மேம்படுத்தப்பட்ட கேடிஎம் 390 ட்யூக் பைக் விற்பனை நாளை தொடக்கம்?

Written By: Staff

கேடிஎம் ட்யூக் வரிசை மாடல்கள் இந்தியாவில் பெரும் வெற்றியை பெற்று உள்ளது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற கூடுதல் அம்சங்களுடன் கேடிஎம் ட்யூக் 390 பைக் இத்தாலியில், கடந்த நவம்பரில் நடந்த மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் அறிமுகமானது.

 புதிய கேடிஎம் 390 ட்யூக் பைக் விற்பனை நாளை தொடக்கம்?

புதிய கேடிஎம் ஆர்சி 390 பைக்கை போன்றே புதிய கேடிஎம் ட்யூக்390 பைக்கின் வெளிப்புற ஸ்டைலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய எல்ஈடி முகப்பு விளக்கு, கூர்மையான ஃபினிஷிங்குடன் மிடுக்கான தோற்றம் கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது ட்யூக் பிரியர்களை கவரும்.

 புதிய கேடிஎம் 390 ட்யூக் பைக் விற்பனை நாளை தொடக்கம்?

6 ஸ்பீடு கியர், 390சிசி சிங்கிள் இஞ்சின் கொண்ட புதிய ட்யூக் 390 பைக், 44 பிஹச்பி பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனால் இது ஒரு சூப்பர் பைக்காக இனி இந்திய சாலைகளை ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கலாம்.

 புதிய கேடிஎம் 390 ட்யூக் பைக் விற்பனை நாளை தொடக்கம்?

மியூசிக் பிளேயர், மொபைலில் கால் செய்பவர் யார் என்பதனை பைக் ஸ்கிரீனில் கானும் வசதி, புளூடூத் மூலம் கால்கள் பேசும் வசதிகளை உள்ளடக்கிய அதிநவீன கலர் டிஃப்டி கன்சோல் இதில் உள்ளது, இதனால் காரில் இருக்கும் வசதிகள் இனி புதிய ட்யூக் 390ல் கிடைக்கும்.

 புதிய கேடிஎம் 390 ட்யூக் பைக் விற்பனை நாளை தொடக்கம்?

மேலும், 13.4 லிட்டர் எரிபொருள் கொள்ளளவுடன், புதிய வகை ப்ரெம்போ பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட ட்யூக் 390 அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஏற்கெனவே அறிமுகமாகியுள்ளது, இந்தியாவில் ரூ.2.25 லட்சம் என்ற விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 புதிய கேடிஎம் 390 ட்யூக் பைக் விற்பனை நாளை தொடக்கம்?

புதிய டியூக்200 பைக்குகளுக்கான புக்கிங்கும் தொடங்கி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன, சில டீலர்கள் ரூ. 20,000 முன்பணம் பெற்று முன்பதிவு செய்து வருவதாகவும், வரும் ஏப்ரல் முதல் ட்யூக் 390 பைக்குகள் டெலிவரி செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஹோண்டா சிட்டி காரின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

புதிய ஹோண்டா சிட்டி காரின் அறிமுக விழாவில் எடுக்கப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Some KTM dealerships have already started accepting bookings for the 2017 models for a token amount of Rs 20,000.
Please Wait while comments are loading...

Latest Photos