புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்: படங்களுடன், விபரம்!

இத்தாலியில் நடந்து வரும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் புதிய அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளை கேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. படங்களுடன் தகவல்களை காணலாம்.

By Saravana Rajan

இத்தாலியின் மிலன் நகரில் நடந்து வரும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் பல புத்தம் புதிய மோட்டார்சைக்கிள்கள் அறிமுகமாகி வருகின்றன. அதில், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாடல்களில் ஒன்றாக, கேடிஎம் 790 அட்வென்ச்சர் கருதப்படுகிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் வெளியீடு!

கேடிஎம் 690 அட்வென்ச்சர் பைக் மாடலுக்கு மாற்றாக, இந்த புதிய 790 அட்வென்ச்சர் மாடலை கேடிஎம் களமிறக்க உள்ளது. இநத் பைக் தயாரிப்பு நிலைக்கு உகந்த அனைத்து அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் வெளியீடு!

சாகசங்களுக்கு ஏற்ற பல தனித்துவ அம்சங்களை இந்த பைக் பெற்றிருக்கிறது. பிளவுபட்ட ஹெட்லைட் அமைப்பு மிரட்சியை தருவதாக இருக்கிறது. சூப்பர்ட்யூக் பைக்கில் இருப்பது போன்ற இந்த ஹெட்லைட்டுக்கு மேல் அதிக உயரமான விண்ட் ஸ்கிரீன் கண்ணாடி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் வெளியீடு!

முன்புறத்தில் ஃபென்டர் மிகவும் உயர்த்தப்பட்டிருப்பதுடன், கரடுமுரடான சாலைகளை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, அதிக நகர்வு நுட்பம் கொண்ட ஃபோர்க்குகளுடன் முன்புற சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், முகப்பு மிகவும் மிரட்டலாக இருக்கிறது.

Recommended Video

[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் வெளியீடு!

சேஸீ மற்றும் எஞ்சின் அமைப்புகள் குதிரை குளம்பு வடிவிலான கவுல் மூலமாக மூடப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டு இருப்பதும், இது உற்பத்திக்கு தயார் நிலையில் இருக்கும் மாடல் என்பதை காட்டுகிறது.

புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் வெளியீடு!

வால்பகுதியும் உயர்த்தப்பட்ட அமைப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் புதிய அக்ரபோவிக் புகைப்போக்கி அமைப்பு பின்புறம் மேல் நோக்கி இருப்பது போல டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் 21 அங்குல அடயர்களும், பின்புறத்தில் 18 அங்குல டயர்களும் உள்ளன.

புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் வெளியீடு!

முன்சக்கரத்தில் இரட்டை டிஸ்க்குகள் கொண்ட பிரேக்கும், பின்புறத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக் சிஸ்டமும் இடம்பெற்று இருக்கிறது. மொத்தத்தில் சாகச ரகத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாடலாக இருக்கும்.

புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் வெளியீடு!

மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்தான் இந்த பைக்கிலும் இடம்பெற்று இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103.5 பிஎச்பி பவரையும், 86 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் வெளியீடு!

வரும் 2019ம் ஆண்டு இந்த புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் சந்தைக்கு வர இருக்கிறது. அப்போது சந்தையில் இருக்கும் போட்டியாளர்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 790 Adventure prototype revealed. The prototype 790 Adventure previews a production bike expected to arrive at showrooms in 2019, which will replace the iconic 690 Adventure.
Story first published: Thursday, November 9, 2017, 10:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X