புதிய கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

இந்தியாவில் கேடிஎம் ட்யூக் மற்றும் ஆர்சி வரிசை பைக் மாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. ட்யூக் வரிசை ஹிட் அடித்ததை தொடர்ந்து, ஆர்சி வரிசையில் 390 மற்றும் 200 மாடல்களை கேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்தது.

 புதிய கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், வடிவமைப்பிலும், தொழில்நுட்ப வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக் மாடல்கள் கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடந்த இன்டர்மோட் மோட்டார்சைக்கிள் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மாடல்கள் இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

 புதிய கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தநிலையில், 2017 மாடலாக வெளியிடப்பட்ட அந்த கேடிஎம் ஆர்சி 390 மற்றும் ஆர்சி200 பைக் மாடல்கள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களின் எஞ்சினும் இப்போது பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு சிறப்பம்சத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.

 புதிய கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் புதிய கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள் மற்றும் வண்ணங்களில் வந்துள்ளன. கருப்பு, வெள்ளை, மஞ்சள் வண்ணக் கலவையில் இந்த பைக்குகள் வந்துள்ளன. ஆனால், ஸ்டிக்கர் டிசைனில் வேறுபடுத்தப்பட்டுள்ளன.

 புதிய கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

கேடிஎம் ஆர்சி390 பைக்கில் இருக்கும் 373சிசி எஞ்சின் தற்போது 44 பிஎச்பி பவரையும், 36 என்எம் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

 புதிய கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

கேடிஎம் ஆர்சி200 பைக்கில் இருக்கும் 199சிசி எஞ்சின் அதிகபட்சமாக 24பிஎச்பி பவரையும், 19.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பைக்கிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

 புதிய கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கேடிஎம் ஆர்சி 390 பைக்கில் இரட்டை புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ட்ரெல்லிஸ் ஃப்ரேம், எல்இடி பைலட் விளக்குகள், பக்கவாட்டில் அமைந்த சைலென்சர் உள்ளிட்ட அம்சங்களுடன் வந்துள்ளது.

 புதிய கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

திய கேடிஎம் ஆர்சி390 பைக்கில் ரைடு - பை- ஒயர் தொழில்நுட்ப வசதி உள்ளது. சவுகரியமாக அமர்ந்து செல்லும் வகையில் இருக்கையின் வடிவமைப்பிலும் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. சற்று பெரிய சைடு மிரர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 புதிய கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கேடிஎம் ஆர்சி390 பைக்கில் இவிஏபி என்ற புதிய தொழில்நுட்ப வசதி உள்ளது. பெட்ரோல் டேங்கில் இருந்து பெட்ரோல் ஆவியாகி வெளியேறுவதை இந்த தொழில்நுட்பம் தவிர்க்கும். இதன்மூலமாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறைக்கப்படும்.

 புதிய கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் முன்புறத்தில் 43மிமீ அப்சைடு டவுன் WP ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் WP மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் 4 பிஸ்டன்களுடன் நிலையான ரேடியல் காலிபர் கொண்ட 320மிமீ டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய மாடலைவிட இந்த டிஸ்க் பிரேக் 20 மிமீ கூடுதல் விட்டமுடையது.

 புதிய கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பின்புறத்தில், ஒற்றை பிஸ்டனுடன் நகரும் நுட்பம் கொண்ட காலிபருடன் 230மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. புதிய கேடிஎம் ஆர்சி390 பைக்கில் பாஷ் நிறுவனத்தின் 9எம்பி டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

அதேநேரத்தில், புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்கில் பெரிய அளவிலான மாறுதல்கள் இல்லை. புதிய கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மட்டும் முக்கிய மாற்றாக இருக்கிறது. புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்கில் முன்புறத்தில் 43மிமீ WP ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் WP மோனோஷாக் அப்சார்பரும் உள்ளது. பழைய மாடலில் 9.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருந்த நிலையில், தற்போது 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது.

 புதிய கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கேடிஎம் ஆர்சி 390 பைக் ரூ.2.25 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், புதிய கேடிஎம் ஆர்சி 200 பைக் ரூ.1.71 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கேடிஎம் ஆர்சி 390 மற்றும் ஆர்சி200 பைக்குகளுக்கான முன்பதிவு இன்று துவங்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் டெலிவிரி துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கேடிஎம் ஆர்சி390 பைக்கின் படங்கள்!

புதிய கேடிஎம் ஆர்சி390 பைக்கின் வல்லமையை காட்டும் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
2017 KTM RC390 & RC200 launched in India. The new RC390 & RC200 launch adds a new livery and new premium features.
Story first published: Thursday, January 19, 2017, 14:51 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark