இந்தியா வரும் புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

Written By:

சில ஆண்டுகளுக்கு முன்புவரை 250சிசி மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் பிரிமியம் பைக் தயாரிப்பு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால், தற்போது இந்த மார்க்கெட்டில் பட்ஜெட் பைக் தயாரிப்பு நிறுவனங்களும் களமிறங்கியதால், பிரிமியம் பைக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நெருக்கடியும், அதிக சந்தைப் போட்டியும் ஏற்பட்டுள்ளது.

இந்தியா வரும் புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் அறிமுகம்!

இதனை மனதில் வைத்து கவாஸாகி நிறுவனம் தனது குறைவான விலை கொண்ட பைக் மாடல்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்து வருகிறது.

2008ம் ஆண்டு புதிய நின்ஜா 250ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்கை கவாஸாகி அறிமுகம் செய்தது. அந்த ரகத்தில் பல புதிய மாடல்கள் வந்ததால், அதற்கு பதிலாக 2012ம் ஆண்டு 300சிசி நின்ஜா மாடலை அறிமுகம் செய்தது.

இந்தியா வரும் புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் அறிமுகம்!

இந்த வர்த்தக யுக்தியின் அடிப்படையில் தற்போது இருக்கும் நின்ஜா 300 ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கு மாற்றாக, புதிய 400சிசி மாடலை களமிறக்க உள்ளது.

இந்தியா வரும் புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் அறிமுகம்!

அண்மையில் டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் பார்வைக்கு கொண்டு வரப்பட்ட, இந்த புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் தற்போது இத்தாலியின் மிலன் நகரில் நடந்து வரும் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடலின் சிறப்புகளை தொடர்ந்து பார்க்கலாம்.

Recommended Video - Watch Now!
[Tamil] Honda CBR 650F Launched In India - DriveSpark
இந்தியா வரும் புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் அறிமுகம்!

கவாஸாகி எச்2 ஹைப்பர் பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் சேஸீயின் அடிப்படையிலான புதிய சேஸீயில் இந்த புதிய 400சிசி நின்ஜா பைக் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியா வரும் புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் அறிமுகம்!

கவாஸாகி எச்2 மற்றும் இசட்எக்ஸ்10ஆர் பைக்குகளின் டிசைன் தாத்பரியங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த புதிய பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள் பயன்படுத்தப்பட்டு இருப்பது முக்கிய சிறப்பு.

இந்தியா வரும் புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் அறிமுகம்!

பெரிய விண்ட்ஸ்கிரீன் அஅமைப்பு, மிகச் சிறப்பான இருக்கை அமைப்பு ஆகியவை மிகச் சிறப்பானது. புதிய ஸ்டிக்கர் வடிவமைப்பும் கவர்ச்சியாக இருக்கிறது.

இந்தியா வரும் புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் அறிமுகம்!

மொபைல்போன் சார்ஜ் செய்வதற்கான போர்ட், டேங்க் பேக், சீட் கவர், ஹெல்மெட் லாக், வீல் டேப் போன்ற கூடுதல் ஆக்சஸெரீகளும் வழங்கப்படுகின்றன.

இந்தியா வரும் புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் அறிமுகம்!

தற்போதைய நின்ஜா 300 மாடலைவிட 400சிசி எஞ்சினுடன் வரும் புதிய நின்ஜா பைக் எடை குறைவானது. இந்த பைக்கில் பேரலல் ட்வின் அமைப்புடைய 399சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 45 எச்பி பவரையும், 38 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்தியா வரும் புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் அறிமுகம்!

புதிய கவாஸாகி நின்ஜா பைக் அதிகபட்சமாக மணிக்கு 190கிமீ வேகத்தை எட்ட வல்லதாக இருக்கும். இந்த பைக் 174 கிலோ எடை கொண்டது. 14 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்தியா வரும் புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் அறிமுகம்!

இந்த புதிய நின்ஜா 400 பைக்கில் இருக்கும் 5 ஸ்போக்குகள் கொண்ட சக்கரங்களும், புதிய 41மிமீ ஃபோர்க்குகள் இலகு எடை கொண்டதாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிக உறுதியான இந்த பாகங்கள் மூலமாக மிகச்சிறப்பான கையாளுமை கிடைக்கும் என்று கவாஸாகி தெரிவித்துள்ளது.

இந்தியா வரும் புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் அறிமுகம்!

புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்தியாவில் கேடிஎம் ஆர்சி390, ஹோண்டா சிபிஆர்300ஆர் மற்றும் யமஹா ஆர்3 உள்ளிட்ட பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சி செய்திகள்!

மேலும்... #கவாஸாகி #kawasaki #eicma
English summary
Kawasaki Ninja 400 Unveiled At EICMA.
Story first published: Tuesday, November 7, 2017, 17:43 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark