புதிய கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்.. முழு தகவல்கள்..!

Written By:

கவாஸாகி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய இசட்1000 மற்றும் இசட்1000 ஆர் மாடல் சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

புதிய கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்..!

கவாஸாகி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய இசட்1000 மற்றும் இசட்1000 ஆர் மாடல் சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

புதிய கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்..!

புதிதாக அறிமுகமாகியுள்ள இந்த பைக்குகளில் சிறந்த பவர் டெலிவரியை அளிக்கும் வகையில் இதன் இஞ்சின் கண்ட்ரோல் யூனிட் மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்..!

இந்த பைக்குகளில் இந்தியாவின் பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு தரத்துக்கு இணையாக ஐரோப்பாவில் நடைமுறையில் உள்ள யூரோ-4 தர இஞ்சின் உள்ளது.

புதிய கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்..!

இந்த இஞ்சின் அதிக மாசுவை வெளிப்படுத்தாத சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்காத மாசு உமிழ்வை கொண்டிருக்கும் என்பது சிறப்பாகும்.

புதிய கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்..!

இந்த பைக்குகளின் சஸ்பென்ஷன் அமைப்பு சிறந்த முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்..!

அதிக கரடு முரடான சாலைகளில் பயணிக்கத்தக்க வகையில் இதில் சிறப்பு செட்டிங் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்..!

இதனை பயன்படுத்தும் போது கரடுமுரடான சாலைகளிலும் சுகமான பயணத்தை சாத்தியப்படுத்துகிறது. முந்தைய மாடலைக் காட்டிலும் இதில் சஸ்பென்ஷன் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்..!

இதே போல புதிய கவாஸாகி இசட்1000 மற்றும் இசட்1000 ஆர் பைக்குகளின் பின்புற பிரேக் பேட் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முன்பைக் காட்டிலும் பிரேக்கை சிறந்த முறையில் கையாள முடிகிறது.

புதிய கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்..!

5 வகையில் மாற்றியமைக்கும் கிளட்ச் லீவர், எந்த கியரில் பைக் பயணிக்கிறது என்பதைக் காட்டும் கியர் பொஸிஷன் இண்டிகேட்டர் மற்றும் புதிய ஷிஃப்ட் அப் இண்டிகேட்டர் ஆகியவை இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்..!

பைக்கின் வேகத்தை பொருத்து அடுத்த கியருக்கு மாற்வதில் டிரைவருக்கு இந்த ஷிஃப்ட் அப் இண்டிகேட்டர் உதவுகிறது.

புதிய கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்..!

மேம்படுத்தப்பட்ட கவாஸாகி இசட்1000 மற்றும் இசட்1000 ஆர் பைக்குகளில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1,043சிசி இஞ்சின் உள்ளது.

புதிய கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்..!

இந்த இஞ்சின் அதிகபட்சமாக 10,000 ஆர்பிஎம்-ல் 140 பிஹச்பி ஆற்றலையும், 7,300 ஆர்பிஎம்-ல் 111 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

புதிய கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்..!

2017 கவாஸாகி இசட்1000 பைக் ரூ.14.49 லட்சம் என்ற விலையிலும், கவாஸாகி இசட்1000ஆர் பைக் ரூ. 15.49 லட்சம் என்ற விலையிலும் கிடைக்கிறது.(டெல்லி எக்ஸ்ஷோரூம் அடிப்படையில்)

புதிய கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்..!

புதிய கவாஸாகி இசட்1000 பைக் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் மற்றும் கோல்டர் பிளேஸ்டு கிரீண் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

புதிய கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்..!

இதே போல கவாஸாகி இசட்1000ஆர் பைக் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் மற்றும் மெடாலிக் கிராஃபைட் கிரே ஆகிய இரண்டு வண்ணங்களிலும் கிடைக்கிறது.

புதிய கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்..!

இந்தியாவில் விற்பனையில் உள்ள சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 சூப்பர் பைக்குக்கு போட்டியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Read in Tamil about Kawasaki z1000, z1000r super bikes launched in india. price, mileage, specs, images and more
Story first published: Saturday, April 22, 2017, 15:18 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos