக்கு ஏற்ப இந்த பைக்கில் பி.எஸ். 4 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 142 பிஎச்பி பவர் மற்றும் 111 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

கவஸாகி நின்ஜா 1000 பைக் இந்தியாவில் வெளியானது..!

6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட நின்ஜா 1000 மாடல் பைக்கில், கவாஸாகியின் உராய்வு கட்டுபாட்டு கருவி, ஆன் டி லாக் பிரேக் சிஸ்டம், பவர் மோட் மற்றும்

முனைகளில் வாகனம் திரும்பும் போது, அதை கட்டுக்குள் வைக்க உதவும் கவாஸாகியின் கார்னர் மேனேஜ்மெண்ட் வசதி போன்ற பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

கவஸாகி நின்ஜா 1000 பைக் இந்தியாவில் வெளியானது..!

கவாஸாகி நின்ஜா 1000 பைக்கின் சஸ்பென்ஷன் 41 மில்லிமீட்டர் கொண்ட ஃபோர்க் மற்றும் ரீபவுண்ட் டேம்பிங், ஸ்ப்ரிங் பிரீலோட் ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

கவஸாகி நின்ஜா 1000 பைக் இந்தியாவில் வெளியானது..!

முன்பக்க சக்கரத்தில் 300மிமீ அளவு கொண்ட பெடல்-டைப் ரோட்டார் மற்றும் ரேடியல்-மௌன்ட் கேலிபர் ஆகியவற்றுடன் கூடிய பிரேக்கிங் அமைப்பு உள்ளது.

அதேபோல, பின்பக்க சக்கரத்தில் 250 மிமீ கொண்ட பெட்டல்-டைப் ரோட்டார் மற்றும் சிங்கிள் பிஸ்டன் கேலிப்பர் கொண்ட பிரேக்கிங் அமைப்பு உள்ளது.

கவஸாகி நின்ஜா 1000 பைக் இந்தியாவில் வெளியானது..!

19 லிட்டர் கொள்ளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கொண்ட இந்த பைக் 234 எடை கொண்டது. ஆட்டோமொபைல் துறையில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்திருக்கும் நின்ஜா 1000 பைக்கின் விலை ரூ.9,98,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கவாஸாகி வெளியிட்ட இசட் 900 பைக் மாடலில் அதிக உபகரணங்கள் இடம்பெற்றிருந்தது. அதனால் அந்த பைக் ரூ. 7,68,000 மதிப்பை பெற்றது. இதுவே அந்த பைக் இந்தியாவில் விற்பனை ஆகாமல் போனதற்கு பின்னிடைவானது.

கவஸாகி நின்ஜா 1000 பைக் இந்தியாவில் வெளியானது..!

தற்போது சந்தை போட்டியை சமாளிக்கும் விதமாக மோட்டார் சைக்கிள்களில் கூடுதல் உபகரணங்கள் இன்றி இந்த பிஎஸ்.4 நின்ஜா 1000 பைக் வெளியிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையில் கவாஸாகி நின்ஜா 1000 பைக், டிரையம்ப் ஸ்டீர்ட் டிரிப்பிள் மற்றும் டுகாட்டி மான்ஸ்டர் 797 மாடல்களுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கியுள்ளது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2017 Kawasaki Ninja 1000 Launched In India. Click for its Specifications, Mileage, Price and More...
Story first published: Saturday, July 8, 2017, 13:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X