புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய கேடிஎம் ட்யூக் 200 மற்றும் 390 பைக்குகள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ட்யூக் வரிசையில் புத்தம் புதிய ட்யூக் 250 பைக் மாடலும் இன்று விற்பனைக்கு வந்துள்ளது.

ட்யூக் 200 பைக் மற்றும் ட்யூக் 390 பைக் இடையிலான விலையில் மிகச் சிறந்த தேர்வாக புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக் வந்துள்ளது. மும்பையில் நடந்த இதற்கான நிகழ்ச்சியிலிருந்து எமது நிருபர் புரொமித் கோஷ் வழங்கிய தகவல்களை இந்த செய்தியில் காணலாம். இந்த செய்தியில் புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் முக்கிய விபரங்களை காணலாம்.

புதிய கேடிஎம் 390 பைக் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்தாலியிலுள்ள மிலன் நகரில் நடந்த இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில்தான் இந்த புதிய கேடிஎம் ட்யூக் பைக் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பல்வேறு சிறப்பம்சங்களுடன் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக். வண்ணக் கலவை, ஸ்டிக்கரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

புதிய கேடிஎம் 390 பைக் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!!

அதிகபட்ச வேக பதிவு குறித்த தகவல், 0-60 கிமீ வேகத்தை எட்டும் நேரம் போன்றவற்றை பதிவு செய்யும் வசதியுடன், புதிய பைக்கின் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய கேடிஎம் 390 பைக் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!!

இருக்கை உயரம் 30 மிமீ அதிகரிக்கப்பட்டு 830மிமீ ஆக உள்ளது. அதேபோன்று, வண்டியின் வெற்று எடையும் 10 கிலோ அதிகரிக்கப்பட்டு 149 கிலோ எடை கொண்டதாக மாறி உள்ளது புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக். தற்போதைய மாடலில் 11 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் இருந்தது. ஆனால், புதிய மாடலில் 13.4 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

புதிய கேடிஎம் 390 பைக் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!!

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. ஏற்கனவே செயலாற்றி வரும் 373.2சிசி எஞ்சின்தான் புதிய தலைமுறை கேடிஎம் ட்யூக் 390 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 44 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய கேடிஎம் 390 பைக் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!!

புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் நிலையான ரேடியல் கேலிபர்களுடன் கூடிய 320மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் நகரும் நுட்பத்துடன் கூடிய ஒற்றை கேலிபர் கொண்ட 230மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், பாஷ் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

புதிய கேடிஎம் 390 பைக் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!!

புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக் ரூ. 2,25,730 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிய கேடிஎம் ட்யூக் 250 மற்றும் ட்யூக் 200 பைக்குகளை பற்றிய முக்கிய விபரங்களை அடுத்தடுத்து காணலாம்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
English summary
2017 KTM Duke 390 model launched in India. The much-awaited all new KTM 390 Duke has received major upgrades from design, specifications, and more.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X