கவாஸாகியின் புதிய Z650 இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம்!

கவாஸாகி நிறுவனம் இன்று தனது மூன்று புதிய மோட்டார் சைக்கிள்களை வெளியிட்டுள்ளது, அதில் Z650 மாடல் பைக் பற்றி இங்கே பார்க்கலாம்.

By Azhagar

இந்தியன் கவாஸாகி மோட்டார் நிறுவனம் Z650 என்ற நடுத்தர எடைக் கொண்ட ரகத்தில் புதிய மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

புத்தம் புதுப்பொலிவுடன் பவர்ஃபுல்லான டெலிவிரி வழங்கும் திறனில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக் ரூ.5.19 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இன்று வெளியான கவாஸாகி Z650 பைக்கின் விலை என்ன தெரியுமா?

கவாஸாகி ஸ்டீர்ஃபைட்டர் Z650 பைக்குடன், நின்ஜா 300 மற்றும் நின்ஜா 650 மோட்டார் சைக்கிள்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

கவாஸாகி Z650 மோட்டார் சைக்கிளில் உற்றுநோக்க வேண்டிய மாற்றம் என்றால், கவாஸாகி நிறுவனத்தின் நேக்கட் ஸ்டைலில் Z சீரிஸில் வெளியான புதிய மாடலாகவும் Z650 பைக் உள்ளது.

இன்று வெளியான கவாஸாகி Z650 பைக்கின் விலை என்ன தெரியுமா?

கவாஸாகியின் மற்றொரு தயாரிப்பான சுகோமி மோட்டார் சைக்கிளின் வடிவம் கொண்டு Z650 பைக் தயாரிக்கப்பட்டுள்ளது.

6-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ள Z650 பைக்கில், மத்திய அரசின் அறிவிப்பிற்கு ஏற்றவாறு சுற்றுச்சுழலை பாதிக்காத பி.எஸ்.4 தொழில்நுட்பத்தில் இயங்கும் முறையில் எஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான கவாஸாகி Z650 பைக்கின் விலை என்ன தெரியுமா?

Z650 பைக், 649சிசி-ல் இணைந்து செயல்படும் பேரலல் ட்வின் எஞ்சினைக் கொண்டுள்ளது. இது 67 பி.எச்.பி பவர் மற்றும் 65.7 டார்க் திறனை வழங்கும். வாடிக்கையாளர்களுக்கு இதை விட குறைந்த அளவிலான செயல்திறனில் எஞ்சின் பயன்பாடும் வேண்டுமென்றாலும் அதற்கு ஏற்றவாறு, Z650 பைக் தயாரிக்கப்படும் என கவாஸாகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று வெளியான கவாஸாகி Z650 பைக்கின் விலை என்ன தெரியுமா?

டெலஸ்கோபிக்கல் ஃபோர்க்ஸ் உள்ள Z650 பைக்கின் சஸ்பென்ஷன் திறன் வண்டியை ஓட்டும்போது நேரடியாகவே உணர முடியும்.

தானாக இயங்கும் திறன் கொண்ட ஏ.பி.எஸ் பிரேக்குகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள Z650 மோட்டார் சைக்கிள், பெனல்லி டி.என்.டி 600ஐ ஏ.பி.எஸ், ஹோண்டா சி.பி.ஆர் 650எஃப் ஆகிய மோட்டார் சைக்கிளுக்கு போட்டியாக இந்திய சந்தியில் இன்று களம் கண்டுள்ளது.

Most Read Articles
English summary
The 2017 Kawasaki Z650 launched in India along with three other models. Z650 replaces the ER-6n streetfighter and costs Rs 25,000 more than its predecessor
Story first published: Saturday, March 25, 2017, 18:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X