புதிய வெர்சஸ் 650 பைக்கின் விலை ரூ. 6.60 லட்சம்: கவாஸாகி அறிவிப்பு

Written By:

இந்தியாவின் கவாஸாகி மோட்டார் நிறுவனம் புதிய வெர்சஸ் 650 மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நீண்ட தூரப் பயணம், ஆஃப் ரோடுகளுக்கான பயணம் என பல்வேறு தேவைகளுக்கு ஏற்றவாறு புதிய வெரிசஸ் மோட்டார் சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடைய விலை ரூ. 6.60 லட்சம்.

கவாஸாகியின் புதிய வெர்சஸ் 650 விற்பனைக்கு அறிமுகம்

கடந்த சனிக்கிழமை அன்று கவாஸாகி தனது புதிய தயாரிப்புகளான கவாஸாகி நிஞ்ஜா 650, Z650 மாடல்களுடன் வெளியான வெர்சஸ் 650 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்தது. 2015ல் முதன்முறையாக விற்பனைக்கு வந்த இந்த மாடல், தற்போது புதிய தோற்றம், திறன் மற்றும், நிறம் என பலவற்றில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

கவாஸாகியின் புதிய வெர்சஸ் 650 விற்பனைக்கு அறிமுகம்

2017 வெர்சஸ் 650 மாடலின் வடிவமைப்பு மற்றும் ஸ்டைல் 2015 வெர்சஸ் பைக் போல இருந்தாலும் தற்போது நிறத்தில் புதுமையாக கருப்பு மற்றும் பச்சை என இரண்டு வண்ணங்களைக் கொண்டுள்ளது. அதேபோல தோற்றத்திற்கு ஏற்றவாறு 2017 வெர்சஸ் மோட்டார் சைக்கிளினி வீல்களும் பச்சை மற்றும் கருப்பு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கவாஸாகியின் புதிய வெர்சஸ் 650 விற்பனைக்கு அறிமுகம்

செயல்திறனை பொறுத்த வரை 2017 வெர்சஸ் 650 மோட்டார் சைக்கிள் பழையை நிலையிலே தான் உள்ளது. ஆனால் சமீபத்தில் மத்திய அரசின் அறிவிப்பு படி பைக்கிறான 649சிசி ட்வின் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின், பி.எஸ். 4 தொழில்நுட்பத்தில் இயங்கும். இந்த எஞ்சின் 68 பி.எச்.பி பவர் மற்றும் 64 என்.எம் டார்க் திறனை வழங்கும். இந்த செயல்திறன் பைக்கிற்கு புதுமையை சேர்க்கிறது.

கவாஸாகியின் புதிய வெர்சஸ் 650 விற்பனைக்கு அறிமுகம்

6- ஸ்பீடு கியர் பாக்ஸ் 20127 வெர்சஸ் 650 மாடலில் பொருத்தப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனிற்கான திறன் பற்றி பார்த்தால், பைக்கின் முன்பகுதியில் 41மிமீ தலைகீழான வடிவில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் இடம்பெற்றுள்ளது

அதேபோல பின்பகுதியில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறிக்கொள்ளும் மோனோ ஷாக் ஆப்ஸாபர்கள் உள்ளன.

கவாஸாகியின் புதிய வெர்சஸ் 650 விற்பனைக்கு அறிமுகம்

மேலும் இனி தயாரிக்கப்படும் வண்டிகள் அனைத்தும் ஆபத்துக்காலத்தில் தானாக இயங்கும் பிரேக்கிங் அமைப்புகளுடன் தான் தயாரிக்கப்பட வேண்டும் என நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் புதிய விதிகளின்படி, வெர்சஸ் 650 பைக்கில் ஏ.பி.எஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

கவாஸாகியின் புதிய வெர்சஸ் 650 விற்பனைக்கு அறிமுகம்

தொடர்ந்து இந்தியாவில் மட்டுமே தயாரிக்கபட திட்டமிடப்பட்டுள்ளர் வெர்சஸ் 650 மோட்டார் சைக்கிள், பெனெல்லி டி.என்.டி 600 ஜி.டி மற்றும் டிரையம்ப் நிறுவனத்தின் டைகர் 800 ஆகிய பைக்குகளுக்கு இந்திய சந்தையில் மிக கடினமான போட்டியை உருவாக்கவுள்ளது.

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
The 2017 Kawasaki Versys 650 launched in India. The new Versys 650 receives new paint scheme as well as gear position indicator.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark