புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம்!

Written By:

இத்தாலியிலுள்ள மிலன் நகரில் நடந்து வரும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. படங்களுடன், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுகம்: படங்களுடன், தகவல்கள்!

கடந்த ஆண்டு மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் கேடிஎம் 790 ட்யூக் பைக் கான்செப்ட் பைக் மாடலாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அப்போதே, கேடிஎம் பிரியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுகம்: படங்களுடன், தகவல்கள்!

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ட்யூக் வரிசை பைக் மாடல்களுக்கு உரிய மிடுக்கும், முரட்டு பார்வையும் இந்த பைக்கிலும் காண முடிகிறது. எனவே, டிசைனில் நிச்சயம் பைக் பிரியர்களை வெகுவாக கவரும்.

Recommended Video - Watch Now!
[Tamil] Honda CBR 650F Launched In India - DriveSpark
புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுகம்: படங்களுடன், தகவல்கள்!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்பு கொண்ட 799சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103.5 பிஎச்பி பவரையும், 86 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுகம்: படங்களுடன், தகவல்கள்!

இந்த பைக்கின் எஞ்சின் 88மிமீ விட்டமுடைய போர் அமைப்பு கொண்டது. டபுள் ஓவர்ஹேட் கேம்ஷாஃப்ட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுகம்: படங்களுடன், தகவல்கள்!

இந்த பைக்கில் க்ரோமியம் மாலிபிடினம் மற்றும் ஸ்டீல் கலவையிலான கலப்பு உலோக ஃப்ரேம் பொருத்தப்பட்டு இருக்கிறது. 169 கிலோ எடை கொண்டது. 14 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுகம்: படங்களுடன், தகவல்கள்!

இந்த பைக்கில் முன்புறத்தில் 43மிமீ அளவுடைய டபிள்யூபி அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் டபிள்யூபி மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுகம்: படங்களுடன், தகவல்கள்!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் காலிபர்கள் காண்ட 300மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 2 பிஸ்டன் காலிபர்களுடன் கூடிய 240மிமீ டிஸ்க் பிரேக் அமைப்பும் உள்ளது.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுகம்: படங்களுடன், தகவல்கள்!

17 அங்குல அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. முன்புறத்தில் 120/70 ZR17 டயரும், பின்புறத்தில் 180/55 ZR17 டயரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுகம்: படங்களுடன், தகவல்கள்!

இந்த புதிய ட்யூக் பைக்கில் பாஷ் நிறுவனத்தின் புதிய ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சூப்பர்மோட்டோ மோடில் வைத்து இயக்கும்போது, வளைவுகளில் அதிக பாதுகாப்பை தரும் கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் நுட்பம் உள்ளது. ரேஸ் டிராக்குகளில் இயக்குவது உள்பட மூன்று டிரைவிங் மோடுகளும் உள்ளன.

இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சி செய்திகள்!

மேலும்... #கேடிஎம் #ktm #eicma
English summary
Austrian motorcycle manufacturer KTM has revealed the all-new 790 Duke at the 2017 EICMA motorcycle show in Milan, Italy.
Story first published: Tuesday, November 7, 2017, 19:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark