இந்தியாவில் கவாஸாகியின் முதல் க்ரூஸர் ரக வல்கன் எஸ் பைக் ரூ. 5. 44 லட்சம் விலையில் அறிமுகம்..!!

Written By:

இந்தியாவில் கவாஸாகி நிறுவனம் தனது புதிய வல்கன் எஸ் 650 மோட்டார் சைக்கிளை ரூ. 5.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

கவாஸாகி வல்கான் எஸ் பைக் ரூ. 5.44 லட்சம் விலையில் அறிமுகம்..!!

மிக எளிமையாக இதற்கான வெளியீட்டு விழா நடந்தது. எனினும், வல்கன் எஸ் க்ரூஸர் பைக் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளது.

கவாஸாகி வல்கன் எஸ் பைக் ரூ. 5.44 லட்சம் விலையில் அறிமுகம்..!!

ஃபிளாட் இபானி நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வல்கன் எஸ் பைக்கின் முன்பதிவு தற்போது தொடங்கியிருப்பதாக கவாஸாகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கவாஸாகி வல்கன் எஸ் பைக் ரூ. 5.44 லட்சம் விலையில் அறிமுகம்..!!

இந்தியாவில் க்ரூஸர் மாடலில் கவாஸாகி வெளியிடும் முதல் பைக் வல்கன் எஸ் 650 என்பது குறிப்பிடத்தக்கது. பேரலல்-ட்வின் 649சிசி திறன் பெற்ற பைக்கின் எஞ்சின் லிக்விடு கூல்டு தொழில்நுட்பத்தை பெற்றுள்ளது.

கவாஸாகி வல்கன் எஸ் பைக் ரூ. 5.44 லட்சம் விலையில் அறிமுகம்..!!

6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ள இந்த எஞ்சின் அதிகப்பட்சமாக 60 பிஎச்பி பவர் மற்றும் 63 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

Trending On Drivespark:

இந்தியாவின் டாப்- 5 சொகுசு ரயில்கள்... மயக்கம் போட வைக்கும் கட்டணம்!!

மைக்கேல் ஜாக்ஸன் நடனமாடி போக்குவரத்தை ஒழுங்கப்படுத்தும் அசத்தல் காவலர்...!! வாவ்.......!!

கவாஸாகி வல்கன் எஸ் பைக் ரூ. 5.44 லட்சம் விலையில் அறிமுகம்..!!

உயர் இழுவிசையை கொண்ட எஃகு சட்டகத்தால் வல்கான் எஸ் 650 பைக்கை கவாஸாகி தயாரித்துள்ளது.

235 கிலோ எடைக்கொண்ட இந்த பைக், க்ரூஸர் ரக மாடலில் சிறப்பான செயல்திறனை வழங்கும் திறனுடன் உள்ளது.

கவாஸாகி வல்கன் எஸ் பைக் ரூ. 5.44 லட்சம் விலையில் அறிமுகம்..!!

கொஞ்சம் கீழறங்கிய நிலைக்கொண்ட இந்த பைக்கின் அலாய் சக்கரங்கள் மற்றும் பின்பகுதி சக்கரத்தில் உள்ள ஆஃப்-செட் மோனோ ஷார் அப்ஸர்பர் போன்ற கட்டமைப்புகள் வல்கான் எஸ் பைக்கிற்கு ஸ்போர்ட் தரத்தை வழங்குகிறது.

கவாஸாகி வல்கன் எஸ் பைக் ரூ. 5.44 லட்சம் விலையில் அறிமுகம்..!!

எல்லா வித உயரங்களிலும் இருப்பவர்களுக்கு ஏதுவாக வல்கான் எஸ் பைக்கை கவாஸாகி தயாரித்துள்ளது. இதற்காக 'எர்கோ ஃபிட்' என்ற அம்சம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கவாஸாகி வல்கன் எஸ் பைக் ரூ. 5.44 லட்சம் விலையில் அறிமுகம்..!!

எர்கோ ஃபிட் மூலம் ரைடரின் தேவைகளுக்கு ஏற்ப பைக்கை சரிசெய்யவும், கால்வைக்கும் பகுதியை சரியாக பொருத்தவும் மற்றும் கையாளவும் மாற்றியமைக்க முடியும்.

கவாஸாகி வல்கன் எஸ் பைக் ரூ. 5.44 லட்சம் விலையில் அறிமுகம்..!!

வல்கான் எஸ் 650 பைக்கின் முன்சக்கரத்தில் 300 மிமீ அளவுக்கொண்ட டிஸ்க் பிரேக் உள்ளது. அதேபோல, பின்பகுதியில் 250 மிமீ அளவில் ஏபிஎஸ் உடன் கூடிய பிரேக் இடம்பெற்றுள்ளன.

கவாஸாகி வல்கன் எஸ் பைக் ரூ. 5.44 லட்சம் விலையில் அறிமுகம்..!!

தொலைதூர பயணங்களுக்கு ஏற்றவாறு 14 லிட்டர் எரிவாயுவை கொள்ளவு செய்யும் டேங்குடன் வல்கன் எஸ் 650 பைக்கை கவாஸாகி தயாரித்துள்ளது.

Trending On Drivespark:

மின்சார வாகன தயாரிப்பிலிருந்து பின்வாங்கிய டொயோட்டா... காரணம் இதுதான்...!!

இந்தியாவில் பிரையோ மாடலை பின்பற்றி மின்சார கார் வெளியிடும் ஹோண்டா நிறுவனம் ..!!

கவாஸாகி வல்கன் எஸ் பைக் ரூ. 5.44 லட்சம் விலையில் அறிமுகம்..!!

இதற்கான வெளியீட்டு விழாவில் பேசிய கவாஸாகி மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் யுக்டக்கா யமஷித்தா,

"ஸ்போர்ட், டூரர், நேக்கிடு, ஆஃப்-ரோடு மாடல் பைக்குகளுக்கு பிறகு சரியான நேரத்தில் கவாஸாகி க்ரூஸர் ரக பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது" என்று கூறினார்.

கவாஸாகி வல்கன் எஸ் பைக் ரூ. 5.44 லட்சம் விலையில் அறிமுகம்..!!

2018ம் ஆண்டிற்கான முதல் கணக்கை கவாஸாகி, வல்கன் எஸ் 650 க்ரூஸர் மாடல் பைக் அறிமுகத்துடன் தொடங்கியுள்ளதாகவும் யுக்டக்கா யமஷித்தா தெரிவித்தார்.

கவாஸாகி வல்கன் எஸ் பைக் ரூ. 5.44 லட்சம் விலையில் அறிமுகம்..!!

செயல்திறன், வடிவமைப்பு என்று எல்லாவித செயல்பாடுகளிலும் கவனமீர்க்கும் கவாஸாகி வல்கன் எஸ் பைக், ஹார்லி-டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மாடலுக்கு சரிநிகர் போட்டியாக உள்ளது.

கவாஸாகி வல்கன் எஸ் பைக் ரூ. 5.44 லட்சம் விலையில் அறிமுகம்..!!

மேலும் ராயல் என்ஃபீல்டு அடுத்து வெளியிடவுள்ள இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்ட்டல் ஜிடி 650 மாடல்களுக்கு போட்டியாகவும் இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது.

கவாஸாகி வல்கன் எஸ் பைக் ரூ. 5.44 லட்சம் விலையில் அறிமுகம்..!!

சிகேடி ரூட் கீழ் இந்தியாவில் களமிறக்கப்படும் வல்கான் எஸ் பைக், விலை மற்றும் செயல்திறனில் மற்ற க்ரூஸர் ரக பைக்குகளுக்கு கடின போட்டியை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Read in Tamil: Kawasaki Vulcan S 650 Launched In India; Priced At Rs 5.44 Lakh. Click for Details...
Story first published: Saturday, December 30, 2017, 16:11 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark