இந்தியாவில் புதிய கவாஸாகி இசட்எக்ஸ்-10ஆர் சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

இந்தியாவின் இருசக்கர வாகன மார்க்கெட் மிக வலுவானதாகவும், மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பை கொண்டதாகவும் இருக்கிறது. இதன்காரணமாக, உலகின் பல முன்னணி இருசக்கர வாகன நிறுவங்கள் இந்தியாவில் சிறிய வகை பைக் மட்டுமின்றி, அதிசக்திவாய்ந்த சூப்பர் பைக்குகளையும் போட்டி போட்டு களமிறக்கி வருகின்றன. இந்த வகையில் கவாஸாகி நிறுவனத்தின் புதிய இசட்எக்ஸ்-10 ஆர்ஆர் பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கவாஸாகி சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

கடந்த 2016ஆம் ஆண்டு இண்டர்மோட் வாகன கண்காட்சியில் முதல் முறையாக கவாஸாகி இசட்எக்ஸ்-10 ஆர்ஆர் பைக் அறிமுகமானது. சிங்கில் சீட் பைக்கான இது ஒரு லிமிடட் எடிஷன் பைக்காகும். உலகில் மொத்தமே 500 பைக்குகள் தான் தயாரிக்கப்பட்டுள்ளன.

புதிய கவாஸாகி சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

இந்த சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 998சிசி லிக்யுட் கூல்டு இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 200 பிஹச்பி ஆற்றலையும், 113.5 என்எம் டார்க்கையும் வெளிப்பௌட்த்தும் திறன் கொண்டதாகும். இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

புதிய கவாஸாகி சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

இந்த பைக்கில் சிலிண்டர் ஹெட்கள் மாடிஃபைடு செய்யப்பட்டுள்ளது. தனியாக ரேஸ் கிட்-டும் ஆப்ஷன்லாக கிடைக்கிறது. கிளட்ச் இல்லாமலே கியர் மாற்றும் குயிக்கர் ஷிப்டர் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கியர் மாற்றுவது எளிதாக அமைந்துள்ளது.

புதிய கவாஸாகி சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

இதன் வீல்கள் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, இது பைக் ஹேண்ட்லிங்கை எளிதாக்குகிறது. இதில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது.

புதிய கவாஸாகி சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

ஸ்பெஷல் விண்டர் எடிஷன் என்ற பெயரில் மொத்தமே 500 பைக்குகள் தான் தயாரிக்கப்பட்டுள்ளன. இது மேட் பிளாக் என்ற ஒரே கருப்பு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கிறது.

புதிய கவாஸாகி சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

இது 82.3 இஞ்ச் நீளம், 29.1 இஞ்ச் அகலம், 45.1 இஞ்ச் உயரமும் கொண்ட இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 5.7 இஞ்சாக உள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 17 லிட்டர்கள் ஆகும்.

புதிய கவாஸாகி சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

முற்றிலும் ரேஸ் பைக்காக உருவாக்கப்பட்டுள்ள கவாஸாகி இசட்எக்ஸ்-10 ஆர்ஆர் பைக்கின் விலை ரூ.21.90 லட்சமாகும். ( புனே எக்ஸ் ஷோரூம் விலை).

டுகாட்டி 1299 சூப்பர்லெக்ரா பைக்கின் படங்கள்: 

English summary
The Kawasaki ZX-10RR comes equipped with ABS and Bosch inertial measurement unit (IMU) that gauges data across six axes of movement.
Story first published: Monday, March 13, 2017, 18:59 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark