புதிய கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ்-300 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

கவாஸாகி நிறுவனத்தின் புதிய 300சிசி அட்வென்ச்சர் டூரர் ரக பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ்-300 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

கவாஸாகி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் பல புதிய பைக் மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வருகிறது. போட்டியாளர்களுக்கு இடம் கொடுக்காமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதமான தேர்வுகளும் இருக்கும் வகையில், பிரிமியம் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது.

புதிய கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ்-300 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

அந்த வகையில், கவாஸாகி வெர்சிஸ் - எக்ஸ்300 என்ற புத்தம் புதிய அட்வென்ச்சர் டூரர் ரக பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ரூ.4.60 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ்-300 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ்-300 பைக் மாடல் இசட்300 பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பைக். இந்த பைக்கில் 296சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பேரலல் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 38.4 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

புதிய கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ்-300 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

கவாஸாகி நின்ஜா 300 பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கும் அதே எஞ்சின்தான் இது. என்றாலும், இந்த எஞ்சின் நடுத்தர மற்றும் உயர்நிலைகளில் மிக சிறப்பான பவர் டெலிவிரியையும், சிறப்பான டார்க் திறனையும் வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
[Tamil] Honda CBR 650F Launched In India - DriveSpark
புதிய கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ்-300 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் 41மிமீ டெலிஸ்கோப்பிக் போர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 290மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கிறது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது.

புதிய கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ்-300 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கின் முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில், 17 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

புதிய கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ்-300 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் இருக்கும் விசேஷ வெப்ப வெளியேற்றும் தொழில்நுட்பம், ஓட்டுபவருக்கு அதிக சூடு தாக்காமல் இருக்கும். கோடை காலத்தில் ஓட்டும்போதுகூட வெப்ப பாதிப்பு இருக்காது என்கிறது கவாஸாகி.

புதிய கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ்-300 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ்-300 பைக் முக்கிய உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, சகன் பகுதியில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள கவாஸாகி டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டு விட்டது.

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
India Kawasaki Motors has launched its entry-level adventure motorcycle, the Versys-X 300 in the country. The Versys-X 300 is priced at Rs 4.60 lakh ex-showroom (Delhi).
Story first published: Monday, November 27, 2017, 17:01 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark