நார்டன் சூப்பர் பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் கைனெட்டிக்!

Written By:

இங்கிலாந்தை சேர்ந்த நார்டன் நிறுவனத்தின் சூப்பர் பைக்குகளை இந்தியாவில் களமிறக்க உள்ளது கைனெட்டிக் நிறுவனம். கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
 நார்டன் சூப்பர் பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் கைனெட்டிக்!

கைனெட்டிக் ஹோண்டா ஸ்கூட்டர் மூலமாக இருசக்கர வாகன மார்க்கெட்டில் தனித்த அடையாளத்தை பெற்ற நிறுவனம் கைனெட்டிக். ஆனால், கால மாற்றத்தில் சந்தைப் போட்டியால் கைனெட்டிக் புகழ் மங்கியது. இந்த நிலையில், தற்போது தனது வர்த்தகத்தை வெளிநாட்டு பைக் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து புதுப்பித்து கொள்ளும் முயற்சிகளில் கைனெட்டிக் ஈடுபட்டு இருக்கிறது.

 நார்டன் சூப்பர் பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் கைனெட்டிக்!

அதன்படி, சூப்பர் பைக் தயாரிப்பில் நூறாண்டு பாரம்பரியத்துடன் விளங்கும் இங்கிலாந்தை சேர்ந்த நார்டன் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது கைனெட்டிக். இத்தாலியின் மிலன் நகரில் நடந்து வரும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், இரு நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 நார்டன் சூப்பர் பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் கைனெட்டிக்!

நார்டன் நிறுவனத்தின் சூப்பர் பைக்குகளை இந்தியா மட்டுமின்றி, வங்கதேசம், பூடான் மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் விற்பனை செய்வதற்கும் இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது. இதன்படி, நார்டன் நிறுவனத்தின் சூப்பர் பைக்குகளை இந்தியாவில் அசெம்பிள் செய்து, விற்பனை செய்வதற்கான உரிமையை கைனெட்டிக் பெற்றிருக்கிறது.

 நார்டன் சூப்பர் பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் கைனெட்டிக்!

அகமதுநகரில் உள்ள கைனெட்டிக் நிறுவனத்தின் ஆலையில், நார்டன் நிறுவனத்தின் சூப்பர் பைக்குகள் அசெம்பிள் செய்யப்பட உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் சூப்பர் பைக்குகள் இந்தியா மட்டுமின்றி, பிற ஆசிய நாடுகளுக்கும் விற்பனைக்கு செல்ல இருக்கின்றன.

 நார்டன் சூப்பர் பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் கைனெட்டிக்!

கைனெட்டிக்- நார்டன் கூட்டணியின் திட்டப்படி, அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் நார்டன் சூப்பர் பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. முதல்கட்டமாக நார்டன் நிறுவனத்தின் டாமினேட்டர் மற்றும் கமாண்டோ ஆகிய இரண்டு பைக் மாடல்களும் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.

 நார்டன் சூப்பர் பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் கைனெட்டிக்!

இரண்டு பைக்குகளிலும் 961சிசி ஏர்/ஆயில் கூல்டு சிஸ்டம் கொண்ட பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 80 பிஎஸ் பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video
[Tamil] Honda CBR 650F Launched In India - DriveSpark
 நார்டன் சூப்பர் பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் கைனெட்டிக்!

வெளிநாடுகளில் டாமினேட்டர் பைக் ரூ.19 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. கமாண்டோ மாடலானது கஃபே ரேஸர் மற்றும் ஸ்போர்ட் என இரண்டு மாடல்களில் விற்கப்படுகிறது. இந்த பைக் ரூ.13 லட்சம் விலை மதிப்பு கொண்டதாக இருக்கிறது.

 நார்டன் சூப்பர் பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் கைனெட்டிக்!

கடந்த 2015ம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த எம்வி அகுஸ்ட்டா நிறுவனத்தின் சூப்பர் பைக்குகளை விற்பனை செய்வதற்கு கைனெட்டிக் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்த நிலையில், தற்போது நார்டன் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.

English summary
Kinetic Group has announced a joint venture with Norton Motorcycles to sell the British manufacturer's bikes in India as well as other international markets such as Bangladesh, Bhutan, and Indonesia.
Please Wait while comments are loading...

Latest Photos