கேடிஎம் ட்யூக் 250 பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம்!!

Written By:

கேடிஎம் ட்யூக் வரிசை மாடல்கள் இந்தியாவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. தற்போது கேடிஎம் ட்யூக் 200 மற்றும் ட்யூக் 390 பைக் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ட்யூக் வரிசை மாடல்களுக்கு இருக்கும் வரவேற்பை தக்க வைத்துக் கொள்ளும் விதத்தில், இந்த பிராண்டில் புதிய மாடல்களை பஜாஜ் - கேடிஎம் கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

கேடிஎம் ட்யூக் 250 பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்த நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள பஜாஜ் பைக் ஆலை அருகே புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக் மாடல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதன் மூலமாக, அந்த பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவதும், விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்பும் எழுந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

கேடிஎம் ட்யூக் 250 பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

அந்த பைக்கில் சில இடங்களில் மட்டும் அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்டு சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆட்டோமொபைல் ஊடகத் துறையினரின் கண்களில் படாமல் இருப்பதற்காக அடையாளங்கள் மறைக்கப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது.

கேடிஎம் ட்யூக் 250 பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

ஆனால், அதனையும் மீறி அந்த பைக்கை படமெடுத்து பிரபல ஆட்டோமொபைல் தளம் வெளியிட்டு இருக்கிறது. சர்வதேச அளவில் விற்பனையாகும் மாடலில் மெட்ஸீலர் ஸ்போர்ட்டெக் எம்5 டயர்கள் பொருத்தப்படும் நிலையில், சோதனை ஓட்டத்தில் இருக்கும் அந்த புதிய ட்யூக் 250 பைக்கில் எம்ஆர்எஃப்- எஃப்சி1 டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. எனவே, இந்த மாடல் இந்தியாவில் அறிமுகமாவதற்கு அதிக வாய்ப்புகளை காட்டுகிறது.

கேடிஎம் ட்யூக் 250 பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கில் 31 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 248.8சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. கேடிஎம் ட்யூக் 200 பைக்கிற்கு மாற்றாக இந்த புதிய மாடலை களமிறக்கவும் வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. ஆனால், அது எந்தளவு உண்மை என்பது இப்போது கூற முடியாது.

கேடிஎம் ட்யூக் 250 பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இதனிடையே, நாளை மறுதினம் புதிய கேடிஎம் பைக் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதில், இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்பது குறித்த தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Spy Images: Motoroids

புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Spy Pics reveal the 2017 Duke 250 testing in India. What exactly are KTM planning?

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark