கேடிஎம் ட்யூக் 390, 200 மாடல் பைக் விற்பனை பிப்ரவரி 23ல் தொடக்கம்!

Written By:

கடந்த 2012 ஆம் ஆண்டு ட்யூக் 200 மாடல் மூலமாக இந்திய இருசக்கர வாகன சந்தையில் நுழைந்தது ஆஸ்திரிய நிறுவனமான கேடிஎம், அதன் கவர்ந்திழுக்கும் தோற்றத்தாலும், அதிவேக செயல்திறனாலும் விரைவிலேயே இந்தியர்களின் அபிமானத்தையும் பெற்றுவிட்டது ட்யூக்.

கேடிஎம் ட்யூக் 200, 390 பைக் விற்பனை பிப்.23ல் தொடக்கம்!

ட்யூக் 200 மாடலின் வெற்றியைத் தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு அதன் அடுத்த மாடலான ட்யூக் 390, இந்தியாவில் அறிமுகமானது. இதன் செக்மெண்ட்டில் அதிகபட்ச ஆற்றலை வெளிப்படுத்துவதோடு , இருபக்க ஏபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட பைக்காக ட்யூக் 390 விளங்கியது.

கேடிஎம் ட்யூக் 200, 390 பைக் விற்பனை பிப்.23ல் தொடக்கம்!

இந்நிலையில், கூடுதல் அம்சங்களுடன் மெருகேற்றப்பட்ட கேடிஎம் ட்யூக் 390 பைக், கடந்த நவம்பரில் இத்தாலியில் நடந்த மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் அறிமுகமானது.

கேடிஎம் ட்யூக் 200, 390 பைக் விற்பனை பிப்.23ல் தொடக்கம்!

புதிய 2017 கேடிஎம் ட்யூக் 390 மாடலில்,வெளிப்புற ஸ்டைல் மாற்றம் கண்டுள்ளது. எல்ஈடி முகப்பு விளக்கு, மொபைலில் கால் செய்பவர் யார் என்பதனை பைக் ஸ்கிரீனில் கானும் வசதி, புளூடூத் மூலம் கால்கள் பேசும் வசதிகளை உள்ளடக்கிய அதிநவீன கலர் டிஃப்டி கன்சோல், மியூசிக் பிளேயர் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

கேடிஎம் ட்யூக் 200, 390 பைக் விற்பனை பிப்.23ல் தொடக்கம்!

பெரிய பெட்ரோல் டேங்க், ஸ்லிப்பர் கிளட்ச் தொழில்நுட்பம், விலை உயர்ந்த பைக் மாடல்களில் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த Ride By Wire என்ற தொழில்நுட்பம் இந்த மாடலில் உள்ளது, மேலும் புதிய ட்யூக்390, பிஎஸ்4 வாகன புகை சான்றும் பெற்றுள்ளது.

கேடிஎம் ட்யூக் 200, 390 பைக் விற்பனை பிப்.23ல் தொடக்கம்!

இந்த பைக்கில், 13.4 லிட்டர் எரிபொருள் கொள்ளளவுடன், புதிய வகை ப்ரெம்போ பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது, ட்யூக் 390, 6 ஸ்பீடு கியர், 390சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் கொண்டதாகும், இது அதிகபட்சமாக 44 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேடிஎம் ட்யூக் 200, 390 பைக் விற்பனை பிப்.23ல் தொடக்கம்!

புதிய ட்யூக் 390, 200 பைக் மாடல்களுக்கு, ரூ. 20,000 வரை முன்பணம் பெற்று, சில டீலர்கள் ஏற்கெனவே புக்கிங் தொடங்கியதை முன்னதாகவே குறிப்பிட்டிருந்தோம், ஆதலால் இந்த மாத இறுதி முதல் புதிய ட்யூக் மாடல் பைக்குகளின் டெலிவரி கிடைக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017 புதிய கேடிஎம் 390 பைக் படங்களின் தொகுப்பு:

English summary
Austrian manufacturer KTM introduced the 2017 390 Duke and 200 Duke at the EICMA show in November 2016. Emerging reports on the internet indicate that KTM is ready to launch the new 390 Duke and 200 Duke on February 23, 2017.
Please Wait while comments are loading...

Latest Photos